ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

அயோத்தி தீர்ப்பு பன்முகப் பார்வை

சில போலி பகுத்தறிவாளிகள் மற்றும் மதத்தால் அரசியல் செய்பவர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் ஸ்மார்டான விடைகள்

இராமர் இங்குதான் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

நீங்கள் ஆதாரமாக பிறந்த தேதி சான்றிதழ் காட்டச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் ராமர் வனவாசம் சென்றபோது சார்பிக்கேட்டை தொலைத்துவிட்டார் போதுமா! இந்த கேள்விக்கும் வழகிற்கும் சம்மந்தமில்லையே! அந்த சர்டிபிக்கேட் கிடைத்தால் இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கப் போகிறீர்களா? இந்த வழக்கே சர்ச்சைக்குரிய இடம் கோவிலுக்கா? மசூதிக்கா? என்பதுதான்

மசூதியிருந்ததற்கு ஆதாரமிருக்கு. ராமர் கோவில் அம்பது ஆண்டுக்கு முன்தான் வந்தது

மசூதி இருக்கும் இடத்திற்கு கீழே ஒரு ராமர் வழிபாட்டு அமைப்பு இருந்தது தொல்பொருள் துறையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அதற்கு சார்பிக்கேட் இருக்கு கேட்டுப் பாருங்க. மசூதி கட்டிய பிறகும் கொஞ்ச காலம் கழித்து ராமர் வழிபாடு நடந்துள்ளது அதன்தொடர்ச்சியாகத் தான் நீங்கள் கூறும் தற்போதைய கோவில் வந்தது.

இது ராமர் கோவில் என்றும், பாபர் இடுத்துத் தான் கட்டினார் என்பதற்கும் ஆதாரம் என்ன?

இது இரண்டும் பொய்யாகவே இருந்துவிட்டுப் போகட்டும். இதுவரை அங்கே கோவில் இருந்தது என்று ஒப்புக் கொண்டுவிட்டபின் மீண்டும் கோவில் கட்டுவதில் சிக்கல் என்ன?

மசூதி இடித்தது தவறில்லையா?

இஸ்லாமியர்களின் கொள்கைப்படி ஒரு கோவில் மேல் கட்டிய கட்டிடம் மசூதி ஆகாது என்று அவர்கள் நம்புகிறார்கள். மற்றும் இஸ்லாமியர்களைப் பொருத்தமட்டில் உருவ வழிபாடு இல்லை. அந்த இடம்தான் இந்த இடம்தான் என்று இறை வழிபாட்டை உருவகப்படுத்தமாட்டார்கள். அங்கே பல காலம் தொழுகை நடந்துள்ளதால் அந்த இடம் வழிபாட்டு இடம் என்பதில் எனக்கு மறுப்பில்லை. ‘பதிலுக்கு பதில்’ என்று மசூதி இடிப்பு செய்ததில் எனக்கு உடன்பாடில்லை அது தவறுதான்.ஆனால் இந்த வழக்கு அதுவல்ல என்பதும் கவனிக்கவேண்டியவை.

விடுதலைக்கு முன்பிருந்த கால கடன்களை இப்போது தீர்க்க நினைப்பது தவறு. அதனால் அந்த நிலத்தில் பாபர் மசூதிதான் இருக்கவேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்றபோதும் பழைய வரலாற்றுக் கடன்களை நாம் அடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். உதாரணம் முன்னிருந்த சாதிக்கொடுமைக்கு இன்று பரிகாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்பிருந்த ஆதி வாசிகளுக்கு இன்றும் பெயரளவிலாவது அவர்களது மலை பகுதிகளில் உரிமை காக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு ஒதிக்கீடும் இந்தமுறையில் தான். அதனால் பழையக் கணக்கானாலும் அதன் பாதிப்புத் தன்மை யறிந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது எனது கருத்து

இந்த நிலம் ராமருக்கு முன்பு ஆதிவாசிகளுக்குத் தான் சொந்தம் கொடுப்பார்களா?

இது வீம்பான கேள்வி. இந்த பூமி உண்மையில் எல்லா ஜீவராசிக்கும் சொந்தமானது பறவை, விலங்கு, புழு, பூச்சிக்கும் உண்டு. ஆனால் சட்டப்படி பெரும்பான்மையான மக்கள் ஒற்றுமையான புரிந்துணர்வில் நிலங்கள் பிரிக்கப்படுகிறது. இந்த நிலம் புராண காலம் முதல் ஹிந்துக்களின் நம்பிக்கையில் பாத்தியமான நிலம். அதுபோக அங்கே முன்பே கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கும் போது அவர்களின் உரிமை மறுக்கமுடியாதவொன்று. உண்மைதான் ஆதிவாசிகளும் இந்த கோவிலுக்குள் செல்லலாமே உரிமை உண்டு.

