ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

கலாச்சார சீரழிவு. உதவுங்கள்.

{ஆபாசத்தை கலைக்கண்ணோடு பார்ப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கான ஒரு அழைப்பு.}

இணையப் பதிவுகளுக்கென்று சைபர்கிரைம் வேண்டும் என்ற வாதத்தை முன்னிருத்துவதாக பல சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடக்கிறது. ஆபாசம் என்றும் மனதை திசை திருப்புபவை மற்றும் சமூகப் பார்வையிலிருந்து மனிதனை தன்னலப்பேனியாக மாற்றுபவை. இணையம் வளர்ந்த அளவிற்கு அதன் பிற்போக்குத் தனமும் வளர்ந்துள்ளது. அதை போதிய பகுப்பாய்வுக்குட்படுத்தாவிட்டால் இணையமே நம்மை சீரழிக்கும் கருவியாகிவிடும். தனி மனித இச்சைகள் நான்கு சுவற்றுக்குள்ளும், நாகரீகமாக பொது இடங்களிலும் இருப்பதுதான், அவற்றுக்கான ஆரோக்கிய நடைமுறை. மருத்துவ ரீதியில் சொல்லப் படும் பாலியல் விஷயங்கள் நீங்கலாக வன்மத்தைத் தூண்டும் விஷயமாகத் தான் இணையத்தில் உள்ள பாலியல் தளங்கள் செய்கிறது. அவற்றை பரப்புவதும், அவற்றை தடுக்காமல் விட்டுவிடுவதும் நமக்கு நாமே செய்யும் தீக்குளிப்பு. பொதுவாக மற்ற இன, மொழி மக்களிடம் தமிழனுக்கு சிந்திக்கத் தெரியாது, தமிழச்சி என்றால் இளக்காரம் (நமது திரைப்படங்கள் செய்யும் அளவுக்கதிகமான ரீமேக்காலும் மசாலா வகைப் படங்களாலும் வந்தவை சரி… வேறவொரு நாள் பார்க்கலாம்) என்ற பொது தகவல் பரப்பப்படுகிறது. அதை மெய்பிக்கும் முகமாக இணையத்தில் பல தமிழ் சார்ந்த அபாச தளங்கள் உலவுகிறது. தமிழர்களின் உறவு முறையை எந்தளவுக்கு கேவலப்படுத்தமுடியுமோ அந்த அளவுக்கு நவீன பட வசதிகளுடன் அரங்கேறுகிறது. ப்ளாக்கரிலும், வேட்ர்பிராஸ் போன்ற இலவச இணைய தள சேவையில் அத்தகைய தளங்களை அனுமதிப்பதில் பல கட்டுப்பாடுகள் வைத்துள்ளனர், ஆனால் அவற்றை நடை முறைப் படுத்துவது அவற்றைச் சார்ந்த மக்களைப் பொறுத்தது. அதிகமான மக்கள் அதை படிக்கிறார்கள் என்கிற எண்ணத்தில் அந்த தளங்களை நீக்காமல் விட்டுவிடுகிறார்களோ என்னவோ! இன்றல்லது ஒரு நாள் நமது பிள்ளைகள் பாதிக்கப் படுகையில் நாம் நடவடிக்கை எடுக்க முனைவோமோ என்னமோ!

அந்த தலைப்பிற்குள் ஆழப் போவது கசக்கிறது. நாம் எப்படி தடுப்பது என்று எனதறிவுக்கு எட்டியதை பதிவு செய்கிறேன். தானாக கண்ணில் படும் அத்தகைய சீரழிவு தளங்களை புகார் படுத்துங்கள்.( சைபர் கிரைம் வரும் வரை)
ப்ளாக்கருக்கு: http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=adult_image&hl=en&blog_ID=
வேர்ட்பிரஸ்க்கு: http://en.wordpress.com/report-mature/
இங்கு சென்று புகார் அளிக்கலாம் எனக் கண்டுபிடித்துள்ளேன். இன்னும் புதிய தடுப்பு முறைகள் அறிந்தால் கூறுங்கள்.

வேர்ட் பிரஸ் தளத்தின் நம்பகத்தன்மை அறிந்துதான் அதை பலர்பயன்படுத்தி வருகிறார்கள், நான் கண்டவரை அண்மைய நாட்களாக பல பாலியல் தளங்கள் வேர்ட் பிரஸில் தொடங்கப்படுகிறது. நமது கண்ணை நாமே விலை கொடுத்து விற்பதுப் போல அவற்றின் இடுகைகள் முன்னணி இடுகையில் வந்து பலரின் கவனத்தை ஈர்க்கிறது. அதுவும் தமிழின் சுடான இடுகை பகுதியில் வந்து நிற்கிறது, இனி தமிழ் மெல்ல சாகுமோ? வேறு தளங்களில் இருக்கும் ஆபாச பதிவுகளை முடிந்தளவு திரட்டிகளும் தேடுதளங்களும் தவிர்ப்பது நடைமுறையில் இருக்கையில் இந்த வேண்டாத விஷயம் வேண்டாத மனக்குமுறலை உண்டுபண்ணுகிறது. வேடர் பிரஸ் தளவிதியிலும் அவைதடை செய்யப்பட்டுள்ளது. எனவே நான் ஒரு புகாரை இங்கு கொடுத்துள்ளேன். விருப்பமுள்ளவர்களும், விரும்பாவிட்டாலும் எனக்காக ஒரு புகாரை கொடுங்கள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த தளத்து முகவரியை மீண்டும் தரவேண்டிய தேவையில்லை; பதிக்கப்பாடாதவர்களுக்கு அந்த தளமுகவரி தந்து பாதிப்படைய வாய்ப்பு தரவிரும்பவில்லை

மேலதிக தகவலுக்கு பின்னூட்டுக. மேலதிக உதவிக்கு சிந்தனையை பரப்புக

Advertisements

மே 7, 2010 - Posted by | Uncategorized

9 பின்னூட்டங்கள் »

 1. எல்லாம் சரி!
  எனக்கென்ன டவுட்டுனா, நாங்கல்லாம் வேலையை மட்டும் பாக்குறோம், நீங்க மட்டும் எப்படி எங்க, எங்க ஆபாச தளம் இருக்குன்னு தேடுறிங்க!, அவ்ளோ ஆர்வமோ!?

  நாலு தியேட்டர் இருக்குற ஒரு காம்ப்ளக்‌ஷில் ஒரு ஷகிலா படமும் மற்ற மூன்றில் வேறு படமும் ஓடுது, நீங்க பிடிக்கலைன்னு வேற படத்துக்கு போவிங்களா, இல்ல ஷகிலா படம் போட்ருக்குன்னு கம்ப்ளையண்ட் கொடுக்க போவிங்களா!?

  சமூகத்தில் சீர்த்திருத்த வேண்டியது நிறைய இருக்கு, ஆனா உங்க கவலை இதிலே இருக்கு!

  ஆபாச தளத்திற்கு செல்வதால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்திருந்தால் நீங்கள் உண்மையில் ஸ்மார்ட்! ஆனா இப்போ!………………………………………

  பின்னூட்டம் by வால்பையன் | மே 7, 2010 | மறுமொழி

  • //எனக்கென்ன டவுட்டுனா, நாங்கல்லாம் வேலையை மட்டும் பாக்குறோம், நீங்க மட்டும் எப்படி எங்க, எங்க ஆபாச தளம் இருக்குன்னு தேடுறிங்க!, அவ்ளோ ஆர்வமோ!//
   அண்ணா, நாங்களும் வேலைத்தான் பார்க்கிறோம். ஆனால் அந்த தளங்கள் சுடான வேர்ட் பிரஸ் இடுகை வகையில் வந்து நல்ல பதிவுகளை மட்டப்படுத்துகிறது.

   //ஆபாச தளத்திற்கு செல்வதால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்திருந்தால் நீங்கள் உண்மையில் ஸ்மார்ட்! ஆனா இப்போ//
   உளவியல் அராய்ச்சி செய்ய நான் மன நலமருத்துவரில்லை. இருந்தாலும் அந்த விஷயத்துக்குள்ள போகபிடிக்கவில்லை.
   Reference: நீங்க பிடிக்கலைன்னு வேற படத்துக்கு போவிங்களா, இல்ல ஷகிலா படம் போட்ருக்குன்னு கம்ப்ளையண்ட் கொடுக்க போவிங்களா!?

   பின்னூட்டம் by smarttamil | மே 7, 2010 | மறுமொழி

 2. செக்ஸ் படங்களுக்கு எதிராக நீங்கள் தூக்கிப் பிடித்திருக்கும் கொடி வரவேற்கத் தக்கதே!

  ஆனால் //{ஆபாசத்தை கலைக்கண்ணோடு பார்ப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கான ஒரு அழைப்பு.}//

  இந்த அழைப்புதான் புரிய மறுக்கிறது !

  செக்ஸ் மற்றும் அது குறித்தான விசயங்களில் இது போல ரொம்பவும் அலட்டிக் கொண்டால் உங்களுக்கு ………….. எரிச்சல் என்று கிளப்பி விட்டு விடுவார்கள் ! மற்றபடி ஸ்மார்ட் !

  பின்னூட்டம் by ராஜன் | மே 7, 2010 | மறுமொழி

  • உங்களுக்கு கட்டாயம் புரிஞ்சுருக்கும். மேலும் அதை பயன் படுத்துபவர்களை அப்படி வஞ்சப் புகழ்ச்சியாகவும் கொள்ளலாம்.
   எது எப்படியோ சட்டத்திற்கு புறம்பான விஷயம் அதிகமாக நடக்கையில் சில விழிப்புணர்வு தேவை. உங்கள் கருத்துக்கு நன்றி

   பின்னூட்டம் by smarttamil | மே 7, 2010 | மறுமொழி

 3. நீங்கள் அந்த பிட்டு பிளாகுகளுக்கான லின்க்கு களை கொடுத்தால் நன்றாக இருக்கும் பிளீஸ்!

  வேற ஒண்ணுமில்ல அது பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்ததான் !

  பின்னூட்டம் by ராஜன் | மே 7, 2010 | மறுமொழி

  • உங்க அளவுக்கு அனுபவமில்லை..

   பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த தளத்து முகவரியை மீண்டும் தரவேண்டிய தேவையில்லை; பதிக்கப்பாடாதவர்களுக்கு அந்த தளமுகவரி தந்து பாதிப்படைய வாய்ப்பு தரவிரும்பவில்லை

   பின்னூட்டம் by smarttamil | மே 7, 2010 | மறுமொழி

 4. இது உண்மை தான் தாங்கள் சொல்வது போல் இணையம் இளைய சமுதாயத்தினரை அழிக்கும் முகமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. இம்மாதிரி தளங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் வசிக்கும் வசதி படைத்தவர்களால் தொடங்கப்படுகிறது. தமிழ் என்ற பெயரிலும் இம்மாதிரி தளங்கள் தொடங்கி இளைஞர்களை சட்ட்த்திற்கு புறம்பாகவும் தீவிரவாதிகளாகவும் மாற்ற முயற்சிகள் நடக்கிறது. எந்த அரசியல் தலைவரையும் நாகரிகத்துடன் விமர்சிக்கவேண்டும். அந்த பண்பாடுகள் இம்மாதிரி தீயநோக்கத்துடன் தொடங்கப்படும் தளங்கள் மக்களை சீரழிக்க தீவிரவாத கொள்கையை அவர்கள் மனதில் ஏற்றவே பயன்படுகின்றன. இந்த தளங்கள் வெளிப்படையாக இயங்குவதில்லை, இதை நிர்வகிப்பவர்கள் அனைவரும் சிறிய வயதுடையவர் மட்டுமல்ல. யாரை எப்படி வேண்டுமானாலும் அதாவது ஒரு நாட்டின் அதிபரை நாய், பேய் என்றும் அரசியல் தலைவர்களின் குடும்பங்களை கொச்சையாக கொலைகாரர்கள், துடைப்பக்கட்டையால் அடிக்கவேண்டும் என்று பிடிக்காதவர்களை பற்றி பச்சை பச்சையாக எழுதுவதற்காகவே தொடங்கப்பட்டுள்ளன. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஒருவர் சாப்பிடும் உணவு முதல் கொண்டு, பல்துளக்குவது, காலைக்கடன் முடிப்பது வரை தேநீர் கடையில் பல்துளக்காமல் பேசுவார்கள் அது போன்றே இந்த தமிழ் என்ற அடைமொழுயுடன் இணையதளங்கள் செயல்படுகின்றன. இவைகள் பல ஆபாச இணையதளங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. இதில் தெரியாமல் பங்கு பெற்று எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் மின்னஞ்சல் மூலம் திருடப்பட்டு அவர்களின் குடும்ப பெண்களை திட்டி தீர்ப்பது, கொலைமிரட்டல் விடுவது வரை நடைபெறுகிறது. இதற்கு பயந்து பலர் புகார் தெரிவிப்பதில்லை. இவை மாதிரியான தளங்கள் எந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படுவதில்லை. சும்மா பெயருக்காக சில விதிகளை வைத்திருப்பார்கள் அதை அதை நிர்வகிக்கும் நிர்வாகிகளே பின்பற்றுவதில்லை. எந்த நொக்கத்திற்காக இந்த தளங்களை நடத்துகிறார்கள் எனப்தும் தெரியவில்லை. இளைஞர்களை இளவயதிலேயே சட்டவிரோதமான மனப்பான்மைக்கு அழைத்தும் செல்லும் தளமாக, இது தான் சரியான வழி என்று தீர்க்கமான முடிவுக்கு இந்த தளங்கள் கொண்டு செல்கின்றன. இந்த தளங்களை முற்றிலும் தடை செய்யவேண்டும். அரசு இந்த தளங்களை மேற்பார்வையிடுகிறது என்று தணிக்கையுடன் சில தளங்களை அனுமதியளித்து முத்திரையுடன் இணையத்தில் தெரிய வரைமுறைப்படுத்தலாம். இது பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களும் இது பற்றி கவலை தெரிவித்து இருக்கிறார். எந்த நாட்டுத்தலைவராக இருந்தாலும் அவர் நமக்கு பிடிக்கதவராக இருந்தாலும் அவரை மரியாதையாக விளித்து தான் கருத்திடவேண்டும். ஏனென்றால் எல்லாருமே அந்தந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எழுத்துக்களின் மூலம் ஒருவரை மணிடியிடச்செய்யவேண்டும். இந்த மாதிரி தளங்களை கண்டறிந்தால் அவற்றை ஸ்கிரின் ஷாட் எடுத்து குற்றப்பரிவுக்கு இந்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டாலும் இவற்றை தடைசெய்ய ஆலோசனைகள் நடைபெறும். கூடிய விரைவில் இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும்.

  தீண்டாமை ஒரு பெருங்குற்றம் அதற்கு தண்டனை உண்டு, அனால் அதெல்லாம் சரி எனபது போல் இந்த மாதிரி தமிழ் என்ற அடைமொழிப் பெயருடன் இயங்கும் தளங்கள் மதத்த்தீவிரவாதத்தை இளைஞர்களிடம் வலியுறுத்துகின்றன. குலக்கல்வி திட்டம் சரி என இந்த தளங்கள் போதிக்கின்றன. வருணாசிரமம் சரி என பாராதியார் பெயரை வைத்து போதிக்கின்றன. இதெல்லாம் தவறு என்ற நினைப்பில் இருப்பவர் கூட மாறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதுமாதிரி தீவிரவாத்தளங்களாக இந்த தமிழ் தளங்கள் செயல்படுகின்றன.

  இதுமாதிரி தளங்களை கண்டறிந்தால் புகார் செய்ய தயங்க கூடாது.
  வலைத்தளத்திலும் இது பற்றி குறிப்பு எழுதியிருக்கிறேன்.
  நன்றி!

  பின்னூட்டம் by நம்பி | ஜனவரி 18, 2011 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: