ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

பெரியார் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதா? (தொடர் பதிவு)

வன்னியர் சங்கத்தை 1980ல் உருவாக்கிய ராமதாஸ், கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்தார். ஆனால், 107 ஜாதியை ஒருங்கிணைத்து, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அனைத்து சமுதாய மக்களையும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். “ஜாதி இல்லை’ என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினாலும், ஜாதி வெறியோடு தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை கோடி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்தப்படுகிறது. 20 சதவீதம் பிரித்து தரவில்லை என்றால், கருணாநிதி அரசு, மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்

இப்படிக்கு வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பேசியதாக ஒரு செய்தி
கல் எல்லாம் மாணிக்கக் கல் அல்ல!

`சமூகநீதியில் கழகம் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல.
சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டே வெளியே வந்தார்.

அதே காங்கிரசைக் கொண்டே சமூக நீதிக்காக அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்தவும் செய்தார்.

மத்திய அரசுத் துறைகளிலே இடஒதுக்கீடு கிடையாது; 1940-இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டிலேயே இதுகுறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாலும் செயலுக்கு வரவில்லை. ஜனதா அரசு அமைத்த மண்டல் குழு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பரிந்துரை செய்தாலும் (31.12.1980) அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பார்ப்பன ஆதிபத்தியம் அனுமதித்து விடவில்லை.

திராவிடர் கழகம் அதற்காக 42 மாநாடுகளை நடத்தவேண்டியிருந்தது; 14 போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. டில்லி வரை சென்று போராடியது திராவிடர் கழகம் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி தலைமை யில்.

அதன் விளைவாக இந்தியா முழுமையும் உள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சமூகநீதியின் ஆணி வேரையே வெட்டும் பொருளாதார அளவுகோலைத் திணித்தார். அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போரிட்டது; இறுதி வெற்றி கழகத்துக்கே! மேலும் ஒரு புதிய வாய்ப்பு யாரும் எதிர்பார்க்காதவகையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை இருந்து வந்த 31 விழுக்காட்டை 50 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் என்னும் நிலை உறுதியாயிற்று.

50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடுப் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தன் போக்கில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அதனை எதிர்த்து 69அய் நிலை கொள்ளச் செய்யும் பொறுப்பும் திராவிடர் கழகத்தின் தோள்மீதுதான் விழுந்தது. தமிழர் தலைவர் உருவாக்கிக் கொடுத்த சட்டம்தான் 31 சி பிரிவு என்பது. அது ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டது.

அதனை எதிர்த்தும் ஆதிக்கவாதிகள் உச்சநீதிமன்றம் சென்றனர். 1994 முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆயம் (Bench) சமூக நீதியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. (13.7.2010)

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடரப்படுகிறது. அதனை நிலை நிறுத்த சில யோசனைகளையும் உச்சநீதிமன்றம் தந்திருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நீதியரசர் திரு. எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் உள்ளது. அதனைக் கலந்து கொண்டு, தக்க புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தந்து வெற்றி பெறும் வைர ஒளி மின்னுகிறது. இதன் மூலம் இந்திய அளவுக்கே நல்வழி காட்டும் பாதை திறந்து விடப்பட்டுள்ளது.

ஒன்றை இந்த நேரத்தில் குறிப்பிடுவது மிக மிக முக்கியம்.

தந்தை பெரியார் இல்லாத கால கட்டத்தில் சமூக நீதித்திசையில் இவ்வளப் பெரிய சாதனை களைச் செய்து வந்தது திராவிடர் கழகம் தான். அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனைகள், சட்டப் பேரறிவு, நுண்மான் நுழைபுலம் இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக இருந்து வருகின்றன.

மேலும் திராவிடக் கழகம் நடத்தியப் போராட்டங்களின் பட்டியலை இங்கே விரிவாகப் படிக்கவும் [தேவைப் பட்டால்].
இடஒதுக்கீடு வந்த வரலாறு
——-மின்சாரம் அவர்கள் 17-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை 1. பிற்படுத்தப் பட்டவருக்காக பாடுபட்டதாகச் சொல்லும் பெரியார் ஏன் வன்னியருக்கு 20% தனி ஒதிக்கீடுக் கேட்டுப் போராட வில்லை?
 2. வன்னியர் இனத்திற்குப் பெரியார் துரோகம் இளைத்துவிட்டாரா?
 3. சாதி ஒழிப்புக்கு பெரியார் போராடினார் என்பது பொய்யா?
 4. இன்றுயிருக்கும் பெரியாரின் தொண்டர்கள் ஏன் இதனை ஆதரிக்கவில்லை?