அயோத்தி நிலம் முழுவதும் இந்துக்களுக்கே

ஒப்புக் கொள்கிறேன் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நிலம் என்று நீங்கள் கேட்பது. ஆனால் இதே மண்ணின் மைந்தர்கள் இந்த முஸ்லீம்கள். இவர்கள் பக்கமும் வழிபாடு நடத்தியதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. இவர்களுக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு செங்கலும் சொந்தம் இருவரும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அங்கே மசூதி மட்டும் அல்லது கோயில் மட்டும் கட்டலாம் அப்படியில்லாத போது இந்த தீர்ப்பின் அடிப்படையில் இரண்டையும் கட்டலாம்.

மற்ற கேள்விகளெல்லாம் இதற்கு சப்பைக் கட்டு கட்டுவதற்காக தேடித் பிடித்து கேட்கப்படுபவை இருந்தும் விடை கூறுகிறேன்.

தனது தாய் நாட்டிலேயே தங்கள் மத நம்பிக்கையை பினபற்ற முடியாமல் அல்லல் படுபவர்கள் இந்துக்கள். வடக்கே அயோத்தியையும் பிடிங்கிக் கொண்டு தெற்கே ராமர்பாலத்தையும் பிடிங்கிக் கொண்டு, மத்தியில் தேஜோ மஹாலையும் [தற்போதைய தாஜ்மகால்] என பிடிங்கிக் கொண்டு தவிக்க விடுவது. பற்றாக் குறைக்கு மேற்கேயிருந்து தீவிரவாதிகள் வேறு என அல்லல்படுபவர்கள் இந்த இந்துக்கள்.

உங்கள் இந்துத்துவா வாதத்தை நான் மறுக்கிறேன். தங்கள் மத சிந்தனையிலிருந்து நீங்கள் இன்னும் போது சிந்தனைக்கு வரவில்லை. வரலாற்று தாக்கங்கள் இயற்கையின் பாதையில் மேற்கொண்ட சில வலிகளை மட்டும் பார்த்து நாட்டில் இந்துவிற்கு பாதகம் என்பது சரியில்லை. மதம் என்பதற்கு மேலாக மனிதம் என்பதை பார்க்க வேண்டும் இது ஜனநாயக நாடு மத சகிப்புத்தன்மை கொண்டது. சில நேரங்களில் விட்டுக் கொடுக்கவேண்டும் [மதவெறுப்பு கம்யுனிஷ்ட்கள் கையில் சிக்காதவரை]

ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய் சொந்தம் கொண்டாடினாங்களாம்.ஆளுக்கு பாதி என்று தீர்ப்பு சொன்னார்களாம்.சரியென்று பெறாத பெண் சொன்னார்களாம்
அவர்களிடமே கொடுத்துடுங்கன்னு பெற்ற தாய் சொன்னார்களாம்

கொடுத்துடுங்கன்னு சொன்ன பெற்ற தாய் யார்? யாருமே அப்படி சொல்லவில்லையே

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறார்கள்.
கோவில் மரத்தில் இலவசமாக பிடிங்கிய தேங்காயாக இருக்கப் போகிறது. உங்கள் கதையை ஆராய்ந்துப் பார்க்கவும்.

இது ஆதாரமில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.
பாபர் கோவிலை இடிக்கவில்லை என்று சொல்லியது நம்பிக்கை அடிப்படையில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதை சொல்லி இஸ்லாமிய இந்து மோதலை உருவாக்காமல் இருந்தவரை நன்மைதானே! கோவில் இருந்ததற்கு தொல்லியல் ஆதாரம் இருக்கு. மசூதி இருந்ததற்கு சமூகவியல் ஆதரமிருக்கு. இந்த கேள்வி கேட்கையில் உங்களுக்கு சுய நினைவு இருந்ததற்கு ஆதாரமிருக்கா?

இந்துக்கள் கோவிலில் புத்த விகாரங்கள் இருக்கு. ஹிந்துக்கள்தான் அடாவடி செய்து மசூதியை கேட்கிறார்கள்.
இந்திய தோன்றல் மதங்களில் ஒரு பிணைப்பு உண்டு. புத்தரையும் வணங்குபவர்கள் ஹிந்துக்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்.

இனி எல்லா மசூதிகளையும் இடிப்பார்கள்.
இது வீணான கற்பனை.

சிறுபான்மையினர் நசுக்கப்படுகிறார்கள்.
மூன்றில் ஒரு பங்கு கொடுத்தும் நசுக்கப் படுகிறார்கள் என்று முழு நிலத்தையும் கொடுத்து பெரும்பான்மையினரை விரட்ட வேண்டுமா?

காஷ்மீரையும் இப்படி பிரித்து தரமுடியுமா?
எப்படி? அங்கே ரகுநாத், அமர்நாத் கோவில்கள், பகு கோட்டை நிலம் என்று ஹிந்துக்களுக்கு மட்டும் பிரித்து தரச் சொல்கிறீர்கள? அங்கே மசூதிகளும் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.

