ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

ஈ.வே.ரா.நாயக்கர் பிறந்த நாள் தேவையா?

ஈ.வே.ரா.நாயக்கர் பிறந்த நாள் கொண்டாடும் தோழர்களே எனது கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டுக் கொண்டாடவும்.

 • “நாயக்கர் என்றால் தான் ஆந்திராவில் தெரியும் ” என்று தெலுங்கில் பெரியார் படத்தின் பெயர் காரணத்தின் விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது. அப்படியென்றால் நாயக்கர் சமூக பலத்தைப் பெற அப்பெயரில் தான் ஆந்திராவில் அறிமுகமானாரா?
 • பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல என்று சொன்னால் மறுப்பீர்களா?
 • திராவிடக் கொள்கை, திராவிட இனம், திராவிட பகுத்தறிவு என்று பதவி ஆசையில் இந்தியாவை பிரிக்க நினைத்தவர் பெரியார். இந்த திராவிடக் கொள்கை மற்ற மாநிலங்களில் உள்ள பற்று எவ்வளவு? அவருக்குப் பிறகும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் மற்ற மாநிலத்தில் திராவிட போலிப் பிரச்சாரம் எடுபவில்லை என்பதை அறிவீர்களா?
 • மதம் என்கிற கண்ணாடி வழியே பார்க்காமல் தனி மனிதனாக ஒரு இறை நம்பிக்கையாளரை மதித்து அவரைப் பாராட்டியதுண்டா? இல்லையென்றால் இறை மருப்பாலரைத் தவிர மற்றவரெல்லாம் மட்டி மடையர்களா?
 • அன்றிலிருந்து சாதி என்கிற விஷயத்தைத் தவிர வேறு ஏதாவது முற்போக்கான சிந்தனையில் நாட்டுக்கு என்ன செய்தார்?
 • ஒதிக்கீடு முறையை அமல்படுத்தப் பாடுபட்டவர்கள் என்கிற காரணத்தால் கேட்கிறேன் ஒவ்வொரு சாதிக் கட்சிகளும் அரசிடம் அளவிற்கு அதிகமாக ஒதிகீடுகள் கேட்கிறதே! இதற்கு என்ன வழி? ‘..நிதி’ அவர்களின் பேரன்களுக்கு மட்டும் ஒதிக்கீடு வழங்கலாமா?
 • ராமாயணத்தில் போன்ற மதப் புராணங்களில் நொட்டை எனப்படும் குறைகள் கண்டுபிடித்து பக்கம் பக்கமாக எழுதும் கழக கண்மணிகள் ஏன் அதில் உள்ள நல்லவிஷயங்களை எழுதுவதில்லை? தர்மத்திற்காக கொள்கையா? இல்லை கொள்கைக்காக தர்மமா?
 • கடவுள் இல்லை என்பதுதானே இவரின் கொள்கை அதற்குத்தானே கோவில்களையும் சிலைகளையும் உடைக்கின்றனர் பின் எதற்கு தலித்களுக்கு ஆலயப்பிரவேஷம் வாங்கித் தர வேண்டும்? கூட்டம் சேர்க்கவா?
 • கடவுள்களை ஆபாசமாகக் காட்டி எழுதி பகுத்தறிவை வளர்ப்பதாகச் சொல்லும் கழக கண்மணிகள் ஏன் பெரியார் இணைந்த நிர்வாண சங்கத்தைப் பற்றி ஒப்புக்குக் கூட எழுதுவதில்லை? உபதேசம் ஊருக்கு மட்டுமா?
 • அன்றைக்கு எடுத்த அதே சாதி ஆதிக்கத்தைத் தான் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சமூகத்தில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாததைப்போல வேறு எதுவும் சிந்திக்கமுடியவில்லையா? இல்லை அறிவில் பரிணாமமில்லையா?
 • அன்று ஆதிக்கச் சாதி மக்களை அடிமைப் படுத்தியது என்று இன்று எழுதும் நீங்கள் கண்முன்னே ஒரு அரசியல் குடும்பம் பல தொழில்களில் ஆக்கிரமித்து வருமானம் ஈட்டி கொள்ளை அடிப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை கண்ணுக்கும் கறுப்புச் சட்டையா?
 • பெரியார் கொள்கைகளை பலர் பினபற்றுவதாகச் சொன்னாலும் கொள்கையின் வாரிசாக காட்டும் தி.க.மற்றும் பெரியார் தி.க. ஏன் சண்டைப் போட்டுக் கொல்கிறது? கொள்கையில் ஏதாவது கொள்ளைபோகிவிட்டதா?
 • சாதி வேற்றுமையை ஒழிக்கத் தான் சாதி ஒதிக்கீடு என்று பிரச்சாரமிடும் நீங்கள், சதிகள் ஒழிந்தபின் அந்த ஒதிக்கீடு திரும்ப எடுக்கப்படும் என்று எங்குமே பிரச்சாரம் செய்யாதது ஏன்? ஆரசியல் நடத்த முடியாதே அதனாலா?
 • பகுத்தறிவை வளர்க்க கடவுள் சிலைகளை உடைப்போம் என்கிறீர்களே அப்படிஎன்றால் பெரியார் வன்முறையைத்தான் சொல்லிக் கொடுத்தாரா? வன்முறை எடுத்தபிறகு எங்கே பகுத்தறிவு வேலை செய்யும்?

(விடுதலை, 12.12.1968)

வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்?

பொதுவாக யாருக்குப் பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்த நாள் என்பது கொள்கையைப் பாராட்ட, பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது.

நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள் தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம்தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசீர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கின்றானே ஒழிய, அதில் எந்தப் பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன் னாலேயே எவனும் வாழ்ந்துவிட முடியாது. அதுபோல, வசை கூறுவதால் எவரும் கெட்டுப் போய்விடப் போவதுமில்லை.

என்னை வாழ்த்துகிறவர்களைவிட வசை சொல்கிறவர்கள்தான் அதிகம். அதற்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்திருக்க முடியாது. எனவே, வாழ்த்துவதற்கும் வசை கூறுவதற்குமுள்ள பலன் ஒன்றேயாகும். வாழ்த்துவது வாய்க்கும், காதுக்கும் இனி மையாக இருக்குமே தவிர பலனில் ஒன்று மில்லை.

பிறந்தநாளில் மட்டும் ஏன் ஒரு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும்? அந்த நாளில் சிந்திப்பதால் ஏதேனும் நன்மை வரவாப் போகிறது?

அடபோங்கப்பா நீங்களும் உங்க தலைவரும்..

Advertisements

செப்ரெம்பர் 17, 2010 - Posted by | Uncategorized

23 பின்னூட்டங்கள் »

 1. தங்களின் சிந்தனை சரி தான் .
  ஆனால் ,தங்களின் கேள்விகளுக்கான பதில்களை முன்னரே பலரால் பலசமயங்கள் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டுவிட்ட நிலையில் என்னால் தாங்களுக்கு புதிதாக இதற்கு பதில் தர இயலவில்லை.
  அதற்காக வருந்துகிறேன் .
  தொடருங்கள் நல்ல சிந்தனையுடன் .
  வாழ்த்துக்கள் .

  பின்னூட்டம் by நண்டு@நொரண்டு | செப்ரெம்பர் 17, 2010 | மறுமொழி

  • //தங்களின் கேள்விகளுக்கான பதில்களை முன்னரே பலரால் பலசமயங்கள் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டுவிட்ட நிலையில் என்னால் தாங்களுக்கு புதிதாக இதற்கு பதில் தர இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன் .//
   ஒரே பார்ப்பனர் துவேஷ கருத்தை மட்டும் 75 ஆண்டுகள் திரும்ப திரும்ப எழுதும் திராவிட பகுத்தறிவாளர்கள் இதற்கான பதிலை திரும்ப எழுதாமல் இருப்பதை எண்ணி நானும் வருந்துகிறேன்.

   கருத்துக்கு நன்றி தலைவா

   பின்னூட்டம் by smarttamil | செப்ரெம்பர் 17, 2010 | மறுமொழி

 2. ஒரு போதும் இவர்களால் பதில் அளிக்க முடியாது. காரணம்… போலி சாமியார்கள் போல் இவர்கள் போலி பகுத்தறிவாளர்கள்.

  இதே போன்ற ஒரு பதிவு இங்கே

  http://oosssai.blogspot.com/2010/09/blog-post_17.html

  பின்னூட்டம் by ஓசை | செப்ரெம்பர் 17, 2010 | மறுமொழி

  • சரியான கருத்து. என்ன உங்களையும் என்னையும் பார்ப்பனர்கள் என்று புதிதாக பேரிட்டு திட்டுவார்கள் அவ்வளவுதான், அவர்களின் பகுத்தறிவு.

   பின்னூட்டம் by smarttamil | செப்ரெம்பர் 17, 2010 | மறுமொழி

 3. http://adangathamizhan.blogspot.com/2010/09/blog-post.17html
  //உங்களது 95 வருட வாழ்க்கையில் 70 வருடம் பொது நலத்தோடு தொன்று ஆற்றியிருக்கிறீர்கள் 8,20,000 மைல்கள் சுற்றுபயணம் செய்திருக்கிறீர்கள்சுய சிந்தனையும், சுய மரியாதையும் இந்த தமிழினம் பெற வேண்டி, நீங்கள் ஆற்றிய அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில்(cassette) பதிவு செய்திருந்தால் அது 2- ஆண்டுகள், 5- மாதங்கள், 11- நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்… ////பெரியரே இன்று பெண்கள் நிலை தெரியுமா? ////பெண்களுக்கு பிறக்க உரிமையிருக்கிறது (சில கிராமங்கள் தவிர்த்து) ஆனால் அவர்களின் வாழ்க்கை முடிவுகளை ஆண்கள் தான் முடிவு செய்கிறார்கள் இன்றும்;கண்டிப்பாக சுதந்திரம் உண்டு ஆனால் அது எவ்வளவு தூரம் என்பதை ஆண் தான் முடிவு செய்கிறான்////இன்றும் வரதட்சனை என்று தன்னையும், தன் மானத்தையும் விற்று பிளைக்கிறார்கள் மீசை முறுக்கி கொண்டே!//நீங்கள் இத்துணை பாடு பட்டபின்னும் தமிழக பெண்கள் நிலை இப்படி இருப்பது தாங்கள் கொடுத்த உழைப்புக்கு அவமானம். பகுத்தறிவு சிந்தனையாளர் ஆனதால் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை; இறைவனையும் இரைஞ்ச முடியாது. ஆனால் நம்பிக்கை வைத்து உள்ளோம் – மீண்டும் ஒரு பெரியார் தோன்றுவார், தங்கள் பணியைத்தொடருவார் என்று.
  17 செப்டெம்ப்ர், 2010 10:50 am

  பின்னூட்டம் by metro boy | செப்ரெம்பர் 18, 2010 | மறுமொழி

 4. neengal solvathuthan sari

  பின்னூட்டம் by B.Hariharaselvam | செப்ரெம்பர் 18, 2010 | மறுமொழி

 5. neengal solvathu sarithaan.

  பின்னூட்டம் by B.Hariharaselvam | செப்ரெம்பர் 20, 2010 | மறுமொழி

 6. /*“நாயக்கர் என்றால் தான் ஆந்திராவில் தெரியும் ” என்று தெலுங்கில் பெரியார் படத்தின் பெயர் காரணத்தின் விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது. அப்படியென்றால் நாயக்கர் சமூக பலத்தைப் பெற அப்பெயரில் தான் ஆந்திராவில் அறிமுகமானாரா? */

  நீங்கள் மேலே சொல்லி இருக்கும் செய்தி எப்படி மற்ற மாநிலங்களில் இன்னும் சாதி பெயரை முன்னர் போட்டுகொண்டிருக்கிரர்கள் என்பதற்க்கான விளக்கம்.. அங்கு பெரியார் இல்லை என்பதை அது காண்பிக்கிறது (பெரியாராகவே இருந்தாலும் சாதியோடு வா என்னும் பிற்போக்குத்தனம் நிறைந்த மாநிலம்)…தமிழகத்தில் மட்டும் தான் இந்தியாவிலேயே சாதி பெயரை முன்னர் போட்டு அடையாளம் காட்டாத மாநிலம்…அதுதான் திராவிடர் கழகத்தின் வெற்றி… தமிழகத்தின் தனி பெருமை…..இப்பொழுது புரிகிறதா பெரியாரின் வெற்றி…..எனவே அங்கும் பெரியார் தேவை…அங்கு மட்டும் அல்ல உலகத்துக்கே தேவை….

  /* பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல என்று சொன்னால் மறுப்பீர்களா? */

  ஆம் மறுப்போம்..வரலாறே தெரியாத ஸ்மார்ட்….. பார்பனியம் என்பது சாதி அல்ல (இதுல போய் படிங்க http://paraneetharan-myweb.blogspot.com/2010/05/blog-post_31.html) அது ஒரு தனி இனம்…ஆரியம்…எப்படி சிங்களவன் இன்று எல்லாத்தை ஆர்பரித்து தமிழ் ஈழ மக்களின் உரிமைகளை தர மறுக்கிறானோ அது போல ஆரியம் திராவிடர் களுக்கு செய்த தீங்கை தட்டி கேட்டு அதில் வெற்றியும் கண்ட தன்மான தலைவன் தந்தை பெரியார்….புரியுதா ஸ்டுபிட்….மன்னிக்கவும் ..ஸ்மார்ட்…

  /*திராவிடக் கொள்கை, திராவிட இனம், திராவிட பகுத்தறிவு என்று பதவி ஆசையில் இந்தியாவை பிரிக்க நினைத்தவர் பெரியார். இந்த திராவிடக் கொள்கை மற்ற மாநிலங்களில் உள்ள பற்று எவ்வளவு? அவருக்குப் பிறகும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் மற்ற மாநிலத்தில் திராவிட போலிப் பிரச்சாரம் எடுபவில்லை என்பதை அறிவீர்களா?*/

  மேலே சொன்ன பதில் தான்…வேறு எங்கும் வெற்றி பெற பெரியார் அங்கு இல்லை…..இருந்தால் வெற்றி பெற்றிருக்கும் ..புரியுதா ஸ்டுபிட் மன்னிக்கவும் ஸ்மார்ட்

  /*மதம் என்கிற கண்ணாடி வழியே பார்க்காமல் தனி மனிதனாக ஒரு இறை நம்பிக்கையாளரை மதித்து அவரைப் பாராட்டியதுண்டா? இல்லையென்றால் இறை மருப்பாலரைத் தவிர மற்றவரெல்லாம் மட்டி மடையர்களா?*/

  பாவாம்..நீங்கள் பெரியாரை பற்றி எங்கு படித்தீர்கள்..இந்த தமிழ் புத்தகத்தில் ஒரு பாடம் இருக்கும் அங்கேவா? ராஜாஜியை தெரியுமா? அவருக்கும் பெரியாருக்கும் உள்ள நட்பு தெரியுமா?

  /*அன்றிலிருந்து சாதி என்கிற விஷயத்தைத் தவிர வேறு ஏதாவது முற்போக்கான சிந்தனையில் நாட்டுக்கு என்ன செய்தார்?*/

  மேலே சொன்னது போல தமிழ் புத்தகத்தில் ஒரு பாடம் இருக்குமே அங்கேதான் பெரியாரை படித்துவிட்டு 500 தென்னை மரத்தை வெட்டினர் என்ற செய்தியோடு அவர்தான் பெரியார் என்று முடிவு செய்து விட்டீர்கள் போலும்….பெரியாரியம் ஒரு தத்துவம்..அது ஒரு தனி மனிதன் சார்ந்த கொள்கை இல்லை…..உண்மை – நேர்மை – நியாயம் – நீதி இவற்றுக்காக பகுத்தறிவுடன் தொடர் போராட்டம் நடத்திய பெரியார் எந்த வெறிதனத்திர்க்கும் ஒத்துப்போகதவராக இருந்தார். தமிழர்களின் மொழியை சீராக்குவதிலும், எளிமைப்படுதுவதிலும் காட்டிய அக்கறையில் அவர் தமிழை தெயிவமாக்கவில்லை. வளர்ச்சியடையாத, மாற்றமும் முன்னேற்றமும் அடையாத எதுவும் காட்டுமிரண்டிதனமானவையே என்பதுதான் அவரது தத்துவ அணுகுமுறை…..பெரியாரியல் பற்றி மேலும் http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_26.html

  /*ஒதிக்கீடு முறையை அமல்படுத்தப் பாடுபட்டவர்கள் என்கிற காரணத்தால் கேட்கிறேன் ஒவ்வொரு சாதிக் கட்சிகளும் அரசிடம் அளவிற்கு அதிகமாக ஒதிகீடுகள் கேட்கிறதே! இதற்கு என்ன வழி? ‘..நிதி’ அவர்களின் பேரன்களுக்கு மட்டும் ஒதிக்கீடு வழங்கலாமா?*/

  முதல்ல இடஒதிக்கீடு என்றல் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அது தெரியாமல் உளறுவது உங்கள் அறியாமையின் உச்ச கட்டம்…பாவாம் முதலில் ஒதிக்கீடு என்று மொட்டாய சொல்லாம..இட ஒதிக்கீடு என்று கூறுங்கள்….அதுலயே குளறு படி…இதுல கேள்வி?

  /*ராமாயணத்தில் போன்ற மதப் புராணங்களில் நொட்டை எனப்படும் குறைகள் கண்டுபிடித்து பக்கம் பக்கமாக எழுதும் கழக கண்மணிகள் ஏன் அதில் உள்ள நல்லவிஷயங்களை எழுதுவதில்லை? தர்மத்திற்காக கொள்கையா? இல்லை கொள்கைக்காக தர்மமா?*/

  மலத்தில் இருந்து அரிசி பொருக்கி கொடுத்தால் சமைத்து தின்பீர்களா? நீங்கள் தின்னாலும் தின்பீர்கள்…ஏன் என்றால் உங்கள் கேள்வி அப்படி இருக்கிறது…

  /*கடவுள் இல்லை என்பதுதானே இவரின் கொள்கை அதற்குத்தானே கோவில்களையும் சிலைகளையும் உடைக்கின்றனர் பின் எதற்கு தலித்களுக்கு ஆலயப்பிரவேஷம் வாங்கித் தர வேண்டும்? கூட்டம் சேர்க்கவா?*/

  தமிழர்கள் என்பதாலேயே கரிகார்ச்சோழனும்,நரசிமபல்லவனும்,ராஜராஜ சோழனும் போற்றுவதர்க்குரியவர்களாக பெரியார் ஏற்றுகக் கொண்டதில்லை.

  தமிழ் என்பதாலேயே தேவாரமும்,திருவாசகமும்,கந்தபுராணமும் அவருக்கு பெருமிதமாக படவில்லை, அவர்களாலும் அவைகளாலும் மனுதர்மம் தழைத்ததா,சமதர்மம் தழைத்ததா என்பதுதான் அவரது அளவுகோல். சமத்துவத்தை மறுக்காத சமநீதி சொன்ன திருக்குறளை ஏற்றுக்கொண்டதும் தமிழன் மீதான பற்றினால் அல்ல சமதர்மத்திர்க்காகதான்….புரியுதா? அது மாறி முதல்ல கோவிலில் செல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டு …அதனை வாங்கினால் பிறகு பார்க்கலாம்..கடவுள் மறுப்பு பற்றி என்பது அறிவு ஆசானின் தெளிவு..என்ன ஸ்டுபிட் மன்னிக்கவும்…அடிகடி எதிர்மறை நினைவு வருகிறது…என்ன ஸ்மார்ட்?

  /*கடவுள்களை ஆபாசமாகக் காட்டி எழுதி பகுத்தறிவை வளர்ப்பதாகச் சொல்லும் கழக கண்மணிகள் ஏன் பெரியார் இணைந்த நிர்வாண சங்கத்தைப் பற்றி ஒப்புக்குக் கூட எழுதுவதில்லை? உபதேசம் ஊருக்கு மட்டுமா?*/

  இந்த பதிலை சொல்லுவதற்கு கொஞ்சம் மன்னிக்கவும்…மனைவியும்..விபச்சாரியும் ஒன்றா?

  /*அன்றைக்கு எடுத்த அதே சாதி ஆதிக்கத்தைத் தான் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சமூகத்தில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாததைப்போல வேறு எதுவும் சிந்திக்கமுடியவில்லையா? இல்லை அறிவில் பரிணாமமில்லையா? */

  அப்புறம் ஏன் பாபர் மசூதி இடிக்கனும், ஆடியில பூணூல் மாத்தணும், சேது திட்டம் கிடப்பில் போடபடனும்? உங்களுக்கு இதெல்லாம் கண்ணுல தெரியலய …ஸ்டுபிட் மன்னிக்கவும் ஸ்மார்ட்?

  /*அன்று ஆதிக்கச் சாதி மக்களை அடிமைப் படுத்தியது என்று இன்று எழுதும் நீங்கள் கண்முன்னே ஒரு அரசியல் குடும்பம் பல தொழில்களில் ஆக்கிரமித்து வருமானம் ஈட்டி கொள்ளை அடிப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை கண்ணுக்கும் கறுப்புச் சட்டையா?*/

  ஏன் உங்களுக்கு திருவாரூரில் இருந்து வந்த சாமானியன் ஒருவனின் குடும்பம் தான் தெரியுதா……யோசிங்க நல்ல மற்றவையும் புலப்படும் ஸ்டுபிட் மன்னிக்கவும் ஸ்மார்ட் அவர்களே

  /*பெரியார் கொள்கைகளை பலர் பினபற்றுவதாகச் சொன்னாலும் கொள்கையின் வாரிசாக காட்டும் தி.க.மற்றும் பெரியார் தி.க. ஏன் சண்டைப் போட்டுக் கொல்கிறது? கொள்கையில் ஏதாவது கொள்ளைபோகிவிட்டதா?*/

  ஆடு நலன் பற்றி ஓநாய் கவலை கொள்ள தேவை இல்லை….

  /*சாதி வேற்றுமையை ஒழிக்கத் தான் சாதி ஒதிக்கீடு என்று பிரச்சாரமிடும் நீங்கள், சதிகள் ஒழிந்தபின் அந்த ஒதிக்கீடு திரும்ப எடுக்கப்படும் என்று எங்குமே பிரச்சாரம் செய்யாதது ஏன்? ஆரசியல் நடத்த முடியாதே அதனாலா?*/

  சாதி ஒழிந்தது என்று நீங்களே சொல்லிக்க வேண்டியதது தான்…..இந்திய அரசியல் சட்டம் தெரியுமா? தெரியலன்னா இட ஒதிக்கீடு பற்றி அதில் என்ன கோரப்பட்டுள்ளது என்று பாருங்கள்…தெளிவடையுங்கள் …ஸ்டுபிட் மன்னிக்கவும் ஸ்மார்ட் அவர்களே

  /*பகுத்தறிவை வளர்க்க கடவுள் சிலைகளை உடைப்போம் என்கிறீர்களே அப்படிஎன்றால் பெரியார் வன்முறையைத்தான் சொல்லிக் கொடுத்தாரா? வன்முறை எடுத்தபிறகு எங்கே பகுத்தறிவு வேலை செய்யும்?*/

  பொது இடத்தில அமைந்த எந்த சிலைகளை திராவிடர் கழகத்தினர் உடைத்தனர் என்று சொன்னால் நன்றாக இருக்கும்….அய்யாவே அவர் காசை கொடுத்து பிள்ளையார் வாங்கி தெருவில் போட்டு உடைத்தரே தவிர..பொது கோவிலை என்று உடைத்தது இல்லை..புரியுதா?
  கடவுள் இருக்குன் என்று சொல்லும் கும்பல் தான் ஒருவர் கோவிலை மற்றவர் இடிப்பதும்…..மற்றவர் மசூதியை இவர்கள் இடிப்பது…வழக்கமாக உள்ளது….வருகின்ற செப்டெம்பர் 24 யாருக்காக 72 கோடி கொடுத்து லத்தி வாங்குகிறது நடுவண் அரசு?

  /*பிறந்தநாளில் மட்டும் ஏன் ஒரு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும்? அந்த நாளில் சிந்திப்பதால் ஏதேனும் நன்மை வரவாப் போகிறது*/

  பிறந்த நாளில் யாரும் வாழ்த்த வேண்டும் என்று அய்யா சொல்லவில்லை..புரியுதா…மாறாக எவளவு என்னுடைய கொள்கையை பரப்ப முடியுமோ அதனை எந்த வழியில் வேண்டுமாலும் பின்பற்றுங்கள் என்பதுதான் பிறந்தநாள் விழா..புரியத ஸ்டுபிட் மன்னிக்கவும் ஸ்மார்ட்?

  எங்கே புரிய போகுது இதெல்லாம்….வாய் புளித்ததோ மங்கை புளித்ததோ என்று பேசும் உங்களை போன்றவர்களுக்கு இதெல்லாம் எங்கே புரிய போகிறது?…

  முதல்ல உங்கள் கேள்வியிலேயே உங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பதை காண்பிக்கிறது…சும்மா ஏதோ கேள்வி கேட்ட வேண்டும் என்று கேட்க்ககூடாது அன்பரே…..முடிந்தால் நான் இவைகளை தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு விளக்கம் கொடுங்கள் என்று கேளுங்கள் சொல்லுகிறோம்..அதனை விட்டு பகுத்தறிவு இருந்தால் சொல்லுங்கள் என்பது உங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பதை மிக தெளிவாக காண்பிக்கிறது……

  எல்லா கேள்விகளும் இப்படி வரலாறு தெரியாமலே கேட்கப்பட்டுள்ளது…முடிந்தால் விடுதலை படியுங்கள்..அல்லது நல்ல நூலகம் சென்று பெரியார் பற்றி ஆய்வு செயுங்கள்….புரியுதா?

  பின்னூட்டம் by Sangamiththiran | செப்ரெம்பர் 21, 2010 | மறுமொழி

  • //நீங்கள் மேலே சொல்லி இருக்கும் செய்தி எப்படி மற்ற மாநிலங்களில் இன்னும் சாதி பெயரை முன்னர் போட்டுகொண்டிருக்கிரர்கள் என்பதற்க்கான விளக்கம்.. அங்கு பெரியார் இல்லை என்பதை அது காண்பிக்கிறது (பெரியாராகவே இருந்தாலும் சாதியோடு வா என்னும் பிற்போக்குத்தனம் நிறைந்த மாநிலம்)…தமிழகத்தில் மட்டும் தான் இந்தியாவிலேயே சாதி பெயரை முன்னர் போட்டு அடையாளம் காட்டாத மாநிலம்…அதுதான் திராவிடர் கழகத்தின் வெற்றி… தமிழகத்தின் தனி பெருமை…..இப்பொழுது புரிகிறதா பெரியாரின் வெற்றி…..எனவே அங்கும் பெரியார் தேவை…அங்கு மட்டும் அல்ல உலகத்துக்கே தேவை…//
   ஐயா, நான் கேட்ட கேள்வி மற்ற மாநிலத்தில் சாதி ஆதிக்கம் இருக்கும் என்கிற போது ஏன் சாதிப் பெயரோடு அறிமுகமாக வேண்டும்? அதற்கு பதில் சொலுங்கள் சாக்கடைமித்திரன் மன்னிக்க சங்கமித்திரன் அவர்களே!

   பின்னூட்டம் by smarttamil | செப்ரெம்பர் 24, 2010 | மறுமொழி

  • //அது ஒரு தனி இனம்…ஆரியம்…எப்படி சிங்களவன் இன்று எல்லாத்தை ஆர்பரித்து தமிழ் ஈழ மக்களின் உரிமைகளை தர மறுக்கிறானோ அது போல ஆரியம் திராவிடர் களுக்கு செய்த தீங்கை தட்டி கேட்டு அதில் வெற்றியும் கண்ட தன்மான தலைவன் தந்தை பெரியார்….புரியுதா ஸ்டுபிட்….மன்னிக்கவும் ..ஸ்மார்ட்//
   எப்படியோ உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. முதலாவது, பாமரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பணமுதலாளிகளான மற்ற சாதிக்காரர்களை ஏதும் செய்யாததால் நீங்க சாதி ஒழிப்பிற்குப் போராடவில்லை ஒரு இனத்தை அழிக்கப் போராடுகிறீர்கள்.என்று எண்ணிக்கொள்ளலாம். ரெண்டாவது, உண்மையில் ஆரியர்கள் படைஎடுத்துவந்ததாக நம்பமுடியாவிட்டாலும் ஒரு ஒப்புக்கு எண்ணினாலும் அடுத்து படையெடுத்த முகமதியர்கள், வெள்ளைக்காரன் ஆகியவர்களை என்ன செய்தீர்கள்? ரெண்டாயிரம் ஆண்டுக்கு முன் படை எடுத்தவர்களை ஒழிக்க இன்று போராடுவதுதான் உங்கள் பகுத்தறிவு.
   புரியுதா சாக்கடைமித்திரன்….மன்னிக்கவும் ..சங்கமித்திரன்

   பின்னூட்டம் by smarttamil | செப்ரெம்பர் 24, 2010 | மறுமொழி

  • //இந்த தமிழ் புத்தகத்தில் ஒரு பாடம் இருக்கும் அங்கேவா? ராஜாஜியை தெரியுமா? அவருக்கும் பெரியாருக்கும் உள்ள நட்பு தெரியுமா?//
   தமிழ் ஓவியா தளத்தில் தான் படித்தேன் ராஜாஜியைத் திட்டாத நாளில்லை நீங்கள் போய் படிக்கவும். ராஜாஜியுடன் நட்பு பாரட்டியதெல்லாம் அப்பப்ப திட்டவே என்று தெரியும்

   //.பெரியாரியம் ஒரு தத்துவம்..அது ஒரு தனி மனிதன் சார்ந்த கொள்கை இல்லை…..உண்மை – நேர்மை – நியாயம் – நீதி இவற்றுக்காக பகுத்தறிவுடன் தொடர் போராட்டம் நடத்திய பெரியார் எந்த வெறிதனத்திர்க்கும் ஒத்துப்போகதவராக இருந்தார்.//
   அற்புதம்! உண்மைதான் பெரியாரைப் பற்றி உங்களைப் போன்றோர் தளங்கள் மூலமாகத் தான் தெரியும் முழுவதும் தெரியாது. அவர் அப்படி சிந்தித்திருக்கிறார் என்றால் இப்போது இருக்கும் தொண்டர்களின் பதிவெல்லாம் இந்துமதம் குறிப்பாக ஒரு இனத்தை மட்டும்] அதை மட்டுமே நொட்டை சொல்லவது போல் இருப்பது ஏன்?

   //முதல்ல இடஒதிக்கீடு என்றல் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அது தெரியாமல் உளறுவது உங்கள் அறியாமையின் உச்ச கட்டம்…பாவாம் முதலில் ஒதிக்கீடு என்று மொட்டாய சொல்லாம..இட ஒதிக்கீடு என்று கூறுங்கள்….அதுலயே குளறு படி…இதுல கேள்வி?//
   சரி இப்போது கேட்கிறேன் எல்லா சாதியும் அளவுக்கதிகமாக இட ஒதிக்கீடு கேட்கிறதே இதற்கு என்ன வழி?பதில் சொல்லும் ..சாக்கடைமித்திரன்….மன்னிக்கவும் ..சங்கமித்திரன் அவர்களே

   பின்னூட்டம் by smarttamil | செப்ரெம்பர் 24, 2010 | மறுமொழி

  • // மனுதர்மம் தழைத்ததா,சமதர்மம் தழைத்ததா என்பதுதான் அவரது அளவுகோல். சமத்துவத்தை மறுக்காத சமநீதி சொன்ன திருக்குறளை ஏற்றுக்கொண்டதும் தமிழன் மீதான பற்றினால் அல்ல சமதர்மத்திர்க்காகதான்//
   இந்த பதிலை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.

   //இந்த பதிலை சொல்லுவதற்கு கொஞ்சம் மன்னிக்கவும்…மனைவியும்..விபச்சாரியும் ஒன்றா//
   இந்த பதிலை சொல்லுவதற்கு கொஞ்சம் மன்னிக்கவும் உங்களுக்கு மட்டும் தான் அது ஒன்றல்ல மற்றவருக்கு ஆபாசம் என்கிற ரீதியிலிருந்தால் ஒன்றுதான்

   //பிறந்த நாளில் யாரும் வாழ்த்த வேண்டும் என்று அய்யா சொல்லவில்லை..புரியுதா…மாறாக எவளவு என்னுடைய கொள்கையை பரப்ப முடியுமோ அதனை எந்த வழியில் வேண்டுமாலும் பின்பற்றுங்கள் என்பதுதான் பிறந்தநாள் விழா..//
   [[பிறந்த நாள் என்பது கொள்கையைப் பாராட்ட, பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும்.]] என்று அவரே சொல்லி எதிர்க்கிறார் மேல பாருங்கள்.

   //பொது இடத்தில அமைந்த எந்த சிலைகளை திராவிடர் கழகத்தினர் உடைத்தனர் என்று சொன்னால் நன்றாக இருக்கும்….//
   சமீபத்தில் குரான் எரிப்பு போல செய்தார் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. குரான் எரிப்பவர்களுக்கு நடந்த தண்டனை போல உங்களுக்கும் பாயாமல் இருந்ததற்குக் காரணமே இந்து மதத்தில் உள்ள சகிப்புத் தன்மை.

   கடைசியாக ஒரு பஞ்ச் “கருவாடு தின்ன வந்த பூனை மாதிரி மாட்டிக்கிட்டேங்களா?” சாக்கடைமித்திரன்….மன்னிக்கவும் ..சங்கமித்திரன் அவர்களே

   பின்னூட்டம் by smarttamil | செப்ரெம்பர் 24, 2010 | மறுமொழி

 7. well done ஸ்மார்ட். இன்றைக்கு சாமி இல்லை என்று சொன்னால் எவனும் நம்ப மாட்டன். அதனால் இவர்களுக்கு பொழப்பு ஓடனும். தன தலித்களுக்கு ஆலயப்பிரவேஷம் வாங்கித் தர வேண்டும் என்று பொழப்பு ஓடுது . டுடே எழவு (வினவு) தளத்தில் இளையராஜா என்ற தலைப்பில் வெறும் பார்பன எதிப்பு மட்டும் போடுகிறார்கள் தகர உண்டியல்காரர்கள்.

  பின்னூட்டம் by goiy | செப்ரெம்பர் 24, 2010 | மறுமொழி

 8. /*“கருவாடு தின்ன வந்த பூனை மாதிரி மாட்டிக்கிட்டேங்களா?” */

  நீங்கள் பதில் கூறுவதாக நினைத்து உளறி உள்ளீர்கள்….நீங்கள் மலத்தை தின்பவர் என்பதை ஒப்புகொண்டமைக்கு நன்றி…அப்படி இருப்பதால் தான் இந்து மதம், பார்ப்பான்,பெரியாரின் சாதி ஒழிப்பு பற்றி புரியவில்லை…. புராணம் படிச்சி மூளை மலுன்கிடுத்து….பாவம்…. கருவாடு திங்க வந்த பூனை யாரு என்பது படிப்பவர்களுக்கு தெரியும்……பகுத்தறிவு இருந்தால் பதில் கூறுங்கள் என்று முதலில் கருவாடு போருக்க வந்த பூனை யாரு?

  பின்னூட்டம் by sangamithiran s | செப்ரெம்பர் 25, 2010 | மறுமொழி

  • ஐயா கோபம் வேண்டாம் நீங்கள் சொன்னதற்கு உங்கள் வழியில் பதில் சொல்லியுள்ளான் இந்த ஸ்டுபிட்….மன்னிக்கவும் ..ஸ்மார்ட். நான் பார்ப்பனுமில்லை இந்துவும் இல்லை என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

   //நீங்கள் மலத்தை தின்பவர் என்பதை ஒப்புகொண்டமைக்கு நன்றி//
   இது ஐயா மனிதர்களால் எப்படி முடியும்?

   //பகுத்தறிவு இருந்தால் பதில் கூறுங்கள் என்று முதலில் கருவாடு போருக்க வந்த பூனை யாரு?//
   நான் குறிப்பிட வருவது இப்படி சரியான பதிலில்லாமல் மாட்டிக் கொண்டுவிட்டீர்கள் என்கிறேன். மற்றபடி கருவாடு போருக்கு வந்த பூனை யாருன்னு கேட்டா பெரியார் என்று தான் சொல்வேன்.

   சரி ஆத்திரம் வேண்டாம் நிதானமாக யோசித்து முதல் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
   ‘பெரியாராகவே இருந்தாலும் சாதியோடு வா என்னும் பிற்போக்குத்தனம் நிறைந்த மாநிலம்’ என்று தெரிந்தும் ஏன் முற்போக்காக சாதி பெயரில்லாமல் போகவில்லை?

   பின்னூட்டம் by smarttamil | செப்ரெம்பர் 25, 2010 | மறுமொழி

 9. கேள்வி 1: “நாயக்கர் என்றால் தான் ஆந்திராவில் தெரியும் ” என்று தெலுங்கில் பெரியார் படத்தின் பெயர் காரணத்தின் விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது. அப்படியென்றால் நாயக்கர் சமூக பலத்தைப் பெற அப்பெயரில் தான் ஆந்திராவில் அறிமுகமானாரா?

  பதில்.1: கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது: நாயக்கர் என்று தெலுங்கு மக்களால் அறியப்பட்டிருக்கிறார். ஆனால், அவராகத் திட்டமிட்டு அப்பெயரை பரப்பவில்லை. அதனால் அவருக்கு எந்த பலனும் இல்லை. (ஆந்திர சாதிப்பெயர் நாயுடு என்பதுதான், நாயக்கர் அல்ல).

  கேள்வி 2:* பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல என்று சொன்னால் மறுப்பீர்களா?

  பதில்.2: நிச்சயமாக மறுப்போம்.

  எந்த ஒரு தனிப்பட்ட சாதியினரையும் ஒழிப்பது பெரியாரின் நோக்கம் அல்ல. உண்மையில் பெரியார் பார்ப்பனர்களுக்கு எதிரானவரே அல்ல. அவர் சாதீய மேலாதிக்கத்தையே எதிர்த்தார். அனைத்து சாதியினருக்கும் சம உரிமைக் கேட்டார்.

  ஆதிக்கம் ஒழியவேண்டும் என்று சொல்வது ஆதிக்கசாதியினருக்கு தீங்காகத்தான் தெரியும். சுரண்டலை எதிர்த்தால் அடுத்தவன் உழைப்பில் வாழ்வோருக்கு எரிச்சல் வரும்தான். இந்தியாவுக்கு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக் கோரியபோது பிரிட்டிஷாருக்கு எரிச்சல் வரவில்லையா? அது போலத்தான் இதுவும்.

  கேள்வி 3:* திராவிடக் கொள்கை, திராவிட இனம், திராவிட பகுத்தறிவு என்று பதவி ஆசையில் இந்தியாவை பிரிக்க நினைத்தவர் பெரியார். இந்த திராவிடக் கொள்கை மற்ற மாநிலங்களில் உள்ள பற்று எவ்வளவு? அவருக்குப் பிறகும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் மற்ற மாநிலத்தில் திராவிட போலிப் பிரச்சாரம் எடுபவில்லை என்பதை அறிவீர்களா?

  பதில்.3: பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது, திராவிட நாடும் பிரிக்கப்பட வேண்டும் என்று பெரியார் கோரினார். இது ஒரு நியாயமான கோரிக்கை. விடுதலைக்கு பிறகு அண்ணாவும் இதே கோரிக்கையை முன்வைத்தார். ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு’ என்கிற முழக்கம் மிகப்பிரபலமானது.

  இந்தியா மீது சீனா படையெடுத்தபோது இந்த கோரிக்கை வலுவிழந்தது. அண்ணா ஆட்சிக்கு வந்த போது – அரசியல் சாசனத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் – திராவிட நாடுகோரிக்கை கைவிடப்பட்டது. “ஆனால், திராவிட நாட்டிற்கான தேவை” இருப்பதாக அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

  திராவிடக் கோள்கை மற்ற மாநிலங்களில் எடுபடாதது ஒன்றும் பெரிய விஷயமல்ல. பெரியார் காலத்திலேயே திராவிடக் கொள்கை என்பது தமிழ்பேசும் பகுதிகளில் மட்டும்தான் எழுச்சியாக இருந்தது.

  உண்மையில் திராவிடம் என்பது தமிழ் பேசும் பகுதியின் ஒரு அரசியல் வடிவம்தான். “தமிழர்” என்கிற பதத்திற்கு ஒரு மாற்றாகத்தான் “திராவிடர்” என்கிற பதத்தை பெரியார் உருவாக்கினார்.

  காரணம் மிக எளிதானது – தமிழர் என்றால் பார்ப்பனர்களும் தங்களை தமிழர் என்று கூறுவர். அதேசமயம் தமிழ்பேசும் பகுதியில் வசிக்கும் பார்ப்பனர் அல்லாத பிறமொழியினர் இதில் சேரமுடியாது.

  திராவிடர் என்றால் அது ஆரியத்துக்கு எதிரானது. பார்ப்பனர் சேரமுடியாது. தமிழ்பேசும் பகுதியில் வசிக்கும் பார்ப்பனர் அல்லாத பிறமொழியினர் இதில் சேரமுடியும்.

  எனவே, திராவிடம் என்பது தமிழ்பேசும் பகுதியின் அரசியல் வடிவம்தான். மற்ற மாநிலங்களில் இது இல்லாதது ஒன்றும் வியப்பில்லை.

  (காஷ்மீர் சிக்கல், இராமஜென்மபூமி. இராமர் பாலம் – இதெல்லாம் ஏக இந்தியாவுக்கும் பெரிய பிரச்சினை என்று பேசுகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் யாராவது இவற்றைக்கண்டு கொள்கிறார்களா? தமிழ்நாட்டு மக்கள் ஈழப்படுகொலையை கண்டு கவலை கொள்கின்றனர். ஆனால் ஏக இந்திய மக்கள் இதனை முக்கியமாக நினைப்பதில்லையே! – அது போலத்தான் திராவிடமும்).

  பின்னூட்டம் by அருள் | செப்ரெம்பர் 25, 2010 | மறுமொழி

 10. Part 2:

  கேள்வி 4: * மதம் என்கிற கண்ணாடி வழியே பார்க்காமல் தனி மனிதனாக ஒரு இறை நம்பிக்கையாளரை மதித்து அவரைப் பாராட்டியதுண்டா? இல்லையென்றால் இறை மருப்பாளரைத் தவிர மற்றவரெல்லாம் மட்டி மடையர்களா?

  பதில் 4: உங்கள் நினைப்பு தவறு. இறை நம்பிக்கையாளர்களை பெரியார் மதித்து போற்றியது உண்டு. வள்ளலாரின் பாடல்களை அவர் நூலாக வெளியிட்டார்.

  கடலூர் ஞானியார் மடத்தின் ஆன்மீகவாதி ஞானியார் அடிகள் ஒரு இந்துமதத்துறவி. அவரிடத்தில் பெரியார் பெரிதும் மதிப்பு கொண்டிருந்தார். 02.05.1925 அன்று குடியரசு மாத இதழின் முதல் பிரதியை ஞானியார் அடிகள் கைகளினால் வெளியிடச்செய்தார் பெரியார்.

  கேள்வி 5:* அன்றிலிருந்து சாதி என்கிற விஷயத்தைத் தவிர வேறு ஏதாவது முற்போக்கான சிந்தனையில் நாட்டுக்கு என்ன செய்தார்?

  பதில் 5: இது முட்டாள்தனமான கேள்வி. பெரியார் அவரது காலத்தின் எல்லா பிரச்சினைகளையும் முன்னெடுத்து பிரச்சாரம் செய்தார். இன்று தமிழ்நாடு வடமாநிலங்களைவிட பலவற்றில் முன்னிலையில் இருப்பதற்கு அவரது வழிகாட்டலே காரணம் என்பதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  கேள்வி 6: * ஒதுக்கீடு முறையை அமல்படுத்தப் பாடுபட்டவர்கள் என்கிற காரணத்தால் கேட்கிறேன் ஒவ்வொரு சாதிக் கட்சியும் அரசிடம் அளவிற்கு அதிகமாக ஒதுக்கீடுகள் கேட்கிறதே! இதற்கு என்ன வழி? ‘..நிதி’ அவர்களின் பேரன்களுக்கு மட்டும் ஒதுக்கீடு வழங்கலாமா?

  பதில் 6: எந்த சாதி, எதனைப் பேர் என்கிற விவரம் இல்லாததுதான் இதற்கு காரணம். சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால், இக்கேள்விக்கு தேவை இருக்காது.

  கேள்வி 7: * ராமாயணம் போன்ற மதப் புராணங்களில் நொட்டை எனப்படும் குறைகள் கண்டுபிடித்து பக்கம் பக்கமாக எழுதும் கழகக் கண்மணிகள் ஏன் அதில் உள்ள நல்ல விஷயங்களை எழுதுவதில்லை? தர்மத்திற்காக கொள்கையா? இல்லை கொள்கைக்காக தர்மமா?

  பதில் 7: அதான் நல்ல விஷயங்களை எழுத நிறைய பேர் இருக்கீங்களே? அப்புறம் என்ன? இராவணன் எவ்வளவு பெரிய வீரன் என்று பெரியார் புகழ்ந்து எழுதியிருக்கிறார். மாவலி மன்னனின் சிறப்பை கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார். சம்புகன், ஏகலைவன், கர்ணனின் சிறப்பை பலரும் பேசியிருக்கின்றனர்.

  அதெல்லாம் போகட்டும்: பெரியாரின் கருத்துக்களில் எவையெல்லாம் நல்ல விஷ்யங்கள் என்று நீங்கள் ஏன் எழுதுவதில்லை. தர்மத்திற்காக கொள்கையா? இல்லை கொள்கைக்காக தர்மமா?

  கேள்வி 8: * கடவுள் இல்லை என்பதுதானே இவரின் கொள்கை அதற்குத்தானே கோவில்களையும் சிலைகளையும் உடைக்கின்றனர் பின் எதற்கு தலித்களுக்கு ஆலயப்பிரவேசம் வாங்கித் தர வேண்டும்? கூட்டம் சேர்க்கவா?

  பதில் 8: கடவுள் இல்லை என்பதெல்லாம் ஒரு கொள்கை இல்லை. கடவுள் நம்பிக்கையை முன்வைக்கும் இசுலாமையும், பவுத்தத்தையும் பெரியார் போற்றிப் பேசியிருக்கிறார். கடவுளின் பெயரால் பார்ப்பனர்கள் செய்கிற கொடுமைக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் கொள்கை.

  எல்லா இடத்திலும் சம உரிமை என்கிற வகையில்தான் தலித்துகளின் ஆலயப்பிரவேசமும் பார்க்கப்படுகிறது.

  கேள்வி 9: * கடவுள்களை ஆபாசமாகக் காட்டி எழுதி பகுத்தறிவை வளர்ப்பதாகச் சொல்லும் கழக கண்மணிகள் ஏன் பெரியார் இணைந்த நிர்வாண சங்கத்தைப் பற்றி ஒப்புக்குக் கூட எழுதுவதில்லை? உபதேசம் ஊருக்கு மட்டுமா?

  பதில் 9: தவரான கருத்து. பெரியார் குறித்த எல்லா வரலாற்று தொகுப்புகளிலும் அவர் நிர்வாண சங்கத்தில் சேர்ந்த்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

  பின்னூட்டம் by அருள் | செப்ரெம்பர் 25, 2010 | மறுமொழி

 11. Part 3:

  கேள்வி 10: * அன்றைக்கு எடுத்த அதே சாதி ஆதிக்கத்தைத் தான் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சமூகத்தில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாததைப்போல வேறு எதுவும் சிந்திக்கமுடியவில்லையா? இல்லை அறிவில் பரிணாமமில்லையா?

  பதில் 10: அந்தந்த காலகட்டத்தின் எல்லா பிரச்சினைகளையும்தான் பெரியார் வழியில் பொதுவாழ்வில் உள்ளோர் பேசுகின்றனர். சாதி ஆதிக்கம் இன்னமும் ஒரு முக்கிய பாதிப்பாக இருப்பதால் அதற்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நோயாளிக்கு என்ன நோய் என்று கண்டறிந்து அதற்குதான் சிகிச்சையளிக்க வேண்டும். இல்லாத நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது. இருக்கிற நோயை கண்டுகொள்ளாமல் விடவும் முடியாது.

  கேள்வி 11:* அன்று ஆதிக்கச் சாதி மக்களை அடிமைப் படுத்தியது என்று இன்று எழுதும் நீங்கள் கண்முன்னே ஒரு அரசியல் குடும்பம் பல தொழில்களில் ஆக்கிரமித்து வருமானம் ஈட்டி கொள்ளை அடிப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை கண்ணுக்கும் கறுப்புச் சட்டையா?

  பதில் 11: நீங்கள் சொல்கிற பிரச்சினையை அதிமுக, மதிமுக ஆகிய ‘பெரியார் வழிவந்த’ கட்சிகள் முன்வைத்து போராடுகின்றன.

  கேள்வி 12:* பெரியார் கொள்கைகளை பலர் பினபற்றுவதாகச் சொன்னாலும் கொள்கையின் வாரிசாக காட்டும் தி.க.மற்றும் பெரியார் தி.க. ஏன் சண்டைப் போட்டுக் கொல்கிறது? கொள்கையில் ஏதாவது கொள்ளைபோகிவிட்டதா?

  பதில் 12: தமிழ்நாட்டில் இந்து முன்னணி பல பிரிவாக இருப்பது ஏன்? இந்து மதத்திற்காக பேசும் அமைப்புகளில் பிளவு ஏன்? கொள்கையில் ஏதாவது கொள்ளைபோகிவிட்டதா?

  கேள்வி 13: * சாதி வேற்றுமையை ஒழிக்கத்தான் சாதி ஒதுக்கீடு என்று பிரச்சாரமிடும் நீங்கள், சதிகள் ஒழிந்தபின் அந்த ஒதுக்கீடு திரும்ப எடுக்கப்படும் என்று எங்குமே பிரச்சாரம் செய்யாதது ஏன்? ஆரசியல் நடத்த முடியாதே அதனாலா?

  பதில் 13: சாதி வேற்றுமை ஒழிந்தால் இட ஒதுக்கீட்டின் தேவையே இருக்காது. அதுசரி, இன்னும் குழந்தையே பிறக்கவில்லை. அதற்குள் ஏன் பேர்வைக்க அலைகின்றீர்? முதலில் இட ஒதுக்கீடு அமலாகட்டும், அப்புறம் பார்க்கலாம்.

  கேள்வி 14:* பகுத்தறிவை வளர்க்க கடவுள் சிலைகளை உடைப்போம் என்கிறீர்களே அப்படி என்றால் பெரியார் வன்முறையைத்தான் சொல்லிக் கொடுத்தாரா? வன்முறை எடுத்தபிறகு எங்கே பகுத்தறிவு வேலை செய்யும்?

  பதில் 14: உங்க ஆளுங்களைப் போல அடுத்தவரின் மசூதியை இடிக்கும் வன்முறையை பெரியார் கற்றுக்கொடுக்கவில்லை.

  கடவுள் சிலையை உடைக்கச் சொன்னது ஒரு அடையாளப் போராட்டம். அதுவும் கோயிலில் உள்ள சிலைகளையோ, அடுத்தவர் வீட்டில் உள்ள சிலைகளையோ அல்ல. அவரவர் சொந்தமாக சிலை வாங்கி அதனை உடைக்கும் போராட்டம்தான் நடத்தப்பட்டது. சொந்த சிலையை உடைத்தவர்கள் எல்லோரும் இந்துக்கள்தான். மாற்று ம்தத்தினரும் அல்ல. நீங்கள் சொல்வது போல இதில் வன்முறை எதுவும் இல்லை.

  பின்னூட்டம் by அருள் | செப்ரெம்பர் 25, 2010 | மறுமொழி

 12. எனக்கென்ன கோபம்…..நான் சொன்ன மலத்தில் இருந்து அரிசி பொருக்கி கொடுத்தால் தின்னாலும் தின்பீர்கள் என்ற கருத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லை…எனவே நான் நீங்கள் ஒப்புக்கொண்டதாக அதனை சொல்லி உள்ளேன்…

  நீங்கள் அடிப்படை செய்தி ஏதும் தெரியாமல்…..பகுத்தறிவு இருந்தால் பதில் கூறுங்கள்…இதற்க்கு பதில் கூறுங்கள் என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது……தெலுங்கு பெரியார் படம் சாதி பெயர் எடுக்கப்பட்டு அதாவது ஒரு குறியீடு போட்டு …அவர் சாதியை மறுத்ததை குறிக்கும் வகையில் வெளியடபட்டுவிட்டது..அதுபற்றி இதோ http://paraneetharan-myweb.blogspot.com/2010/08/blog-post_19.html . ……………ீங்கள் அது தெரியாமல்…இதற்க்கு பதில் கூறுங்கள்..அதற்க்கு பதில் கூறுங்கள் என்பது வேடிக்கையாக உள்ளது…இது போலவே உங்கள் மற்ற அணைத்து விவாதமும் உள்ளது……அது போகட்டும் தோழர் அருள் அவர்கள் உங்களுக்காக ஸ்பூன் பீட் பண்ணி இருக்கிறார்..இப்படியும் புரிய வில்லை என்றால்…விதண்டா வாதம் என்றுதான் பொருள்……

  பின்னூட்டம் by sangamithiran s | செப்ரெம்பர் 26, 2010 | மறுமொழி

 13. /******* உண்மையில் ஆரியர்கள் படைஎடுத்துவந்ததாக நம்பமுடியாவிட்டாலும் ஒரு ஒப்புக்கு எண்ணினாலும் அடுத்து படையெடுத்த முகமதியர்கள், வெள்ளைக்காரன் ஆகியவர்களை என்ன செய்தீர்கள்? ரெண்டாயிரம் ஆண்டுக்கு முன் படை எடுத்தவர்களை ஒழிக்க இன்று போராடுவதுதான் உங்கள் பகுத்தறிவு.*******/

  ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தால் என்ன ரெண்டு நாளைக்கு முன் வந்தால் என்ன…சமுகத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி நம் மக்களை அடிமை படுத்தி மூடநம்பிக்கை புகுத்தும் வரை அவர்களுக்கு எதிரானா எதிர்ப்பு தேவையே…….இந்த தமிழகத்தில் 3 % இருக்கும் அவா எல்லா அதிகாரத்திலும் இருந்து கொண்டு இருந்தால்……97 % இருக்கும் பார்ப்பனரல்லதோர் வேடிக்கை பார்க்க வேண்டுமா?

  மகமதியர்களும், வெள்ளைகாரனும் ஆட்சி செய்தானே ஒழிய…….வேதம் சொல்லுது,கீதை சொல்லுது என்று கூறி சூத்திர பட்டம் கட்டி வேலைவாய்ப்பையும்..கல்வியும் கொடுக்க மறுக்கவில்லை. பார்ப்பான் இன்றைக்கும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமை எதிர்த்து கர்ப்ப கிரகத்தில் நுழையும் உரிமை அவனுக்கே உண்டு என்று உச்ச நீதிமன்றவரை சென்றுல்லன்…….இப்படி இருப்பவர்களை எதிர்க்காமல் என்ன செய்ய?

  /********* தமிழ் ஓவியா தளத்தில் தான் படித்தேன் ராஜாஜியைத் திட்டாத நாளில்லை நீங்கள் போய் படிக்கவும். ராஜாஜியுடன் நட்பு பாரட்டியதெல்லாம் அப்பப்ப திட்டவே என்று தெரியும் ******/

  தமிழ் ஓவியா தளத்தை படிப்பதற்கு மிக மிக நன்றி….அனால் ஊன்றி படித்த மாறி தெரியவில்லை..நுனிப்புல் மேய்வீர்கள் போலும்…நட்பு என்பது வேறு கொள்கை என்பது வேறு……..தனி பட்ட முறையில் அய்யா அவர்கள் ராஜியிடம் நட்பு பாராட்டினர்..எப்படி என்றால் மணியம்மை திருமணம் பற்றி கூட யாரிடமும் சொல்லாமல் ராஜாஜியிடம் தான் முதலில் சொன்னார் (இதனை தான் அறிஞர் அண்ணா கூட தாங்கிக்கொள்ள முடியாமல் ராஜாஜியுடன் ரகசியம் என்னவோ என்று விமர்சித்தார்)….கொள்கை அடிபடையில் எதிர்த்தார்…..அதன் எதிர்ப்புதான் நீங்கள் தமிழ் ஓவியா தளத்தில் படித்தது….

  ராஜாஜியிடம் மட்டும் அல்ல குன்றக்குடி அடிகளாரிடமும் அய்யாவிற்கு நட்பு உண்டு..அதனால் தான் குன்ற குடி அடிகளாரே சொல்லுவர் நானும் பெரியாரும் போகும் பாதைதான் வேறு ஆனால் சேரும் இடம் ஒன்று என்று சொல்லுவார்கள்……அந்த நட்பு இன்று ஆசிரியர் வீரமணி,கலைஞர் காலம் வரை தொடர்கிறது…….

  /******** இப்போது இருக்கும் தொண்டர்களின் பதிவெல்லாம் இந்துமதம் குறிப்பாக ஒரு இனத்தை மட்டும்] அதை மட்டுமே நொட்டை சொல்லவது போல் இருப்பது ஏன்?********/

  எந்த மதத்தின் ஆதிக்கம் அதிகம் இங்கு உள்ளதோ அதனை தான் விமர்சனம் செய்ய முடியும். உங்கள் மொழியில் நொட்டை சொல்ல முடியும். காரல் மார்க்ஸ்,எங்கல்ஸ்,சாக்ரடிஸ்,லெனின்,சார்லஸ் டார்வின் ,கலிலியோ எல்லோரும் இந்து மதத்தையா விமர்சனம் செய்தார்கள்….அவர்கள் நாட்டில் உள்ள கிருத்துவம் பற்றி விமர்சனம் செய்து தான் தங்களுடைய முற்போக்கு கருத்துகளை மக்களிடம் கூறினார்கள்…அவர்களுக்கு அங்கு உள்ள அதிகம் செலுத்திய மதம் கிருத்துவம்…அது போல இங்கு இந்து மதம்…அதுவும் மிக மிக மனிதனை இழி நிலைக்கு கொண்டு செல்லும் மதம்….பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாதகமான மதம்..என்று பெரியார்,அம்பேத்கர் பல சான்றுகளுடன் நிருபித்துள்ளனர்….இந்து மதம் என்றால் பார்பனியம்..பார்ப்பனியம் என்றால் இந்து மதம் என்று.

  /*****************சரி இப்போது கேட்கிறேன் எல்லா சாதியும் அளவுக்கதிகமாக இட ஒதிக்கீடு கேட்கிறதே இதற்கு என்ன வழி?************/

  அதற்க்கு தான் இப்பொழுது சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு..இதன் படி யாருக்கு எவளவு என்று அளவுகோல் வந்து விடும்..அத்தோடு இல்லாமல் இது வரை பலன் அடையாமல் உள்ளவர்கள் விபரமும் தெரிந்து விடும்.

  /********** இந்த பதிலை சொல்லுவதற்கு கொஞ்சம் மன்னிக்கவும் உங்களுக்கு மட்டும் தான் அது ஒன்றல்ல மற்றவருக்கு ஆபாசம் என்கிற ரீதியிலிருந்தால் ஒன்றுதான் *****/

  பார்த்துங்க……..

  /******* பிறந்த நாள் என்பது கொள்கையைப் பாராட்ட, பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும்.]] என்று அவரே சொல்லி எதிர்க்கிறார் மேல பாருங்கள்.********/

  நான் என்ன மேல பார்ப்பது …இது பற்றி நான் என் வலைதளத்திலேயே நவம்பர் 11 2009 அன்று போட்ட பதிவு http://paraneetharan-myweb.blogspot.com/2009/11/blog-post_2052.html . அய்யா சொல்லி இருப்பது கொள்கையை பரப்ப, பாராட்ட வேண்டுமே தவிர…வேறு ஏதும் செய்ய அல்ல என்பது தான்…கொஞ்சம் ஊன்றி படியுங்கள்…

  /******* மீபத்தில் குரான் எரிப்பு போல செய்தார் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. குரான் எரிப்பவர்களுக்கு நடந்த தண்டனை போல
  உங்களுக்கும் பாயாமல் இருந்ததற்குக் காரணமே இந்து மதத்தில் உள்ள சகிப்புத் தன்மை.************/

  இந்து மதத்தில் சகிப்பு தன்மை அல்ல…தவறு இருந்தால் எப்படி எதிர்க்க முடியும்….சாக்கடை போல பார்ப்பனியம் தழுவிய இந்து மதம் அதனை எதிர்த்து விமர்சனம் வைத்தால் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் …வேறு வழி இல்லை…உள்ளதை தானே சொல்லுகிறார்கள் என்று தலையாட்டிக்கொண்டு போக வேண்டியதுதான்…இதனை நீங்கள் மாற்றி “சகிப்பு” என்று பட்டம் கொடுப்பது வேடிக்கையிலும் வேடிக்கை….

  குறிப்பு: விளக்கம் வேண்டும் என்றால்…பெரியாரின் இந்த சிந்தனை எனக்கு மாற்று கருத்து உள்ளது..பதில் கூறுங்கள் அல்லது விளக்கம் தேவை என்று கேளுங்கள்…அதனை விட்டு பகுத்தறிவு இருந்தால் பதில் கூறுங்கள் என்பதும்…கருவாடு தின்ன வந்து மாட்டிகொண்டார்கள் என்பதும் விவாததிற்கு ஆரோக்கியம் அல்ல.

  பின்னூட்டம் by சங்கமித்திரன் | செப்ரெம்பர் 26, 2010 | மறுமொழி

  • //அதனை விட்டு பகுத்தறிவு இருந்தால் பதில் கூறுங்கள் என்பதும்…கருவாடு தின்ன வந்து மாட்டிகொண்டார்கள் என்பதும் விவாததிற்கு ஆரோக்கியம் அல்ல//

   அப்படிக் கேட்டதற்கு காரணம் தமிழ் ஒவியா போன்றவர்கள். இதற்கு முன் அந்த தளத்தில் கேட கேள்விக்கு இன்னும் பதிலில்லாமல் உள்ளது. அதான் அப்படிக்கேட்டேன். குற்றமில்லாத நீங்கள் குறுகுறுக்க வேண்டாம்.
   ஆரோக்கிய மான விவாதத்தை தான் நானும் விரும்புவேன் நீங்கள் ஸ்டுபிட் என்றதற்கான விளைவு தான் நீங்கள் குறிப்பிடும் வரிகள். ஆப்புக்கு ஆப்பு சரியா போச்சு இனி மேட்டரை அலசுவோம் வாங்க

   பின்னூட்டம் by smarttamil | செப்ரெம்பர் 27, 2010 | மறுமொழி

 14. /*எப்படியோ உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. முதலாவது, பாமரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பணமுதலாளிகளான மற்ற சாதிக்காரர்களை ஏதும் செய்யாததால் நீங்க சாதி ஒழிப்பிற்குப் போராடவில்லை ஒரு இனத்தை அழிக்கப் போராடுகிறீர்கள்.என்று எண்ணிக்கொள்ளலாம். ரெண்டாவது, உண்மையில் ஆரியர்கள் படைஎடுத்துவந்ததாக நம்பமுடியாவிட்டாலும் ஒரு ஒப்புக்கு எண்ணினாலும் அடுத்து படையெடுத்த முகமதியர்கள், வெள்ளைக்காரன் ஆகியவர்களை என்ன செய்தீர்கள்? ரெண்டாயிரம் ஆண்டுக்கு முன் படை எடுத்தவர்களை ஒழிக்க இன்று போராடுவதுதான் உங்கள் பகுத்தறிவு.*/

  ஆரியர் படை எடுத்து வந்தார்கள் என்று நம்ப முடியவில்லையா? கைபர் கணவாய் வழியாக வந்த கூட்டம் …சிந்து வெளி நாகரிகத்தின் ஆராய்ச்சியை படியுங்கள்……உண்மை புலப்படும்…..

  வெள்ளை காரன் முகமதியர்கள் எல்ல மனுதர்மம் சொல்லுது, கீதை சொல்லுது வெங்காயம் சொல்லுதுன்னு சூத்திர பட்டம் கட்டி கல்வியும் வேலைவாய்ப்பையும் தர மறுத்தவர்கள் அல்ல…பார்பனியம் மட்டும் அந்தவேளை இன்றளவும் செய்து வருகிறது. 3 % இருக்கும் பார்ப்பனர்கள் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தினால் 97 % இருக்கும் பார்ப்பனரல்லதோர் வேடிக்கை பார்க்க வேண்டுமோ?
  இன்னும் பார்ப்பனர்களில் அக்கபோரை தெரிந்து கொள்ள…இதோ அண்மையில் விடுதலையில் வெளிவந்த ஒரு கட்டுரை..http://naathigam.blogspot.com/2010/09/blog-post_2948.html

  /*தமிழ் ஓவியா தளத்தில் தான் படித்தேன் ராஜாஜியைத் திட்டாத நாளில்லை நீங்கள் போய் படிக்கவும். ராஜாஜியுடன் நட்பு பாரட்டியதெல்லாம் அப்பப்ப திட்டவே என்று தெரியும் */

  ராஜியை கொள்கை அளவில் அய்யா விமர்சித்து உள்ளது தான் நீங்கள் தமிழ் ஓவிய தளத்தில் படித்தது…மற்றபடி அய்யா அவர்கள் மணியம்மை திருமணம் பற்றி ராஜாஜியிடம் தான் ஆலோசித்தார்..அதனால் அறிஞர் அண்ணாவே ராஜாஜியிடம் ரகசியம் பேசிய பெரியார் என்று விமர்சித்தார்.. ..அதற்க்கு ராஜாஜி அய்யாவுக்கு எழுதிய அந்தரங்க கடிதம் கூட இன்று ஆசிரியர் வீரமணி வெளியிட்டுள்ளார்….பாரும்..

  அது மட்டும் அல்ல இது போல குன்றக்குடி அடிகளாரிடமும் அய்யா அவர்கள் நட்பு பாராட்டினார்…அது இன்று ஆசிரியர் வீரமணி, கலைஞர் காலம் வரை தொடர்கிறது….

  /*அற்புதம்! உண்மைதான் பெரியாரைப் பற்றி உங்களைப் போன்றோர் தளங்கள் மூலமாகத் தான் தெரியும் முழுவதும் தெரியாது. அவர் அப்படி சிந்தித்திருக்கிறார் என்றால் இப்போது இருக்கும் தொண்டர்களின் பதிவெல்லாம் இந்துமதம் குறிப்பாக ஒரு இனத்தை மட்டும்] அதை மட்டுமே நொட்டை சொல்லவது போல் இருப்பது ஏன்?*/

  இங்கு எந்த மதத்தின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அதை தான் எதிர்க்க முடியும் …உங்கள் மொழியில் சொல்லவேண்டுமானால் நோட்டை சொல்ல முடியும்…..காரல் மார்க்ஸ் ,எங்கல்ஸ்,டார்வின்,கலிலியோ,ஐன்ஸ்டீன்…இப்பொழுது ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய “கடவுள் ஒரு பொய் நம்பிக்கை” போன்றவர்கள் கிருத்துவம் குறித்து விமர்சனம் செய்து தங்கள் முற்போக்கு கருத்துகளை மக்களிடம் சொல்லி உள்ளார்கள். அங்கு அது பெருபான்மை …அது போல இங்கு பார்ப்பனிய மதமான இந்து மதம்…அது மனிதனை மிக மிக இழிவு படுத்தி சூத்திர பட்டம் கட்டி அடிப்படை உரிமைகளை தர மறுப்பது…எனவே அதனை இங்கு விமர்சித்து ஆகவேண்டும்.

  /*சரி இப்போது கேட்கிறேன் எல்லா சாதியும் அளவுக்கதிகமாக இட ஒதிக்கீடு கேட்கிறதே இதற்கு என்ன வழி?*/

  அதற்க்கு தான் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு….இதில் அளவுகோல் நிர்ணயிக்கப்படும் …அத்துடன் யார் இன்னும் இதன் மூலம் பயன் பெறாமல் இருக்கிறார்கள் என்ற உண்மையும் புலப்படும் ….பொறுத்திருங்கள்…

  /*இந்த பதிலை சொல்லுவதற்கு கொஞ்சம் மன்னிக்கவும் உங்களுக்கு மட்டும் தான் அது ஒன்றல்ல மற்றவருக்கு ஆபாசம் என்கிற ரீதியிலிருந்தால் ஒன்றுதான் */

  பார்த்துங்க..பதில் கூற வேண்டும் என்று உளறாதீர்கள்…

  /*[பிறந்த நாள் என்பது கொள்கையைப் பாராட்ட, பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும்.]] என்று அவரே சொல்லி எதிர்க்கிறார் மேல பாருங்கள்.*/

  நான் என்ன மேலே பார்ப்பது…இது பற்றி நான் நவம்பர் 11 2009 போட்ட பதிவு http://paraneetharan-myweb.blogspot.com/2009/11/blog-post_2052.html ..அதில அய்யா அவர்கள் கொள்கையை பாராட்டவும்…பரப்பவும் என்றும் சும்மா வாழ்த்து கூற அல்ல என்றும் தெளிவாக சொல்லி இருப்பார்…அதனை தான் இப்பொழுதும் திராவிடர் கழகம் பின்பற்றுகிறது…கொஞ்சம் ஊன்றி படியுங்கள்..உண்மை புரியும்

  /*சமீபத்தில் குரான் எரிப்பு போல செய்தார் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. குரான் எரிப்பவர்களுக்கு நடந்த தண்டனை போல உங்களுக்கும் பாயாமல் இருந்ததற்குக் காரணமே இந்து மதத்தில் உள்ள சகிப்புத் தன்மை.*/

  இந்து மதத்தை விமர்சனம் செய்தால் ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும்..ஏன் என்றால் அதில் இருக்கும் குப்பைகளை கிளறி தான் அம்பேத்கர் ,பெரியார் ஆராய்ச்சி செய்து புட்டு புட்டு வைத்துள்ளனர்…இந்து மதம் என்றால் பார்ப்பனியம்..பார்ப்பனியம் இந்து மதம்…என்று…அதில் இருக்கும் ஆபாசம் மற்றும் ஒழுக்கம் கெட்ட,மானம் கெட்ட செயல்களை விமர்சிப்பது அதனை இது வரை எந்த இந்து மத தலைவர்களும்..பதில் கூற முடியவில்லை…இதற்க்கு பெயர் உங்கள் அகராதியில் “சகிப்பு”…வாயால் சிரிக்க முடியவில்லை ….

  குறிப்பு: உங்களுக்கு பெரியார் கருத்துகளில் மாறுபட்ட கருத்து…அல்லது எதிர்வினை இருந்தால் விளக்கம் அல்லது கேள்வி கேளுங்கள் பதில் தருகிறோம்…அதனை விட்டு..பகுத்தறிவு இருந்தால் பதில் கூறுங்கள்…..கருவாடு திங்க வந்து மாட்டிகொண்டீர்கள் எனபது…நாகரிகம் அல்ல….

  பின்னூட்டம் by சங்கமித்திரன் | செப்ரெம்பர் 26, 2010 | மறுமொழி

 15. சார் இவர்கள் ரெட்டம் வேடம் போடுபவர்கள். கேட்டால் இந்து மத நம்பிக்கையைப் பற்றி அவதூறாக திட்டிப் பதிலளிப்பார்கள் கடைசியில் எல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தான் எல்லாம் செய்தோம் நீங்க பாட்டுக்கு கும்பிட்டால் நாங்க என்ன செய்யப் போறோம் என்றும் பினாத்துவார்கள்.

  பின்னூட்டம் by Sundara Moorthy | செப்ரெம்பர் 30, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: