ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

பாபர் மசூதி விவகாரம் திசைதிருப்பப்படுகிறதா?

இதுவரை இந்துக்களை மற்றவர்கள் காயப்படுத்தி எழுதியுள்ளதாக நினைத்துக் கொண்டு நண்பர் நிஜாம் இந்த இடுகை காயப்படுத்துவதற்கில்லை என்று கூறியுள்ளார். அதனால் தான் என்னவோ நாத்திகனான நான் விளக்கம் கொடுக்க ரொம்ப ஆசைப்பட்டுவிட்டேன். முறையாக அப்படியே இதுவும் யாரையும் காயப்படுத்தவில்லை.

அவரின் இடுகை

//தசரதன் பெரிய சக்கரவர்த்தி என்பது எல்லாரும் அறிந்த ஒன்றே! கிட்டத்தட்ட 60 ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.//
எந்த சரித்திரத்தில் படித்தார் என்பதை கடைசிவரை கூறவில்லை. அதனால் இது காமெடி ஆக இருக்கலாம்.next doudt

//நம் நீதியரசர் சர்மா அவர்கள் முன்பு இருந்த பாபர் மசூதியின் நடு ஸ்தூபியின் கீழே தான் பிறந்தார் என தன்னுடைய தீர்ப்பிலே மிக உறுதியாக சொல்லியிருக்கிறார்//
அந்த இடத்தில் பிறந்திருக்கலாம் என்றுதான் தீர்ப்பு எழுதியுள்ளார் தவிர குறிப்பிட்ட செங்கல்களின் அடியே குறிப்பிட ஆழத்தில் குறிப்பிடா நாளில் குறிப்பிட்ட மருத்துவர் ஆலோசனைப் படி என்று இல்லை. அதனால் இதுவும் காமெடி ஆக இருக்கலாம் next doudt

//ராமபிரான் பிறக்கும் போதே கடவுளா?//
அப்படி இப்படி என்று விளக்கம் தாக்குகிறார். ஒரு ஒப்புக்கு அவர் சாதாரண மனிதர் என்று வைத்துக் கொண்டு next questionக்கு போவோம்

//ஆக இந்த இடத்திலும் கடவுள் தன்மை அற்றுப்போய் விடுகிறது.
லவனும் குசனும் கடவுள்களா?//
சரி அவர்களும் சாதாரண மனிதர்கள். அடுத்து..

//இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் 800 வருடம் ஆட்சி செய்தார்கள். அவர்களில் யாருமே இஸ்லாமிய கடமைகளை முழுமையாக நிறைவேற்றினார்கள் என எந்த ஆதாரமும் இல்லை//
திருத்தம் முஸ்லீம் ஆட்சி என்று சொல்ல வருகிறார் எனநினைக்கிறேன். பிகாஸ் 1526–1803 வரைதான் முகலாயர்கள் இந்தியாவை ஆண்டார்கள் என்று ஆறாம் வகுப்பு படிக்கும் சரவணக்குமார் சொன்னார். அதனால் இந்த தகவல் ஐந்தாம் வகுப்புக்கு முன் படித்த தகவலாக இருக்கலாம். கம்மிங் டு தி பாயின்ட், இஸ்லாமியர்கள் செய்த விதித்த மாற்று மதத்தவர் வரி, கோவில் இடிப்பு, புனிதப் போர் மற்றும் பலவற்றை எடுத்துக் கூற இது நேரமில்லை அதனால் சின்ன தகவல் http://voi.org/books/htemples1/ இந்து கோவில்கள் மீது கட்டப் பட்ட 2000 மசூதிகள் பற்றிய புத்தகம். இதைத் தான் நண்பர் நிஜாமும் சொல்லியுள்ளார் அவர்கள் இஸ்லாமிய கடமையைச் செய்யவில்லை என்று நானும் ஒத்துக் கொள்கிறேன். கோவில்கள் மீது மசூதி என்பது இஸ்லாமிய வழிபாட்டு இடமில்லை என்பதில் அவரைப் போல நானும் உறுதியாக உள்ளேன்.

//அதன்பின்னர் இந்தியாவைக் கைப்பற்றிய முகலாய சாம்ராஜ்யத்தினர் யாருமே ஹஜ் பயணம் மேற்கொண்டதாக எவ்வித குறிப்பும் இல்லை. ஆக யாருமே இஸ்லாத்தினை முழுமையாக பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. //
அப்படியென்று பாபர் மசூதியும் ஒரு நல்ல இஸ்லாமியரால் கட்டப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் என தெரிகிறது.

//#த‌னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் முதன்முதலாக பாபர்மசூதி கட்ட ப‌யன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில்இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர இன்றுமட்டுமாவரலாற்றைதிரிக்கிறார்கள்// source:http://www.twitlonger.com/show/6abdds
கொசுராக சிலரும் வரலாற்று ஆவணங்களை ஆவணப்படுத்துவதாக வழக்கை திரித்துள்ளனர். யார் யார் எதை எதை திரிப்பதேன்றே விவஸ்தையில்லையா என்று எல்.கே.ஜி. படிக்கும் ரோசி பாப்பா சொன்னார்.

பாபரை மதநல்லிணக்கம் மிகுந்தவராக காட்ட முயல்கிறார்கள் ஆனால் அந்த மதநல்லிணக்கத்தை செயலில் காட்டுங்கள் என்றால் எல்லாரும் ஓடிவிடுகிறார்கள். மத நல்லினக்கனமாக மசூதியையும் கோவிலையும் ஒன்றாக கட்டலாம் என்று தெரியாத என்ன?

ஆக அவர்கள் அந்த மசூதி தான் அந்த இடத்தில் வரவேண்டும் என்பதில் உறிதியாக இருக்கிறார்.
நானும் அவரைப் போல இஸ்லாமியர்கள் பற்றி சொல்லி யாரும் உத்தமரில்லை என நிருவிக்க முனைய மாட்டேன். தற்போது வந்துள்ள தீர்ப்புகளின் சாரத்தை யாரும் சரியாக புரிந்துக் கொள்வதில்லை. அவரவர் தனக்கு வேண்டிய விஷயத்தை மட்டும் திரித்துக் கொள்கிறார்கள். இறுதியில் அமைதியைத் தான் கெடுக்கிறார்கள்.

ராமர் சாதாரண மனிதராகவே இருந்துவிட்டுப் போகட்டும்[out of the court: இந்துக்கள் மனிதனிடத்தில் இறைவன் இருப்பதை நம்புகிறார்கள்.] அவர் இறைவன் என்பதால் தான் இங்கே கோவில் கட்ட வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. சர்ச்சைக்குரிய அந்த அயோத்தி நிலம் ராமரை வழிபாடும் மக்கள் வழிபட்டு வந்த ஒரு கோவில் சொத்தா? அல்லது [நண்பர் நிஜாம் கூறியபடி முழுமையான இஸ்லாமியரல்லாத பாபர் கட்டிய] இஸ்லாமிய மசூதி சொத்தா? என்பதுதான். இருவரிடத்தும் நமது தற்போதைய சட்டப்படி சொத்து ஆவணங்கள் இருந்திருக்க வாய்பில்லை. அதனால் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எந்த நம்பிக்கை? ராமர் இங்கே பிறந்ததால் என்ற நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு இல்லை. ஆனால் இந்துக்களின் வழிப்பாட்டு தளம் என்கிற நம்பிக்கை அடிப்படியில் [காரணம் நான் இங்கே தான் கும்பிடுவேன் என்று எந்த இந்துவும் பத்திரம் எழுதவில்லை.]

இங்கே இராமர் பற்றி இழுப்பதற்கோ அவரை இல்லாமல் செய்வதற்கோ இது வழக்குகில்லை & ராமருக்கும் வழக்கிற்கும் நேரடி சம்மந்தமில்லை. ஆனால் ராமரைப் பற்றி இழிவு பேச்ச இந்த வழக்கை சம்மந்தப் படுத்தலாம். அதுதான் நடக்கிறது.

இங்கே [நானில்லை மற்ற இந்துக்கள்]யாரும் அந்த மசூதி ஒரு உண்மையான இஸ்லாமியர் கட்டியதில்லை, அந்த மசூதியில் அதுசரியில்லை இதுசரியில்லை, அல்லாவே அப்படி இப்படி என்று கேட்காத போது ராமரைப் பற்றி இழுப்பது நகைப்புக் கூறியது என்று மூனாங்கிலாஸ் படிக்கும் பப்பு சொன்னார்.

மசூதியின் அடியில் கோவில் இருந்துள்ளது நன்கு நிருபணம் ஆகிவிட்ட நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. என்பதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.

விவாதங்கள் எப்படி இருக்கவேண்டும்? அந்த சர்ச்சைக்குரிய இடம் இந்த காலத்தில் இவருக்கும் அந்த கோவில் நிர்வாக வழங்கிவிட்டது; அந்த கோவிலை பாபர்தான் கட்டினார் இதோ கல்வெட்டு; அந்தக் கோவிலுக்கு முன்பே அங்கே பாபரின் பரம்பரைக் மசூதி இருந்தது இதோ ஆதாரம்; மசூதியை இடித்து தான் 800 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ராமர் கோவில் கட்டப்பட்டது அதற்கான ஆதாரம் இந்த தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது; என்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் எதிரணியின் ஆதாரங்களையும் படிக்க வேண்டும்.

ம்ம் விவாதங்களை ஆரம்பியுங்கள்.

Advertisements

ஒக்ரோபர் 5, 2010 Posted by | Uncategorized | 4 பின்னூட்டங்கள்