கைபர் கணவாய் வழியாக வந்த இந்த ஆரியர்கள்
கைபர் கணவாய்க்கு மேல அப்கானிஸ்தான் சீனா ரஷ்யா ஆகியவற்றில் எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்லலாமே?

மதச்சார்பின்மை அரசு என்று சொல்லிக்கொண்டு இஸ்லாமியரை நசுக்குகிறார்கள்.
மசூதிகளின் நிர்வாகத்தை கோவில்களை கையகப்படுத்துவதைப் போல செய்யாததால் மதச்சார்பின்மை அரசு என்று சொல்கிறீர்களா?

உண்மையான இஸ்லாமியர்கள் இந்துக்களின் வலியைப் புரிந்துள்ளார்கள் அதுபோல உண்மையான இந்துக்களும் இஸ்லாமியர்களின் வலியைப் புரிந்துக் கொண்டுள்ளார்கள். இருவரும் அடுத்தவரின் நீதியை உணர்கிறார்கள். இருவரும் சகோதரர்களாக வாழவே விரும்புகிறார்கள். இந்த தீர்ப்பின் அடிப்படையில் ராம நவமிக்கு சுண்டலை ரகுமானுக்கும் கொடுக்கலாம். ரமலானுக்கு நோம்பு வைத்து ரங்கராஜனுக்குக் கொடுக்கலாம். ரெண்டு பெறும் கைகளை போலி பகுத்தறிவாளிகள் மற்றும் மதத்தால் அரசியல் செய்பவர்கள் பைகளில் தொடைக்கலாம்.

ஒக்ரோபர் 1, 2010 - Posted by | Uncategorized

17 பின்னூட்டங்கள் »

 1. ஏன் சிறுபான்மையினருக்கு மட்டும் சுண்டல் பெருபான்மையிப்னருக்கு மட்டும் சாப்பிட கஞ்சி?

  பின்னூட்டம் by வழிமறிச்சான் | ஒக்ரோபர் 1, 2010 | மறுமொழி

 2. அன்புள்ள ஆர்.எஸ்.எஸ்.காரரே,
  இது நம்பிக்கையின் அடிப்படையில்தான் என்று தீர்ப்பில் தெளிவாக உள்ளது. சென்றுப் படித்து விட்டு வரவும் ஆதாரமுள்ளது என்று புலன்காயிதமடைய வேண்டாம்

  பின்னூட்டம் by கொருக்குபேட் குமார் | ஒக்ரோபர் 2, 2010 | மறுமொழி

 3. அப்பு நீங்க என்ன சொன்னாலும், இந்த முட்டாளுங்க கேக்க மாட்டங்க . தூங்கறவனை எழுப்பலாம். தூங்கற மாதிரி நடிக்கறவங்களை எழுப்ப முடியாது

  பின்னூட்டம் by karthik | ஒக்ரோபர் 2, 2010 | மறுமொழி

 4. ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய் சொந்தம் கொண்டாடினாங்களாம்.ஆளுக்கு பாதி என்று தீர்ப்பு சொன்னார்களாம்.சரியென்று பெறாத பெண் சொன்னார்களாம்
  அவர்களிடமே கொடுத்துடுங்கன்னு பெற்ற தாய் சொன்னார்களாம் ]]

  அட அட அடா! என்னா ஸ்மார்ட்டுங்க நீங்க

  அப்ப ஒத்துக்கிறீங்க குழந்தை இரண்டாக பிய்க்க பட்டு இருக்கின்றதென்று

  [[கொடுத்துடுங்கன்னு சொன்ன பெற்ற தாய் யார்? யாருமே அப்படி சொல்லவில்லையே]]

  இதையும் எதிர்ப்பார்க்குறீங்களா – ச்சே எம்பூட்டு நல்லவருங்க நீங்க

  பின்னூட்டம் by நட்புடன் ஜமால் | ஒக்ரோபர் 2, 2010 | மறுமொழி

  • உண்மைதாண்ணே! குழந்தை இரண்டாக் பிரிக்கப்படுவதைத் தவிர விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தில் யாருமில்லையே! சேர்ந்து வளர்ப்போம் என்கிறார்களே! பெற்றதாய் ஒன்றும் வளர்த்த தாய் ஒன்றுமாக இருப்பதால் வேறு என்ன செய்வது?

   பின்னூட்டம் by smarttamil | ஒக்ரோபர் 2, 2010 | மறுமொழி

 5. அந்த மசூதியைப் பார்த்தாலே தெரியும் வழிபாட்டு இடமில்லை. கோவிலை இடித்துக் கட்டிய கட்டிடம்

  பின்னூட்டம் by Ganesh | ஒக்ரோபர் 2, 2010 | மறுமொழி

 6. அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

  இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

  நீதியரசர் D.V.சர்மா தீர்ப்பு மட்டுமே அது இராமர் பிறந்த இடம் என்கிறது. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:

  GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:

  “The area covered under the central dome of the disputed structure is the birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”

  GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:

  “5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.

