ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

அயோத்தி தீர்ப்பும் அரசியல் ஆகிறது.

Mr.Thiruma


october 1 க்கும் October 2 க்கும் என்ன வித்யாசம்?


இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது சனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகின்றது. பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரசு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற சனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.

இவண்
(தொல். திருமாவளவன்)
thiruma
October 2 2010
source: http://www.thiruma.in/2010/10/blog-post_8124.html


அதேவேளையில், பாபர் மசூதி மற்றும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து உறுதியாக இருக்குமேயானால் அயோத்தியிலேயே மாற்று இடங்களைத் தேர்வு செய்து உரிய அமைப்புகளுக்கு இந்திய அரசு ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தில் தொல்லியில் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இந்து, இஸ்லாமிய அமைப்புகளும் இந்திய அரசும் முன்வர வேண்டும் என்றும் அதுவே நிலையான சுமூகமான தீர்வாக அமையும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

october 1 2010
source:http://www.thiruma.in/2010/10/blog-post_01.html
தற்போது இந்த கருத்து முரணாக வுள்ளதாலோ என்னவோ இந்தப் பக்கம் அழிக்கப்பட்டுவிட்டது. ஏதாவது feedல் அல்லது google மூலமாக சோதித்துக்கொள்ளவும் அல்லது இங்கே போங்க http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=40490


Mr.K.veeramani


எப்படி இருப்பினும், நாடு அமைதிப்பூங்காவாகவே தொடரவேண்டும்.
ஒருபோதும் மதவெறி காரணமாக அமளிக்காடாக மாறக்கூடாது!
சமாதான சகவாழ்வின் மூலம்தான் நம் நாடு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண முடியும்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு 3 மாதங் கள் அவகாசம் உள்ளது – எனவே, இதற்காக வெற்றிக் கூச்சலோ, தோல்வி மனப்பான்மையுடன் கலவரங் களிலோ எவரும் ஈடுபடுவதோ கூடாது, மீண்டும் சட்டத்தின் ஆளுமையின் இறுதித் தீர்ப்பையே எதிர்பார்ப்போமாக!
october 1 2010
source:http://www.viduthalai.periyar.org.in/20101001/news01.html


விநாயகர் சதுர்த்தி வரும் இந்தக் காலகட்டத்தில் அதனை மய்யப்படுத்தி, கழகத் தோழர்களே, நமது பிரச்சாரம் புயலாக நாலா திசைகளிலும் சுழன்று அடிக்கட்டும். அழுக்குருண்டைப் பிள்ளையார்பற்றி அதிவேகத்தில் பிரச்சாரம் நடக்கட்டும்; துண்டு அறிக்கைகளை வீட்டுக்கு வீடு விநியோகியுங்கள். சுவரெழுத்து, தட்டி வாசகம் எங்கும் நீக்கமறக் காணப்படட்டும்!
கோயில்களில் இருக்கும் சிலைகளை உடைப்பது என்பது பெரிய காரியமல்ல! அப்படி உடைக்கவேண்டும் என்றால், முன்னதாகவே அறிவித்து நாள் குறிப்பிட்டு, அந்தக் காரியத்தை எங்களால் நிச்சயம் செய்ய முடியும்
September 3 2010
source:http://thamizhoviya.blogspot.com/2010/09/blog-post_3763.html


Advertisements

ஒக்ரோபர் 2, 2010 Posted by | Uncategorized | 2 பின்னூட்டங்கள்