ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

பதிவுலகில் மதவாத சக்தி தவறாக பயன்படுகிறதா?

புதியவர்களுக்கு ஒரு ஷாட் இன்ட்ரோ: வலை உலகில் தமிழ்மணம் என்று ஒரு திரட்டியுள்ளது. சமீபத்தில் தனது திரட்டியில் காப்பி பேஸ்ட் பதிவுகள், மொக்கைப் பதிவுகள் மற்றும் மதமாற்றும் பதிவுகள் போன்றவைகளை தடைசெய்தது.[மதமாற்று பதிவுகள் & வணிகப் பதிவுகள் கட்டணத்தில் சேர்த்தது] இதனால் பலர் முறையிடனர், சிலர் பதிவிட்டனர், சிலர் திருந்திவிட்டனர். இப்படியே பதிவர்களிடையே சில வாரங்கள் cold war நடந்தது. ஒருநாள் terrorkummi என்கிற ஒரு தளத்தில் டெரர் இல்லாமல் தமிழ்மணத்தை கிண்டல் செய்தனர். தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவர் பதிலுக்கு திட்டி கிண்டல் செய்தார். இருவர் பக்கமும் எள்ளல் இருந்தது ஆனால் நிர்வாகியின் வார்த்தைகளில் எள்ளல் அதிகமாக இருந்தது. இதுவரை cold war நடத்தியவர்களுக்கு இது அவல் மாதிரி தெரிந்தது போல புதிய சர்ச்சையை துவக்கிவிட்டனர். மதத்தை இழிவு படுத்தியதாக போர்க் கோடி ஏந்தியுள்ளனர்.

தமிழ்மணம் அவர்களின் கொள்கைக்கு ஏற்றவாறு மாற்றுவதில் அவர்களுக்கு உரிமையுண்டு. பிடித்தால் இணைய வேண்டும் பிடிக்காவிட்டால் என்னைபோல இணைக்காமல் இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு தமிழ் மணத்தை தாக்குவது சரியில்லை. தாக்கி கிண்டல் செய்துவிட்டு நாங்கள் கண்ணியம் தவறவில்லை என்று நிர்வாகிதான் காண்ணியம் தவறிவிட்டார் என்பது ஒருதலைப் பட்சமானது. …ம்ம் இந்த விஷயத்தில் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை ஒரு நாட்டு செல்லும் போது அந்நாட்டு சட்டத் திட்டங்களை[ஒருதலை பட்சமாக இருந்தாலும்] பின்பற்ற வேண்டும் அப்படி முடியாவிட்டால் செல்லாமல் இருக்க வேண்டும் என்னைப் போல. அதை விட்டு விட்டு நாட்டை பலித்து பேசிவது யார் மீது தவறு என்று உங்களுக்கேத் தெரியும் என்பதால் நமது விஷயத்திற்கு வருவோம்.

தன் தமிழ்மண தளத்தை பற்றி பய(ங்கர)டேட்டா எழுதியோரிடம் டெர்ரர் கும்மியில் தரம் தாழ்ந்து வசவு வார்த்தை கொண்டு திட்டிய -/பெயரிலி… அங்கே விவாதத்துக்கு சம்பந்தமே இல்லாமல்… அவர் துப்பிய ஒரு வாக்கியம் படிப்போரை மேலும் ஆத்திரமூட்டியது..!

அது…///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்/// ……என்பதுதான்..!

இது முஸ்லிம்கள் பிறரை சந்திக்கும் போது கூறும் ஓர் அழகிய முகமன் ஆகிய… ” சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக ” என்பதை கேலி செய்வதாகவும், கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது அல்லவா..? இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்று பல இஸ்லாமிய பதிவர்கள் எழுதியுள்ளனர். எல்லார் பதிவிலும் சுமார் இருபது முப்பது குழுப் பதிவுகளின் இணைப்பு உள்ளது. இதில் கவனிக்க வேண்டியது வேறு எதற்காகவாவது இப்படி பதிவுகள் குழுவாகப் பார்த்ததுண்டா? இத்தனை நபர்கள் ஒன்றாக சேர்ந்து இப்படி குரல் கொடுக்கவில்லை தமிழக மீனவர் படுகொலையின் போது சரி இலங்கை இனப்படுகொலையின் போதும் சரி. மொழி ரீதியான விஷயங்களை விட மத ரீதியான விஷயங்கள் உண்மையில் வலியதாகவே இருக்கட்டும் தவறில்லை என்றாலும் சரியான விஷயத்திற்காக போராடுகிறார்களா? என்பது தான் கேள்வி. வேறு மதத்தினர் இப்படி குழுவாக பதிவுகள் எழுதி நாத்திக அநாகரீக பதிவுகளை தாக்கிவில்லை என்று கூறவரவில்லை ஆனால் தாக்கும் விஷயம் தகுதியானதா என்பதுதான் கேள்வி. தவறான விஷத்திற்காக இப்படி குழு அமைத்தால் பிறமதத்தவரும் குழு அமைத்துவிடுவார்களோ என்கிற அச்சமும் உண்டு.

மேற்கண்ட வாக்கியம் எப்படி மத வாக்கியம் ஆகும்? இஸ்லாமியர்கள் “இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.” என்று தானே கூறுவார்கள் “சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.” என்று யாரும் {உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள்} முகமன் செய்வதில்லையே! அப்படியே இருந்தாலும் சாந்தி மற்றும் சமாதான்{ समाधन} என்கிற வார்த்தைகள் தூய சமஸ்கிருத அதாவது இந்துக்களின் வார்த்தை என்பதை யாரும் மறுப்பதில்லை. இந்த வார்த்தைகளில் ஒருவர் பயன்படுத்தக் கூடாதென்பது கருத்துரிமை பறிப்புதானே. இவர் “இறைவனின் சாந்தியும்….” என்றால் கூட ஆத்திகர்கள் கோபப்பட வாய்ப்புள்ளது ஆனால் இவர் கூறிய வார்த்தைகள் அப்படி ஒன்றுமில்லாத போது ஏன் இந்த போராட்டம். தமிழ் மணத்தை வேறு காரணங்களுக்காக எதிர்த்தால் கூட தலையிடத் தேவையில்லை ஆனால் மதரீதியான தேவையற்ற தாக்குதல் என்பதாலேயே இந்தப் பதிவு

உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள். தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம். மற்றபடி தமிழ் மணம் அல்லது பதிவர்கள் பிரச்சனையில் யாருக்கும் ஆதரவாளன் அல்ல.

சில தளங்களில் கருத்துயிட்டால் மாடரேசன் செய்கிறார்கள் என்பதால் எல்லா  கருத்துகளும் உங்கள் பார்வைக்கு…

source:
// வெறும்பய said…
பீச்சென்றோ ஓக்கென்றோ ஏதாச்சும் மரத்தளபாடக்கம்பெனி தொடங்கியிருப்போமே //
இருங்க சார் கோனார் தமிழ் உரையை எடுத்திட்டு வரேன்..//
தமிழ் மாணவர்களுக்கு ஞானத்தை வழக்கும் கோனார் தமிழ் உரை நூலை கொச்சைப்படுத்திய கும்மி குருப்ஸ் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும்.

source:
///”தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்”
இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தாலும், அந்த தளத்தை விவாதக்களமாக்க விரும்பாததால் இது குறித்து கேட்கவில்லை. ///
இந்து கடவுளுக்கு படைத்த உணவுகளை கிருத்தவர்கள் சாப்பிட மறுப்பார்கள் அதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு. அது எப்படி நீ மறுக்கலாம் மன்னிப்பு கேள் என்று வாதடமுடியுமா?

source:
///அடுத்த வாரம் எங்கள் நிறுவனம் மூலமாக அரசுக்கு ரெட் நோட்டீஸ்(கோரிக்கை) அனுப்பப்படும் அதை தொடர்ந்து அரப் எமிரேட்டில் தமிழ்மணம் சுவடு இல்லாமல் நீக்கப்படும் . இதே நிலை வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற இஸ்லாமிய அரசுக்கும் கோரிக்கை போகும் .அங்கும் தமிழ்மணம் நீக்கப்படும் வளைகுடாநாடுகளில் தமிழ்மணத்தின் பக்கமே திறக்காது.என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .திருந்த ஒரு சான்ஸ் மட்டுமே///
அதுதான் லாபநோக்கற்ற தளம் என்று சொல்லியாச்சே அப்புறம் இதனால் என்ன நஷ்டம் அவர்களுக்கு? அவர்களின் சார்வருக்குத் தான் இஸ்லாமிய நாடுகளுக்கெல்லாம் டிராபிக் தாராமல் வேலை மிச்சம்

source:
//காலச்சக்கிரம் சுழன்று கொண்டே இருக்கும். தமிழ்மணக் குழுவினர் யோசித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும். //
நாளைக்கு தமிழில் ஒரு பதிவும் போடமுடியாது எல்லா வார்த்தைகளும் எங்கள் மதம் சார்ந்து என்று இணையத்தை முடக்குவார்கள். அன்று உங்களுக்கு புரியும்

Advertisements

ஒக்ரோபர் 18, 2011 Posted by | Uncategorized | 14 பின்னூட்டங்கள்