  6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”

  இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

  அயோத்தி தீர்ப்புக்கு பின் நீதிமன்ற வாசலில் பேட்டியளித்த பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் இரவிசங்கர் பிரசாத் “இராமர் பிறந்த இடம் இதுதான் என்று நீதிமன்றம் கூறிவிட்டது” என்று திரித்துப்பேசினார். அது தொலைக்காட்சியில் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது. பல பத்திரிகைகளும் அதே கருத்தை வெளியிட்டு வருகின்றன.

  ஏன் இந்த பித்தலாட்டம்?

  இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்?

  பின்னூட்டம் by அருள் | ஒக்ரோபர் 2, 2010 | மறுமொழி

  • //இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்//
   அவர் எதற்குச் சொன்னார் என்பதும் தெரியாது அவர் உண்மையில் எதற்காகச் சொன்னார் என்பதும் தெரியாது. ஆனால் நீங்கள் தீர்ப்பை ஏற்கிறீர்கள் என்றுமட்டும் தெரிகிறது. நன்றி அய்யா

   பின்னூட்டம் by smarttamil | ஒக்ரோபர் 2, 2010 | மறுமொழி

 7. //உண்மையான இஸ்லாமியர்கள் இந்துக்களின் வலியைப் புரிந்துள்ளார்கள் அதுபோல உண்மையான இந்துக்களும் இஸ்லாமியர்களின் வலியைப் புரிந்துக் கொண்டுள்ளார்கள்.//

  நல்ல கருத்துகள்!!

  //ரெண்டு பெறும் கைகளை போலி பகுத்தறிவாளிகள் மற்றும் மதத்தால் அரசியல் செய்பவர்கள் பைகளில் தொடைக்கலாம்.//

  சபாஷ்.

  பின்னூட்டம் by Terror-Pandian | ஒக்ரோபர் 2, 2010 | மறுமொழி

 8. தொல்பொருள் ஆராச்சியாளர்கள் நீதிபதிகளின் வீட்டை மட்டுமல்ல rss காரர்களின் வீட்டு நிலத்தையும் ஆராச்சு செய்தால் ஏதாவது ஒன்று கிடைக்கத்தான் செய்யும் அதைவைத்து நீதிபதிகளதும் ,rss காரர்களின் வீட்டையும் வேறுயாருக்காவது பங்குபோடச்சொன்னால் விட்டு விடுவார்களா என்ன?
  அண்மையில் கூட தமிழ் நாட்டில் அதுவும் ஒரு இந்து சகோதரருடைய காணியில் அரபி எழுத்துக்களைகொண்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்தியில் படித்தேன் அதை வைத்து இந்த நீதி?மான்கள் அந்தநிலம் அரபியர்களுக்குதான் சொந்தம் என்று கூறுவார்களா என்ன.?

  பின்னூட்டம் by Niyas Lanka | ஒக்ரோபர் 2, 2010 | மறுமொழி

 9. “/ஆனால் ராமர் வனவாசம் சென்றபோது சார்பிக்கேட்டை தொலைத்துவிட்டார் போதுமா!”/
  பரவாலயே நல்லாத்தான் ஜோசிக்கிறீங்க தொலைத்தவர்.போலீஸிலோ அல்லது கட்ட பஞ்சாயத்து காரர்களிடமோ முறை இட்டிட்டதர்க்கு ஆதாரம் கேட்டிருகனுமா இல்லையா? இந்த தீர்பளித்த பாசிச நீதி?மான்கள்.

  பின்னூட்டம் by Niyas Lanka | ஒக்ரோபர் 6, 2010 | மறுமொழி

  • ஐயா புண்ணியவானே! உங்களுக்காகத் தான் அடுத்தப் பதிவில் தெளிவாகச் சொல்லிவிட்டேன். பிரச்சனை ராமருக்கும் பாபர் மசூதிக்குமல்ல

   பின்னூட்டம் by smarttamil | ஒக்ரோபர் 6, 2010 | மறுமொழி

 10. பொய்யை மூலதனமாக வைத்து புரட்சி செய்ய வந்த வினவு இணையதளத்தின் பித்தலாட்டங்கள்புரட்சி புரட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய வினவின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் படிக்க

  இங்கே கிளிக் பண்ணுங்கள்
  வினவின் பித்தலாட்டம் அம்பலமாகிறது
  http://ethirkkural.blogspot.com/2010/10/blog-post.html

  பின்னூட்டம் by பகுத்தறிவாளன் | ஒக்ரோபர் 11, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: