ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

உட்டாலக்கடியின் உட்டாலக்கடி

///இது எந்த ஊரு தர்க்கமோ புரியலை. ரெண்டுமே நல்லதுன்னு சமமானதுன்னு சொல்லிட்டு வந்த பார்ட்டி (கீதாசிரியர்) ) படக்குனு ஒரு அந்தர் பல்ட்டி அடிச்சு . செயலை துறப்பதை காட்டிலும் செயலை செய்வதே சிறந்ததுங்கறாரே.//
கீதையில் இரண்டு விஷயத்தின் நல்லது கேட்டதைக் கூறி அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக்க சொல்கிறது. ஆங்கிலத்தில் unique என்ற ஒரு வர்த்தையுண்டு பிரத்தேகம் எனப்பொருள்படும். இங்கே இரண்டு விஷயமும் பித்தேகமானது, சமமல்ல. கீதையின் எந்த இடத்தில் இரண்டும் சமம் என்று கூறியதாக காரணங்கள் கிடைத்தால் மேலே ஆராயலாம்

//பலனை எதிர்பார்க்காம கர்ம யோகம் செய்யறதெல்லாம் கொக்கு தலைல வெண்ணைய வச்சு பிடிக்கிற மாதிரி. //
பலனை வாங்காதே என்று கூறியதாக கற்பனை செய்து, அதற்கு புதுப் புது சாயம் பூசுறீங்க. இயற்கையா அமைகிற செயலுக்கும் செயற்கையா அமைகிற செயலுக்கும் வித்தியாசமுண்டு. ஒரு செயல் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் முழு ஈடுபாடு வேண்டும் எதையும் எதிர்பாக்காமல் இயற்கையாக செய்யும் செயல், ஏதோவொன்றை எதிர்பார்த்து அதற்காக செயற்கையாக செய்யும் செயலைவிட சிறந்ததுதானே.

//உழைத்தே அறியாத அந்த இனம் பிழைப்பதே துர்லபமாகிவிடும் என்பதால் செயலுக்கு ( கரும யோகத்துக்கு )வக்காலத்து வாங்குகிறார் கீதாசிரியர்.//
உழைக்காமல் ஜாதகம் பார்ப்பதாக மக்களை ஏமாற்றி உட்டாலக்கடி பதிவுகள் எழுதிக் கொண்டுயிருப்பவர்களுக்காகத் தான் செயலின்மையை கொண்டுவந்ததாகக் கூறுகிறீர்கள் போல

//ரெகுலர் ஸ்டடீஸுக்கும் தொலை தூர கல்விக்கும் வித்யாசமே கிடையாதுன்னு யூனிவர்சிட்டிங்க அடிச்சி விடறதை போல //
ரெகுலர்ல படிச்சவனெல்லாம் புத்திஜீவிபோலவும் தொலை தூரக் கல்வியில் படிச்சவன் எல்லாம் முட்டாள் போலவும் இடத்தை வைத்து மட்டும் கல்வியை கணிக்கமுடியாதே. அவனிடத்திலுள்ள ஆர்வம் தானே முக்கியம்

//”புலனை அடக்கிய”ங்கற வார்த்தைய பாருங்க. கீதை தலைசிறந்த மனோதத்துவ நூல்னு சவுண்டு விடறவங்க கூட இருக்காய்ங்க. புலனை அடக்குதல்ங்கறது மனோதத்துவ அடிப்படைக்கே விரோதம். மனிதனுக்கு வர்ர மனக்கோளாறுகளுக்கு முதல் காரணம் அவன் தன் மனதை அடக்கறதுதான். (அதுக்காக மனம் போன போக்குல மனிதன் போகனும்னு நான் சொல்லலே.)//
என்னங்க கடைசியில் மனம் போன போக்குல போகாதேன்னு அந்தர் பல்டி அடிக்கிறீங்க. இப்ப ஸ்மெல் பண்ணி பார்த்தா, உங்க ஜாதகம் சொன்ன பாதையில் போகணும்னு சொல்லவரீங்களா?

//புலன் களின் கிளர்ச்சியை அடக்க முடியாதுங்கறப்போ அதுக்கு சட்டம், சமூகத்துக்கு இணக்கமான வழில ஒரு வடிகாலை தேடிக்கிறதுதான் மனிதனின் மன நலத்துக்கு உத்தமமான மார்கம்.//
ஒருவனால் அடக்கமுடியதவிஷயம் எல்லாராலும் அடக்கமுடியாது என்று கேள்வி ஞானத்தை அடைத்துவிட்டீங்களா? மற்றவர் குடும்பத்தின் மீது ஏற்படும் புலன்களின் கிளர்ச்சியை அடக்காமல் சட்டம் போடச் சொல்கிறீகள் போல

//புலனடக்கம் புண்ணாக்குனு கண்டதையும் அடக்கினா அந்த சமாசாரம் மேம்போக்கான கான்ஷியஸ் மைண்ட்லருந்து ஆழமான சப்கான்ஷியஸ் மைண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருது. //
முயற்சி செய்யாமலே முடிவு கட்டியாச்சு. அப்போ அடக்கி வச்சவங்களோட சப்கான்ஷியஸ் மைண்டுல அதுயிருக்கும் என்கிறீங்க. இங்க தான் நிக்கிறது கீதை. எதையோ எதிர்பார்த்து நீங்க அடக்கமுயன்றால் (செயற்கையாக) அது அப்படித்தான் போகும், பலனை எதிர்பார்க்காமல் அடக்கினால் சப்கான்ஷியஸ் மைண்டுலையும் நிக்காது.

//மனோதத்துவ சாஸ்திரத்தின் அடிப்படைக்கே விரோதமான புலனடக்கத்தை பத்தி பேசற பகவத்கீதை தலை சிறந்த மனோதத்துவ நூலாம். //
மனம் சொல்வதையெல்லாம் செய்தால் மனிதனுக்கு மூளை தேவையில்லையே! மனதை சரியான பாதைக்கு அனுப்பினால்தானே மனோதத்துவமே தேவை

//பரமாத்மாவை இயற்கையின் மறு உருவா,உருவகமா, பிரதி நிதியா காட்டற கீதாசாரியர் புலன் களை அடக்குவது இயற்கைக்கு விரோதமானது அதாவது கிருஷ்ணருக்கே விரோதமானதுங்கற சங்கதியை வசதியா மறந்துர்ரார்.//
வயலில் புல் முளைப்பது இயற்கை என விடமுடியாது. இங்கே கர்மா என்கிற ஒன்றை சிந்தியுங்கள். தேவையில்லாததை அடக்குவதும் கர்மாதனே.

பகுத்தறிவாளர் மீதான அவிக அண்டர் எஸ்டிமேட்டை பத்தியெல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்!

Quiz
who is that உட்டாலக்கடி?
a)தனது பதிவுகளுக்கு மெம்பரல்லாதவர் கமென்ட் போட தடை போட்டிருப்பவர்
b)இந்தியாவை பணக்கார நாடாக்கிட திட்டம் தீட்டி அதை அமல் படுத்தியே தீர்வதென்று பிடிவாதமாய் உழைத்து ஏழையானவன்.
c)2006 ஹிட்ஸ் மட்டும் கண்டு இருட்டில் இருந்தவன்
d)தொழில் முறை ஜோதிடனாக மூடநம்பிக்கையை வளர்ப்பவர்.
e)நிர்வாண உண்மைகள்

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும்

மே 18, 2010 - Posted by | Uncategorized

35 பின்னூட்டங்கள் »

  1. புலனடக்குதல்னா என்ன?

    பின்னூட்டம் by வால்பையன் | மே 18, 2010 | மறுமொழி

    • புலனடக்கம் என்பது புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும்.

      படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!

      பின்னூட்டம் by smarttamil | மே 18, 2010 | மறுமொழி

      • //படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!//

        நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்!