முந்தைய பத்திக்கு வந்த கருத்துக்கள் பிந்தைய பத்திக்கும் பொருந்துவதால் கீழே தொகுக்கப் பட்டுள்ளது.

ESVARAMURTHY – coimbatore,இந்தியா

2010-07-29 14:35:31 IST

பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் ஜாதியை சேர்ந்தவர்களும் தனி இட ஒதுக்கீடு கேட்டால் நாடு தாங்குமா…

ச.kalaiarasan – salem,இந்தியா
2010-07-29 12:17:58 IST

ஆம் இது நியாயமான போராட்டம் தான் அருந்ததியர், இஸ்லாமியர், உள் ஒதுக்கீடு பெற்றுள்ளபோது வன்னியர்கள் போராட்டம் சரியே இது அமைதியான அஹிம்சை வழி நடை பெற்றுள்ளது தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்கவேண்டும்…

மதுரை முத்து – madurai,இந்தியா
2010-07-29 10:33:30 IST

ஆட்சியில் இருக்கும்பொழுது இவன்களுக்கு ஜாதி தெரியாது. எல்லாப்பக்கமும் போய் பிட்சைஎடுத்து பார்த்துவிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை என்றவுடன் ஜாதிக்கு 20 % வேண்டும். என்னா ஒரு மிருக குணம். இவன்களைஎல்லாம்………

SU.ராஜூமோகன். – coimbatore.,இந்தியா
2010-07-29 10:02:11 IST

நீயெல்லாம் திருந்தவே மாட்டியா ?அறிவோட பேசிறியா…..அறிவில்லாம பேசிறியா ?.

பாலா மதுரை – mumbai,இந்தியா

2010-07-29 09:43:02 IST

நல்ல வேளை, வன்னியர்களுக்குக் தனி நாடு கேட்டு போராடவில்லை. இவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது பாரதத்தில், நஞ்சு, முளையிலேயே கிள்ளி ஏறிந்திருக்க வேண்டும். மக்களே நன்கு சிந்திங்கள் இவர்கள் எல்லாம் பசு தோல் போர்த்திய புலிகள். இவர்களுக்கு அணைத்து சாதி மக்கள் ஒன்று சேர்ந்தால், இவர்கள் போன்றவர்கள் (சாதி அரசியல் மட்டும்) நடத்துபவர்கள் சுக போக வாழ்க்கை நடத்த முடியாது. மக்களே நன்கு சிந்திங்கள், ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருப்பார்..

சி.ராமசாமி – tup,இந்தியா
2010-07-29 19:20:01 IST

நாங்களும் ரெண்டு கோடி பேர் இருக்கோம்..நாங்களும் சட்டத்தை கையில் எடுக்கட்டுமா..?ரெண்டு போரையும் பொடா சட்டத்துல புடிச்சு உள்ள போடுங்க…….

கே – bangalore,இந்தியா
2010-07-29 15:31:17 IST

என்ன இது?? உங்க ஜாதி மட்டும் தான் நாட்டில் உள்ளதா?? உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று மரம் வெட்ட; இல்லை தண்டவாளம் தகர்க்க.. உருப்படியாய் ஒன்றும் தெரியாது!!..

ப பிரபு – bhuj,இந்தியா
2010-07-29 15:24:27 IST

ஜாதிகள் இல்லையடி பாப்பா. அனைத்து துறைகளிலும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே சிறந்தது. இனியும் இது போன்று பிச்சை கேட்க வேண்டாமே..

AXN பிரபு – chennai,இந்தியா
2010-07-29 14:36:08 IST

முதலில் ஜாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும். இந்திய இறையாண்மைக்கும் நாட்டின் பொருளாதார அறிவியல் முன்னேற்றத்துக்கும் இந்த ஜாதீய சிந்தனைகளும் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகளும் மிகபெரிய ஆபத்து. ஜாதீய ஒதுக்கீடுகள் அந்த அந்த ஜாதிகளில் உள்ள ஏழைகளுக்கு கிடைப்பதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியில் உள்ள கலெக்டர் மந்திரி மற்றும் உயர் அதிகாரிகளின் பிள்ளைகள் அந்த அந்த ஜாதீய ஒதுக்கேடுகளை பெறுவது வெட்கக்கேடும் பெருத்த அநீதியும் ஆகும்..

இதற்கு பதில் சொல்லாத பெரியார் தொண்டர்களை இந்த தொடர் பதிவை தொடர அழைக்கிறேன்.

Advertisements

ஜூலை 29, 2010 - Posted by | Uncategorized

13 பின்னூட்டங்கள் »

 1. indian – mumbai,இந்தியா 2010-07-29 16:12:34 IST
  இவெனெல்லாம் பிச்சை எடுத்து பிழைக்கலாம். கேடு கெட்ட மிருகம். சாதியாம் சாதி நாட்ட குட்டி சுவராக்குரானுங்க….

  indian – almadina,செனகல் 2010-07-29 15:42:40 IST
  சாதி வைத்து ஊரை ஏமாற்றி நீ பிழைக்க மற்றவர்களை தூண்டி விடும் உன் போன்ற அரசியல்வாதிகள் இந்நாட்டுக்கு தேவையே இல்லை காடுபசன்களா !..

  பீ vetti – nigeria,இந்தியா 2010-07-29 12:53:11 IST
  நீ உண்மயான தைரிய சாலி நா கைவை டா ரயில்வே லா பார்போம்..

  இவையும் திட்டி வந்த கமெண்ட்டுகளே! எனக்கு என்னமோ சாதி வாரி ஒதிக்கீட்டை பத்தி சொன்னதால பெரியார் கவலைப் படுவாருனு கீழே போட்டுவிட்டேன் தோழர்களே

  பின்னூட்டம் by smarttamil | ஜூலை 29, 2010 | மறுமொழி

 2. சாதிகளைப் பற்றி சமூகம் இன்னும் பேசிக்கொண்டு இருப்பதே பெரியார் தம் சாதி ஒழிப்பு போராட்டத்தில் சொல்லிக்கொள்ளத்தக்க வெற்றி பெறவில்லை என்பதையே காட்டுகிறது எனச் சொல்பவர் உள்ளனர்.
  இரண்டு: “சமூகத்தில் சாதி பிரிவினைகள் கூடாது; இருந்தாலும், சில சாதிகள் மேல் சாதி என்றும் சில (உண்மையில் பலப்பல ) கீழ் சாதி என்றும் கருதப்படக்கூடாது”; இது எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது?

  மூன்று: சாதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? அல்லது பிரிவினைகள் அதிகமாகி உள்ளதா?
  : நான்கு: இட ஒதுக்கீடு முறை ஓரளவாவது வெற்றி பெற்றிருக்கிறதா? அதாவது “தாழ்ந்த” சாதிகளைச் சேர்ந்தவர் ஒதுக்கீடு முறையினால் பயன் பெற்று பொருளாதார நிலையிலும் அதன் காரணமாக சமூக அந்தஸ்திலும் உயர்ந்து உள்ளனரா?
  ஐந்து: “பிற்படுத்தப்பட்டவர்”, “தாழ்ந்த சாதியினர்” மொத்தத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்து உள்ளனரா?

  கடைசியாக, ஒதுக்கீடு முறை தொடர வேண்டுமா? ஆம் என்றால், ஏதாவது மாற்றங்கள் வேண்டுமா?

  இந்த வினாக்களுக்கு விடைகளைத் தேட வேண்டும். பெரும்பான்மை பின்னூட்டக்காரர்கள் என்ன கருதுகிறார்கள் எனக் கருத்து தெரிவித்தால் இந்த விவாதத்தை துவக்கி வைத்த பதிவர் அடுத்த மண்டல் போன்ற கமிஷனுக்கு தலைமை ஏற்கலாம்.
  ஆனால் ஒன்று: ஒதுக்கீடு முறை பற்றி வினாக்கள் எழுப்பினாலே அவர்கள் பார்ப்பனர்களாக அல்லது பார்ப்பனீய வாதிகளாக முத்திரை குத்தப்பட்டு பின்னூட்டங்கள் ஆட்டோ மூலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனம்.

  பின்னூட்டம் by vignaani | ஜூலை 30, 2010 | மறுமொழி

  • ///சாதிகளைப் பற்றி சமூகம் இன்னும் பேசிக்கொண்டு இருப்பதே பெரியார் தம் சாதி ஒழிப்பு போராட்டத்தில் சொல்லிக்கொள்ளத்தக்க வெற்றி பெறவில்லை என்பதையே காட்டுகிறது///
   100% உண்மை. சாதியின் பெயரால் வன்கொடுமைகள் நடக்கிறது என கூக்குரலிடுபவர்கள், அதே சாதியின் பெயரால் லாபம் மட்டும் வேண்டும் என்பது ஈனத்தனம்

   ///ஒதுக்கீடு முறை பற்றி வினாக்கள் எழுப்பினாலே அவர்கள் பார்ப்பனர்களாக அல்லது பார்ப்பனீய வாதிகளாக முத்திரை குத்தப்பட்டு பின்னூட்டங்கள் ஆட்டோ மூலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனம்.////
   ஆமாம்

   பின்னூட்டம் by smarttamil | ஜூலை 30, 2010 | மறுமொழி

 3. சாதி ஒழிப்பு சாத்தியமில்லா ஒன்றாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இறுகிக் கிடக்கிறது. பெரியார் காலத்தில் இந்து மதத்தில் மட்டும் தான் சாதி இருந்தது. இப்போது கிறித்துவர்கள் முஸ்லிம்கள் என எல்லோர் மத்தியிலும் சாதி உள்ளது.

  அழிக்க முடியாத சக்தியாக சாதி இருக்கிறது என்பதற்கு கலைஞரே சாட்சி.

  http://sagotharan.wordpress.com/

  பின்னூட்டம் by ஜெகதீஸ்வரன் | ஜூலை 30, 2010 | மறுமொழி

 4. சாதிகளை பற்றி மட்டுமா பெரியார் பேசினார். மது ஒழிப்பைக் கூடதான். எந்த தளித் இணையமும், தளித் மக்களின் பிரதிந்திகளும் இதைப் பற்றி பேசியதாகவோ, ஏன் நினைத்ததாகவோ கூட தெரியவில்லை.

  பெரியார் படையினர் இதற்கும் பதில் வைத்திருக்க கூடும்.

  http://sagotharan.wordpress.com/

  பின்னூட்டம் by ஜெகதீஸ்வரன் | ஜூலை 30, 2010 | மறுமொழி

  • உங்கள் கருத்து உற்று சிந்திக்கத் தக்கது. பெரியார் தொண்டர்கள், பெரியார் சாதிக்கு மட்டும் போராடியதாக போலியான பிரச்சாரங்களை எடுத்துவிட்டு பெரியார் மீதான மதிப்பை குறைக்கிறார்கள்

   பின்னூட்டம் by smarttamil | ஜூலை 30, 2010 | மறுமொழி

   • பெரியார் தன நீண்ட சமூக போராட்ட வாழ்வில் பல பிரச்சனைகளை குறித்து கருத்து தெரிவித்து சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்றார் என்பது உண்மை. (அவற்றில் மது விலக்கும் ஒன்றாய் இருக்கலாம். )
    அவற்றில்,மிக முக்கியமானவை இரண்டு: சாதி ஒழிப்பு/ பார்ப்பனீய ஒழிப்பு ஒன்று; இன்னொன்று நாத்திகம்.
    இந்த பதிவு முதல் பிரச்னையில் அவர் வெற்றி எத்தனை அளவுக்கு என வினவுவது

    பின்னூட்டம் by vignaani | ஜூலை 31, 2010

 5. இஸ்லாமியர்கள், அல்லா என மாயையில் மயக்கம் கொள்ளாமல் ,

  http://****ingmuslim.wordpress.com

  இங்கு வாருங்கள், தெளிவு பெருங்கள்.

  – மனிதன்.

  மனிதம் காக்க வந்தவன்

  [edited by admin]

  பின்னூட்டம் by மனிதன் | ஜூலை 31, 2010 | மறுமொழி

  • உங்கள் தளம் வீணாக எனது இஸ்லாமிய சகோதரர்களைக் காயப்படுத்தும் என தடுத்திருக்கிறேன்.

   நன்றி.

   பின்னூட்டம் by smarttamil | ஓகஸ்ட் 1, 2010 | மறுமொழி

 6. //இந்த பதிவு முதல் பிரச்னையில் அவர் வெற்றி எத்தனை அளவுக்கு என வினவுவது//
  கள்ள மௌனம் களையும் வரைக் காத்திருக்கலாம்.

  பின்னூட்டம் by smarttamil | ஓகஸ்ட் 1, 2010 | மறுமொழி

 7. உண்மையில் சாதியொழிப்பதாக கூறி நமது முகத்தில் தான் கரி பூசியுள்ளார்.
  ஜாக்கிரதை

  பின்னூட்டம் by ஜாக்கிரதைkumar | ஓகஸ்ட் 7, 2010 | மறுமொழி

 8. பாஸ், முதல்ல இந்தக் கொசுக்கடிய ஒழிக்க ஒரு வழி சொல்லுங்க பாஸ்.
  http://kavithai07.blogspot.com/2010/08/7_13.html

  பின்னூட்டம் by BHAKYARAJ | ஓகஸ்ட் 15, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: