ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

பதிவுலகில் மதவாத சக்தி தவறாக பயன்படுகிறதா?

புதியவர்களுக்கு ஒரு ஷாட் இன்ட்ரோ: வலை உலகில் தமிழ்மணம் என்று ஒரு திரட்டியுள்ளது. சமீபத்தில் தனது திரட்டியில் காப்பி பேஸ்ட் பதிவுகள், மொக்கைப் பதிவுகள் மற்றும் மதமாற்றும் பதிவுகள் போன்றவைகளை தடைசெய்தது.[மதமாற்று பதிவுகள் & வணிகப் பதிவுகள் கட்டணத்தில் சேர்த்தது] இதனால் பலர் முறையிடனர், சிலர் பதிவிட்டனர், சிலர் திருந்திவிட்டனர். இப்படியே பதிவர்களிடையே சில வாரங்கள் cold war நடந்தது. ஒருநாள் terrorkummi என்கிற ஒரு தளத்தில் டெரர் இல்லாமல் தமிழ்மணத்தை கிண்டல் செய்தனர். தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவர் பதிலுக்கு திட்டி கிண்டல் செய்தார். இருவர் பக்கமும் எள்ளல் இருந்தது ஆனால் நிர்வாகியின் வார்த்தைகளில் எள்ளல் அதிகமாக இருந்தது. இதுவரை cold war நடத்தியவர்களுக்கு இது அவல் மாதிரி தெரிந்தது போல புதிய சர்ச்சையை துவக்கிவிட்டனர். மதத்தை இழிவு படுத்தியதாக போர்க் கோடி ஏந்தியுள்ளனர்.

தமிழ்மணம் அவர்களின் கொள்கைக்கு ஏற்றவாறு மாற்றுவதில் அவர்களுக்கு உரிமையுண்டு. பிடித்தால் இணைய வேண்டும் பிடிக்காவிட்டால் என்னைபோல இணைக்காமல் இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு தமிழ் மணத்தை தாக்குவது சரியில்லை. தாக்கி கிண்டல் செய்துவிட்டு நாங்கள் கண்ணியம் தவறவில்லை என்று நிர்வாகிதான் காண்ணியம் தவறிவிட்டார் என்பது ஒருதலைப் பட்சமானது. …ம்ம் இந்த விஷயத்தில் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை ஒரு நாட்டு செல்லும் போது அந்நாட்டு சட்டத் திட்டங்களை[ஒருதலை பட்சமாக இருந்தாலும்] பின்பற்ற வேண்டும் அப்படி முடியாவிட்டால் செல்லாமல் இருக்க வேண்டும் என்னைப் போல. அதை விட்டு விட்டு நாட்டை பலித்து பேசிவது யார் மீது தவறு என்று உங்களுக்கேத் தெரியும் என்பதால் நமது விஷயத்திற்கு வருவோம்.

தன் தமிழ்மண தளத்தை பற்றி பய(ங்கர)டேட்டா எழுதியோரிடம் டெர்ரர் கும்மியில் தரம் தாழ்ந்து வசவு வார்த்தை கொண்டு திட்டிய -/பெயரிலி… அங்கே விவாதத்துக்கு சம்பந்தமே இல்லாமல்… அவர் துப்பிய ஒரு வாக்கியம் படிப்போரை மேலும் ஆத்திரமூட்டியது..!

அது…///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்/// ……என்பதுதான்..!

இது முஸ்லிம்கள் பிறரை சந்திக்கும் போது கூறும் ஓர் அழகிய முகமன் ஆகிய… ” சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக ” என்பதை கேலி செய்வதாகவும், கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது அல்லவா..? இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்று பல இஸ்லாமிய பதிவர்கள் எழுதியுள்ளனர். எல்லார் பதிவிலும் சுமார் இருபது முப்பது குழுப் பதிவுகளின் இணைப்பு உள்ளது. இதில் கவனிக்க வேண்டியது வேறு எதற்காகவாவது இப்படி பதிவுகள் குழுவாகப் பார்த்ததுண்டா? இத்தனை நபர்கள் ஒன்றாக சேர்ந்து இப்படி குரல் கொடுக்கவில்லை தமிழக மீனவர் படுகொலையின் போது சரி இலங்கை இனப்படுகொலையின் போதும் சரி. மொழி ரீதியான விஷயங்களை விட மத ரீதியான விஷயங்கள் உண்மையில் வலியதாகவே இருக்கட்டும் தவறில்லை என்றாலும் சரியான விஷயத்திற்காக போராடுகிறார்களா? என்பது தான் கேள்வி. வேறு மதத்தினர் இப்படி குழுவாக பதிவுகள் எழுதி நாத்திக அநாகரீக பதிவுகளை தாக்கிவில்லை என்று கூறவரவில்லை ஆனால் தாக்கும் விஷயம் தகுதியானதா என்பதுதான் கேள்வி. தவறான விஷத்திற்காக இப்படி குழு அமைத்தால் பிறமதத்தவரும் குழு அமைத்துவிடுவார்களோ என்கிற அச்சமும் உண்டு.

மேற்கண்ட வாக்கியம் எப்படி மத வாக்கியம் ஆகும்? இஸ்லாமியர்கள் “இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.” என்று தானே கூறுவார்கள் “சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.” என்று யாரும் {உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள்} முகமன் செய்வதில்லையே! அப்படியே இருந்தாலும் சாந்தி மற்றும் சமாதான்{ समाधन} என்கிற வார்த்தைகள் தூய சமஸ்கிருத அதாவது இந்துக்களின் வார்த்தை என்பதை யாரும் மறுப்பதில்லை. இந்த வார்த்தைகளில் ஒருவர் பயன்படுத்தக் கூடாதென்பது கருத்துரிமை பறிப்புதானே. இவர் “இறைவனின் சாந்தியும்….” என்றால் கூட ஆத்திகர்கள் கோபப்பட வாய்ப்புள்ளது ஆனால் இவர் கூறிய வார்த்தைகள் அப்படி ஒன்றுமில்லாத போது ஏன் இந்த போராட்டம். தமிழ் மணத்தை வேறு காரணங்களுக்காக எதிர்த்தால் கூட தலையிடத் தேவையில்லை ஆனால் மதரீதியான தேவையற்ற தாக்குதல் என்பதாலேயே இந்தப் பதிவு

உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள். தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம். மற்றபடி தமிழ் மணம் அல்லது பதிவர்கள் பிரச்சனையில் யாருக்கும் ஆதரவாளன் அல்ல.

சில தளங்களில் கருத்துயிட்டால் மாடரேசன் செய்கிறார்கள் என்பதால் எல்லா  கருத்துகளும் உங்கள் பார்வைக்கு…

source:
// வெறும்பய said…
பீச்சென்றோ ஓக்கென்றோ ஏதாச்சும் மரத்தளபாடக்கம்பெனி தொடங்கியிருப்போமே //
இருங்க சார் கோனார் தமிழ் உரையை எடுத்திட்டு வரேன்..//
தமிழ் மாணவர்களுக்கு ஞானத்தை வழக்கும் கோனார் தமிழ் உரை நூலை கொச்சைப்படுத்திய கும்மி குருப்ஸ் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும்.

source:
///”தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்”
இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தாலும், அந்த தளத்தை விவாதக்களமாக்க விரும்பாததால் இது குறித்து கேட்கவில்லை. ///
இந்து கடவுளுக்கு படைத்த உணவுகளை கிருத்தவர்கள் சாப்பிட மறுப்பார்கள் அதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு. அது எப்படி நீ மறுக்கலாம் மன்னிப்பு கேள் என்று வாதடமுடியுமா?

source:
///அடுத்த வாரம் எங்கள் நிறுவனம் மூலமாக அரசுக்கு ரெட் நோட்டீஸ்(கோரிக்கை) அனுப்பப்படும் அதை தொடர்ந்து அரப் எமிரேட்டில் தமிழ்மணம் சுவடு இல்லாமல் நீக்கப்படும் . இதே நிலை வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற இஸ்லாமிய அரசுக்கும் கோரிக்கை போகும் .அங்கும் தமிழ்மணம் நீக்கப்படும் வளைகுடாநாடுகளில் தமிழ்மணத்தின் பக்கமே திறக்காது.என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .திருந்த ஒரு சான்ஸ் மட்டுமே///
அதுதான் லாபநோக்கற்ற தளம் என்று சொல்லியாச்சே அப்புறம் இதனால் என்ன நஷ்டம் அவர்களுக்கு? அவர்களின் சார்வருக்குத் தான் இஸ்லாமிய நாடுகளுக்கெல்லாம் டிராபிக் தாராமல் வேலை மிச்சம்

source:
//காலச்சக்கிரம் சுழன்று கொண்டே இருக்கும். தமிழ்மணக் குழுவினர் யோசித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும். //
நாளைக்கு தமிழில் ஒரு பதிவும் போடமுடியாது எல்லா வார்த்தைகளும் எங்கள் மதம் சார்ந்து என்று இணையத்தை முடக்குவார்கள். அன்று உங்களுக்கு புரியும்

ஒக்ரோபர் 18, 2011 - Posted by | Uncategorized

14 பின்னூட்டங்கள் »

  1. இந்த இடுகைக்கு சண்டையிட்ட பதிவர்கள் சமாதனம் கேட்டால் தான் சரியாக இருக்கும்.

    பின்னூட்டம் by சண்முகம் | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

    • அய்யோயோ மீண்டும் “சமாதானமா” நான் வர சாமி…
      by the way இது அந்த சண்டையிட்ட பதிவர்கள் யார் என்று புரியவில்லை?

      பின்னூட்டம் by smarttamil | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

  2. 2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

    1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி…

    வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

    SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி…

    2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது… இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா… இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை… இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக… என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா…

    ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

    ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ….ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ…. ரமணீதராய நமஹ….

    Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

    3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
    மகராசா, வணக்கமுங்க… இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க… நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க… உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க…

    உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க…

    இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை… ………….. ……. …

    SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

    பின்னூட்டம் by unmaikal | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

    • உங்களுக்கு பெயரிலி மீது கோபம் என்றால் அவர் கூறிய கருத்துடன் கண்டிங்கள்
      மதச்சாயம் பூசாதீர்கள் என்பதே எனது வாதம்

      பின்னூட்டம் by smarttamil | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

    • அந்த திரட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டவர்கள் எல்லாம் இப்படிதானே சொல்கிறார்கள் நம்ம சித்தூர் முருகேஷன் அய்யாவையே எடுத்துக்கோங்க தமிழ்மணத்தை கண்ட மேனிக்கு திட்டினார் தற்போது அங்கேயே இணைத்து எழுதி வருகிறார். உங்களுக்கு பிரச்சனை திரட்டியில் என்றால் வார்த்தைகளுக்கு மத சாயம் பூசி அணி சேர்க்காதீர்கள்

      பின்னூட்டம் by smarttamil | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

  3. மதவாதிகள் தீய நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேள் என்பதிலேயே இதை விளங்கி கொள்ளலாம்.தமிழ்மணம் பக்கம் பக்கபலமாக நிற்க்க வேண்டியது நமது கடமை.

    பின்னூட்டம் by சமாதானவிரும்பி | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

  4. அன்பு சகோ smart
    உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

    சகோதரரே இங்கு நீங்கள் உட்பட சகோ ரமணிதரனுக்கு ஆதரவாய் பேசும் யாரும் அந்த பிரச்சனைக்குரிய வார்த்தையான சாந்தியும் சமாதானமும் என்ற வார்த்தையின் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறீர்கள்.,

    இங்கு நானோ அல்லது ஏனைய எந்த இஸ்லாமிய பதிவரோ அந்த வார்த்தையை இஸ்லாமியரல்லாத ரமணிதரன் பயன்படுத்தியது தவறு என்று சொல்லவில்லை., இன்னும் சொல்ல போனால் அந்த வார்த்தையை இஸ்லாம் அல்லாதவர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் என் எந்த ஒரு பின்னூட்டத்தின் தொடக்கத்திலும் அவ்வாக்கியத்தை சேர்த்திருக்கிறேன்., ஏனைய இஸ்லாமிய பதிவர்களும் அப்படியே!

    ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை., அதை மறுக்க தமிழிலும் சமஸ்கிருததிலும் ஆதாரம் தேட தேவையில்லை.,
    மாறாக பெரும்பாலான இஸ்லாமியர்களின் சொல்வழக்கு வார்த்தைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில்
    //சாந்தியும் அவ அக்கா சமாதானியும்// என ஆபாசப்படுத்தியது ஏன் என்று தான் ஆதங்கப்படுகின்றோம்..

    இன்னும் சொல்ல போனால் நான் முஸ்லிம் தளத்தில் சிலப் பதிவுகளை தவிர ஏனைய அனைத்துப்பதிவுகளும் நாத்திகர்களுக்கேதிரான விமர்சனங்களாக தான் இருக்கின்றது., ஆக அதன் விளைவாக நாத்திகர்களிடம் உரையாடும் போது இஸ்லாமிய மீதான வசைப்பாடல்களை வீசத்தான் செய்கிறார்கள்., ஆனால் அவர்களுக்கு எதிராக நாங்கள் ஒன்றுக்கூடி பதிவு போடுவதில்லை. மாறாக இதை எதிர்த்து மட்டும் பதிவு போட காரணம் ., அவர்கள் எல்லோரும் தனிமனித செய்கையாக தான் தங்களை அங்கிகரித்து சொல்கிறார்கள்.,

    ஆனால் இங்கோ ஒரு திரட்டி சார்பாக ஒருவர் கருத்து பதிவிடும் போது அதுவும் ஒரு “நடு நிலையான திரட்டி” என பெயர் பெற்ற திரட்டியின் பெயரில் கருத்திடும் போது எப்படி வெறுமனே இருக்க முடியும்

    சகோ.,இருந்தாலும் எடுத்தோம் – கவிழ்த்தோம் என நாங்கள் இப்பதிவுகளை இடவில்லை, மாறாக மூன்று தினங்களுக்கு முன்பாக தமிழ்மணத்திடம் மெயில் மூலமாக இதற்கு காரணம் கேட்டும் -அவர்களின் திமிர்தனமான பதிலே இப்பதிவுகளின் வெளியீடுகளுக்கு தலையாய காரணம்.,

    ஆக உங்கள் புரிதலில் தவறு இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

    //தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம். மற்றபடி தமிழ் மணம் அல்லது பதிவர்கள் பிரச்சனையில் யாருக்கும் ஆதரவாளன் அல்ல. //
    இது தான் நான் உங்களுக்கு சொல்ல வருவதும்

    பின்னூட்டம் by G u l a m | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

    • //ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை//

      “தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…”
      அப்படி என்றால் இது போன்ற தலைப்பிட்ட பதிவுகள் அனைவர் சார்பாக எழுதப் பட்டதா? தலைப்புக்கு உங்கள் பதில் என்ன?

      பின்னூட்டம் by smarttamil | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

  5. பெயரிலி எழுதின தமிழ் 90% மான பேருக்கு விளங்கி இருக்காது 🙂
    அவரு பாதி முஸ்லிம் தான் !!!

    பின்னூட்டம் by Test | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

  6. அவரு பாதி முஸ்லிம் தான் !!!

    Test ,
    இனி பெயரிலியை வசைபாடிய பிற பதிவர்கள் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்க போகிறார்கள்

    பின்னூட்டம் by சமாதானவிரும்பி | ஒக்ரோபர் 18, 2011 | மறுமொழி

  7. அதுதான் லாபநோக்கற்ற தளம் என்று சொல்லியாச்சே அப்புறம் இதனால் என்ன நஷ்டம் அவர்களுக்கு? //விளம்பரதாரர்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா..? பூனம் பாண்டே வீடியோ காணத்தவறாதீர்கள் தமிழ்மணம் முகப்பில் அந்த விளம்பரம் பளிச்சிடுவதை பார்த்தால் அவர்கள் தமிழ் சேவை நன்கு புரியும்

    பின்னூட்டம் by சோதிடம் சதீஷ்குமார் (@sathish777) | ஒக்ரோபர் 19, 2011 | மறுமொழி

    • ஐயா,
      லாபநோக்கம் தான் இல்லை வாழ்வாதாரத்திற்காக செய்தால் குற்றமா? நீங்களும் அது இலாமிய மதவெறியை ஆதரிக்கிறீர்களா?
      Moreover I am not biased to support neither but I condemn only on religious fascism

      பின்னூட்டம் by smarttamil | ஒக்ரோபர் 20, 2011 | மறுமொழி

  8. என் இடுகையில் உங்க்களுக்கு இட்ட மறுமொழியை இங்கும் இடுகிறேன்
    —————-

    // அதாவது கள்ளச் சாராயம் கேஸ் பிடித்தால் பிடித்தவருக்கு தண்டனையா?

    //

    அண்ணா,கொஞ்சம் கண்ணுல விளக்கென்னையை ஊத்திகிட்டு இன்னொருக்கா நான் என்ன எழுதியிருக்கேன்னு படிங்கண்ணா. நான் மோடிங்குற பேரைப் பார்த்து அவர் இந்து என்பதற்காகக் கருத்து சொல்லலை. நீங்கதான் அப்துல்லாங்குற பேரைப் பார்த்து அவசர அவசரமா முன்முடிவோடு கருத்து சொல்றீங்க :))))

    சாராயக் கேஸ் பிடிச்சவங்களுக்கு மரண தண்டனைனு நான் எங்க எழுதியிருக்கேன்? கள்ளச்சாராயத்தை பிடிக்காதவங்களை அவர்கள் பதவியில் இருந்து ஒட்டுமொத்த டிஸ்மிஸ் செய்யனும்னுதானே எழுதியிருக்கேன்!! கொஞ்சம் நல்லாப் படிங்கபாஸ் 🙂

    அதேபோல மோடி என்பதற்காக எதிர்க்கவில்லை. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தொடர்ந்து எழுதி வருகிறேன். அப்ப சோனியா கிருஸ்துவர் என்பதால் எதிர்த்து எழுதுகிறேனா? அரபு நாடுகளில் அளிக்கும் மரண தண்டனையையும் எதிர்த்து கூகிள் பஸ்சில் தொடர்ந்து எதிர் கருத்து எழுதியிருக்கிறேன். இவ்வளவு ஏன் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு மரணை தண்டனை விதித்தாலும் எதிர்ப்பேன். என் நிலைப்பாடு மதம் சார்ந்தது அல்ல.. போதுமா? 🙂

    பின்னூட்டம் by எம்.எம்.அப்துல்லா | திசெம்பர் 9, 2011 | மறுமொழி

  9. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    http://www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பின்னூட்டம் by Tamil Nikandu | ஏப்ரல் 23, 2014 | மறுமொழி


பின்னூட்டமொன்றை இடுக