        பின்னூட்டம் by வால்பையன் | மே 18, 2010

  2. //நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்//
    எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்

    பின்னூட்டம் by smarttamil | மே 18, 2010 | மறுமொழி

  3. //எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்//

    நிச்சயமாக மனிதனை விட எருமைமாடு கேவலமானதல்ல!, நான் ஒரு இயற்கை விரும்பி, எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே!

    பின்னூட்டம் by வால்பையன் | மே 18, 2010 | மறுமொழி

    • எருமை மாடு கேவலம் என்று நானும் சொல்லவில்லை அதுவும் சக ஜீவராசிதான் ஆனால் அது அது இருக்கும் இடத்தில் இருப்பதுதான் இயற்கை. பூனை புலி வேசம் போடக்கூடாது, புலி பசு வேசம் போடக்கூடாது. மனித இனத்திற்கான ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ‘எதையும் ப்ளான் பண்ணாம’ பண்ணக்கூடாது.
      – இது மனித இனத்திற்கான புரிதல்.

      // எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே//
      நீங்க கலக்குங்க எரும மாடு

      பின்னூட்டம் by smarttamil | மே 18, 2010 | மறுமொழி

  4. இந்த மகா டாபர் யார் என்று தெரியாதா?ஹஹஹஹாஹா,இந்த டாபர் என்ன செய்யும் தெரியுமா?
    சார் என்ன படிங்க சார்..
    சார் என்ன படிங்க சார்..
    பால்கோவாவும் சேவுமுறுக்கும் இலவசம்னு போறவற்றவனுக்கெல்லாம் பின்னூட்டமிடும்.
    இதாவது பரவாயில்ல மிஸ்டர் ஸ்மார்ட்.
    எனக்கு சிலக்கலூரு பேட்டாக்கி பெத்த டாபர்னு இன்னொரு பேரும் இருக்குன்னு பாட்ஷா பாணில மூச்சா போகும் ,போற வர்ர பிளாக்ல எல்லாம்.என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ,என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ என்று எல்லா பிளாக்லயும் போய் டைப் அடிக்கும் பண்னாடை.

    எல்லாத்துக்கும் மேல ஜாதகம் பாக்க வர்ரவனுக்கு முகஜோசியம் பாக்கறேன்னு சொல்லி மை தடவி உனக்கு சித்தப்பா சித்தி சூன்யம் வச்சிருக்காண்,

    எனக்கு சித்தப்பா,சித்தியே இல்லைன்னு என் நண்பன் ரமேஷ்கண்ணன் சொல்ல இல்ல இல்ல தூரத்து சித்தப்பா சித்தி,உன் வீட்டில் தகடு இருக்கு அதை அமாவாசை அன்னிக்கு எடுக்கனும்னு 5000 ஆட்டையை போடுவான் சார்.என் நண்பன் ரமேஷ் கண்ணன் உஷாரா பணம் தரலை சார். சரியா பாட்டியம்மை அன்னைக்கு சூனியம் எடுக்க இவனும் இவன் எடுப்பு ஒரு சுள்ளானும் ஆஜர் சார். நைஸா ஜோல்னா பையிலேந்து தகட்டை தோட்டத்தில தகடு தேட தோண்டிய இடத்தில் ஒரு அழுகிய தேங்காயோடு ஃபெவிகால் போட்டு சீல் பண்ணி போட்டுட்டான் சார்.அதை லாவகமாக எடுத்தான் பாருங்க.எங்க நண்பன்கிட்ட ஐயாயிரமும் அவன் அரிசி மண்டிலேந்து 225கிலோ நெல்லூர் அரிசியும் வாங்கிகிட்டான் சார்.அதே மாதிரி என் நண்பன் ரமேஷ்கண்ணனின் நண்பன் பாலமுருகனுக்கும் பண்ணான் பாருங்க சார் அப்போதான் உஷாரானோம் சார்.முதல்ல ஜாதகம் பாக்கவான்னுவான்,அப்புறம் சூன்யம் எடுக்கனும்னுவான் சார். உஷார் உஷார் உஷார்,போன் நம்பரோடு எல்லாம் தரேன்

    பின்னூட்டம் by சித்தூர்.பால்கோவா | மே 18, 2010 | மறுமொழி

    • உங்க பேரப்பார்த்தவுடனே தப்பா நினைச்சுட்டேன். நீங்க அவரப்பத்தி சொல்றேங்க போல ஆனால் அவரைப்பார்த்தா அப்பாவி போல தெரியுது. உங்கள் கருத்தை இங்கே இருக்கட்டும் வரும் தலைமுறையினர் பார்த்து படிச்சு நடந்துக்கட்டும்.

      பின்னூட்டம் by smarttamil | மே 18, 2010 | மறுமொழி

      • சார் அவன் அப்பாவியில்லை
        அடப்பாவி,படு டேஞ்சரானவன்,அவனுக்கு ஆந்திர நக்சல் பாரிகளுடன் கூட தொடர்பு உண்டு,புகழ் கிடைக்க நரகலை கூட திம்பான்,வீட்டுக்கு கூப்பிட்டு சோறு போட்டு தான் பாருங்களேன்.வீட்டில் உள்ள பொருளை ஆட்டையப்போட்டுடுவான்,இல்லை நாகூசாமல் உங்களைப்பத்தி புறம் பேசுவான்,இவன் தினத்தந்தி யில் ரிப்பொட்டராய் வேலை செய்தேன் என்பதெல்லாம் சுத்தப்பொய்.ப்ரிண்டிங் செக்‌ஷன்ல பேப்பர் ரோல் மாட்டும் கலாசியாய் இருந்தான்,என் அப்பா திருவேங்கடத்துக்கு வெற்றிலை சிகரெட் வாங்கிகொடுத்த எடுபிடி,அப்போவே மீதி சில்லரை தரமாட்டானாம்.கேட்டால் கலீஜ் தெலுங்குல திட்டுவானாம்.

        பின்னூட்டம் by ஷன்முகம் | மே 19, 2010

  5. சார் இதை எடிட் பண்ணிக்கிறதுன்னா பண்ணுங்க,ஆனா வெளியிட்டுடுங்க,ஏன்னா ஊரு உலகம் இந்த மாமாப்பயலை நம்பி பணம் மோசம் போகுது சார்.அதை தடுங்க,என்னிடம் பிளாக் இல்லை சார்.நீங்க தான் அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்.இந்த கொட்டை வீங்கி விற்கும் பெண்ணை வசியம் செய்யும் மையை வாங்கி எத்தனையோ இளைஞர்கள் மோசம் போறாங்க சார்.எதோ காரிய சித்தி அஞ்சனமாம்.வீட்டுக்கு ஜோசியம் கேக்க போனா பெரிய கேட்லாக்கை எடுத்து அந்த தாய்த்து வாங்கு நரிப்பல் வாங்குன்னுவான் சார்.

    பின்னூட்டம் by சித்தூர்.பால்கோவா | மே 18, 2010 | மறுமொழி

    • //அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்//
      இதெல்லாம் ரொம்ப ஓவர்.

      உங்களுக்கு ப்ளாக் இல்லைன்னு கவலைப்படாதீங்க தனி மனித தாக்குதல் இல்லாமல் அறிவுப்புர்வமாக எழுதி தந்தா என்னோட ப்ளாக்ல பதிவு செய்றேன்

      பின்னூட்டம் by smarttamil | மே 18, 2010 | மறுமொழி

  6. சார் இவனும் அந்த கோழிகண்ணனும் அடிக்கும் கொட்டமிருக்கே,அந்த கோழி சிங்கப்பூரிலிருந்து நிறைய ஏமாந்தவர்கள் ஜாதகம் வாங்கி இவனுக்கு அனுப்பறான் சார்.அதுல அவனுக்கு சிங்கப்பூர் டாலரில் கமிஷன் சார்.அதுதான் இவங்க ரெண்டு பேரும் குலவுவாங்க.பாருங்க நீங்க போங்க சார் என்பான் அந்த கோழி,பால்கோவா இல்ல நான் அப்புறம் போறேன் நீங்க போங்க அப்படின்னுவான் சார்.,எங்கே சொல்லுங்க?மூச்சா தான் சார்.போன்லயே இதெல்லாம் நடக்கும்.நான் ஓம்காரை அடிக்கிறா மாதி அடிப்பேன் நீ அணைக்கிறாமாதி அணைக்கனும் என்பது தான் பிளான்.இதெல்லாம் எப்படி தெரியுமாவா?
    சார் பால்கோவாவுக்கு சிங்கப்பூரிலிருந்து எத்தனை v.p.p எத்தனை m.o.எத்தனை இன்லாண்ட் கவர் வருதுன்னு கேசவலுன்னு ஒரு போஸ்ட் மேன் டீடெய்லா சொல்லுவான் சார்.ஊதற சங்கை ஊதிட்டேன்,இனி உங்க இஸ்டம்.

    பின்னூட்டம் by சித்தூர்.பால்கோவா | மே 18, 2010 | மறுமொழி

    • உங்கள் சங்கு சேவை என்றும் எங்களுக்குத் தேவை

      பின்னூட்டம் by smarttamil | மே 18, 2010 | மறுமொழி

  7. ஐயா ஷன்முகம்,
    ஒவ்வொருவரைப் பற்றி நேரில் பார்த்தது போல கூறுகிறீர்கள் . ஆனால் தனி மனித விஷயத்தை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் எனக்கருதுகிறேன். அவர்களின் கருத்தில் உள்ள ஓட்டைகளுக்கு மட்டும் ஆப்படிப்பதே உத்தமம்

    பின்னூட்டம் by smarttamil | மே 19, 2010 | மறுமொழி

  8. அவரின் பல பதிவுகளில் பல உட்டாலக்கடி செய்து வருகிறார், விடாதீங்க அவிங்க டவுசரை கிழிங்க

    பின்னூட்டம் by jeyakumar | மே 19, 2010 | மறுமொழி

    • தொடருவோம்
      கருத்துக்கு மிக்க நன்றி

      பின்னூட்டம் by smarttamil | மே 19, 2010 | மறுமொழி

  9. நண்பர் சித்தூர் முருகேசனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா :))

    பின்னூட்டம் by நிகழ்காலத்தில் | மே 20, 2010 | மறுமொழி

    • தப்பு பண்ணிட்டேன் நண்பரே.
      கருத்துக்கு நன்றிகள்

      பின்னூட்டம் by smarttamil | மே 20, 2010 | மறுமொழி

  10. என்னம்மா கண்ணு வருத்தப்படறியா?
    என் 13 பிளாக்கிலும் உன்னை பத்தி பத்தி பத்தியா எழுதப்போறேன்,ஆனா படிக்க மாட்டான் யாரும்,அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை.நான் கின்னஸுக்கு இதை அனுப்ப போறேன்,எந்த வலைப்பதிவனும் 13 ப்ளாக் வச்சுக்கிட்டது இல்லை.
    TAMIL VASAM ,
    hardybodywindymi… ,
    இந்தியன் பொலிட்டிகல் க்ளோசப் ,
    நிர்வாண உண்மைகள் ,
    PAURUSHAM
    INDIAN POLITICAL CLOSEUP
    The Blog
    వాణీ పుత్రుని వాణి
    Woman voice
    kamasuthra
    The Tiger
    kavithai365
    C.K.THE TIGER
    Focus on Tomorrows
    Two Legends
    அனுபவ ஜோதிடம்

    பின்னூட்டம் by சித்தூர்.எஸ்.முருகேசன் | மே 20, 2010 | மறுமொழி

    • வாங்க அண்ணே,
      நீங்க எத்தனை ப்ளாக் வச்சுகிட்டாலும் கவலையில்லை. அதில ஏதாவது உருப்பிடியா எழுதுனா நல்லாயிருக்கும், என்னை மாதிரி நாத்திகரும் ஒத்துக்கிற மாதிரி விளக்காமா சொல்லனும். அதவிட்டுட்டு சும்மா ப்ரூஃப் ரீடிங் பதிவப் போட்டு மொக்கை வாங்காதிங்க அண்ணே,

      அப்புறம் ஒரு விஷயம், நம்ம கமேண்ட பாத்து காண்டாகிப்பாய் கமென்ட் இடமுடியாமல் உங்க ப்ளாக்கில “Comments on this blog are restricted to team members.” அப்படின்னு தடையெல்லாம் போட்டிருக்கிறதா ஊர்ல பல பேர் சொல்றாங்கண்ணே பாத்து நடந்துக்கோங்க சரியா?

      பின்னூட்டம் by smarttamil | மே 20, 2010 | மறுமொழி

      • //என்னை மாதிரி நாத்திகரும் //

        அடங்கொன்னியா!

        முடியலடா யப்பா!

        பின்னூட்டம் by வால்பையன் | மே 21, 2010

      • **//என்னை மாதிரி நாத்திகரும் // அடங்கொன்னியா! முடியலடா யப்பா!**
        என்னண்ணே,
        நீங்களும் நானும் ஒரே படகுதானே, நீங்க நினைச்சதெல்லாம் உடனே செய்றீங்க நான் ப்ளான் பண்ணி செய்றேன் அவ்வளவுதானே.

        பின்னூட்டம் by smarttamil | மே 21, 2010

    • டேய் தேங்காமூடி ஜோசியா
      ஸ்மார்டுக்கு உன்ன விட அனுபவமும் அடக்கமும் பொறுமையும் திறமையும் அதிகம் டா,முதல்ல அடங்குடா,////////////மகனே,உன் மூஞ்சியில் ஏறி ஷிட் அடிப்பென்,கண்ட்ரிப்ரூட்.

      பின்னூட்டம் by நெல்லூர்.எம்.ஆதிஷேஷன் | மே 21, 2010 | மறுமொழி

      • ///ஸ்மார்டுக்கு உன்ன விட அனுபவமும் அடக்கமும் பொறுமையும் திறமையும் அதிகம் ///
        சாரே,
        நீங்கள் கூறியதையெல்லாம் கடைபிடிக்க முயலுகிறேன். கருத்துக்கு நன்றிகள்

        பின்னூட்டம் by smarttamil | மே 21, 2010

  11. யோவ்! சொந்தமா பதிவு போடுய்யா! பகவத் கீதை பொய்னு அவர் சொன்னா உண்மைனு ஒரு பதிவு போடு! அத விட்டுட்டு அவர் பதிவை காப்பி பேஸ்டு பண்ணிட்டு…… சரி விடு.

    உங்கள பாத்தா ஸ்மார்ட் பார்வை போல இல்லை சார், கிராஸ்பெல்ட் பார்வை போல இருக்கு!

    பின்னூட்டம் by கார்மேகராஜா | மே 21, 2010 | மறுமொழி

    • //யோவ்! சொந்தமா பதிவு போடுய்யா! பகவத் கீதை பொய்னு அவர் சொன்னா உண்மைனு ஒரு பதிவு போடு! அத விட்டுட்டு அவர் பதிவை காப்பி பேஸ்டு பண்ணிட்டு…… சரி விடு//

      ராஜா அவர்களே,
      நான் சொந்தமாக எழுத நான் இந்துயில்லையே. எனக்குத் தெரிந்ததில் கொஞ்சம் எடுத்துவிட்டேன். உங்களுக்காகவே பலர் ஏற்கனவே கீதையை விளக்கியுள்ளனர். உங்களுக்குத் புரியாத விஷயங்களை புளுகாக எடுத்துக் கொண்டால் அதற்கு ஸ்மார்ட் பொறுப்பில்லை. கருத்துக்கு நன்றிகள்

      பின்னூட்டம் by smarttamil | மே 21, 2010 | மறுமொழி

  12. இந்த கார்மேக ராஜா என்னும் பின்னூட்டதை பெயரை மறைத்துப் போட்ட சித்தூர்.முருக்கேஷன் வீழ்க.:)

    பின்னூட்டம் by நெல்லூர்.எம்.ஆதிஷேஷன் | மே 22, 2010 | மறுமொழி

    • நண்பரே, அவர் ஏற்கனவே அவர் பயந்துபோய் யாரும் அவர் பிளாக்கில் கமெண்ட் இடமுடியாதபடி செய்து, பம்மி விட்டார். இன்னும் எதற்கு அவர் வீழ வேண்டும். மேலும் அந்த முட்டா தொடரையும் நிறுத்திவிட்டார் இனி அவரும் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.
      அடுத்தமுறை கருத்திடையில் உண்மையாக வாருங்கள். நன்றி

      பின்னூட்டம் by smarttamil | மே 22, 2010 | மறுமொழி

  13. ஸ்மார்ட் சார்,
    நீங்க சரியான இடத்தில இந்த வால் மாமாவின் வாக்குமுலத்தை வாங்கிவிட்டீர்கள். உண்மையின் வால் பையன் எருமை மாடுதான். உங்களுக்கு ஒரு சபாஸ்

    பின்னூட்டம் by Ram kumar | மே 28, 2010 | மறுமொழி

    • என்னை பிரச்சனையில் மாட்டிவிடாதீர்கள். உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

      பின்னூட்டம் by smarttamil | மே 29, 2010 | மறுமொழி

  14. […] என்றதற்கும் நன்றி கூறி விவாதத்தை நிறைவு செய்தார். அவர் வாயால் ஒப்புக் கொண்டதை நான் […]

    Pingback by பதிவரசியல்: எனக்கு பிடித்த பதிவர் வினவு(?) « ஸ்மார்ட் பார்வை | மே 31, 2010 | மறுமொழி

  15. //நான் சொந்தமாக எழுத நான் இந்துயில்லையே// அப்புறம் ஏங்க இந்து புக்கை நோண்டுறீங்க? //எனக்குத் தெரிந்ததில் கொஞ்சம் எடுத்து விட்டேன்// பலப்பல நூற்றாண்டுகளா கொஞ்சம் கொஞ்சமா தான் மதச்சண்டைகள் குறைஞ்சுகிட்டு வருது. அதுவும் படிச்சவன் தான், சம்பளம் கிடைச்சா சரி, எந்த வேலையும் செய்யத்தயார்னு மதம் மேட்டரையெல்லாம் மறந்துட்டு வேலைய பாத்துகிட்டு இருக்கான். ஏன் நீங்களும் சும்மாயிருக்காம எதையாவது நோண்டிவிட்டுகிட்டே இருந்தா எப்படி?

    பின்னூட்டம் by எஸ்கா | ஜூலை 16, 2010 | மறுமொழி

    • இந்து இல்லைனா இந்துக் கொள்கையை படிக்கக் கூடாதா? புதுசா சொல்றீங்க
      நானும் சம்பளம் கிடைக்குதுன்னு சும்மா இருக்கச் சொல்றீங்களா? இப்படி படிச்சவனெல்லாம் சும்மாருக்கப் போய்தான் படிக்காதவனெல்லாம் சேர்ந்து முட்டாள் தனமா பகுத்தறிவுக்கு விளக்கம் கொடுக்கிற நிலைக்கு வந்துட்டோம்.
      Thanks for commenting at all

      பின்னூட்டம் by smarttamil | ஜூலை 16, 2010 | மறுமொழி

  16. hai
    இந்து இல்லைனா இந்துக் கொள்கையை படிக்கக் கூடாதா? புதுசா சொல்றீங்க
    நானும் சம்பளம் கிடைக்குதுன்னு சும்மா இருக்கச் சொல்றீங்களா? இப்படி படிச்சவனெல்லாம் சும்மாருக்கப் போய்தான் படிக்காதவனெல்லாம் சேர்ந்து முட்டாள் தனமா பகுத்தறிவுக்கு விளக்கம் கொடுக்கிற நிலைக்கு வந்துட்டோம்.

    பின்னூட்டம் by sat | ஜூலை 22, 2010 | மறுமொழி


பின்னூட்டமொன்றை இடுக