ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

நாமும் மனிதர்கள் தானா?

பிறப்பின் அடிப்படையில் மனித இந்த இனம் மொழி, மதம், சாதி, பொருள்…..என பலவகை பிரிவுகளால் பிரிந்து வாழ்கிறது. உண்மையில் இந்த பிரிவுகள் தவறல்ல ஆனால் அதை அணுகும் முறையே தவறு. நம் குடும்பத்தில் ஒரு விசேஷம் என்றால் அனைவரும் ஓரே வேலையை செய்வதில்லையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை எடுத்துக் கொண்டு நமது விஷேசம் நிறைவடைவதைத்தான் நாம் விரும்புகிறோம். அப்போது, நீ மட்டும் அந்த வேலை செய்கிறாய்? நீ கீழான வேலை செய்கிறாய்? என்பதெல்லாம் தான் தவறான அணுகுமுறை. மற்ற பிரிவினரை மதித்து நடந்தாலே நமக்குள் ஒற்றுமை கட்டாயம் நிலவும். பிரிவுகளே வேண்டாம் என்று வெளியுலகிற்கு காட்டுபவர்கள் கூட தனக்குள்ளே பல பிரிவுகளை அனுசரிப்பதும் அதை அரசியல் செய்வதும் பகுத்தறிவுக்கு கிடைத்தை இழுக்கு. ஜாதிகள் இல்லை என்பவர்கள் பலரும் திருநங்கை என்ற பாலியல் ஜாதியை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்கிறார்கள். மதங்கள் பலவற்றுள் திருநங்கைகளுக்கு மதிப்பளிப்பதாக தங்கள் வேதங்கள் கூறினாலும் நடைமுறையில் மதத்தினரும் அதை மாறு கண் பார்வையில் தான் நோக்குகிறார்கள்.

திருநங்கையாக பிறந்தது அவர்கள் குற்றமா? எல்லாம் கடவுள் படைப்பு என்கிறீர்களே அந்த கடவுள் தானே இந்த திருங்கைகளையும் படைத்தார் பின்னர் எதற்கு இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்? எல்லாம் அறிவியலில் ஆதாரம் காட்ட முயலும் நாத்திகவாதிகளே இதற்குள் இருக்கும் அறிவியல் காரணிகள் உங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையா? சாதிகளும் மதங்களும் இனங்களும் மனிதனைக் கூறுபோடும் கால நிலையில் அரவாணிகள் என்ற ஒரே இனம் மட்டும் இந்தப் பாகுபாடுகளுக்குள் வருவதில்லை. அதனால்தான் என்னவோ இந்த மனிதர்கள் அவர்களை வெறுக்கிறார்கள். யார் அரவாணி எனற தினமணியின் கட்டுரை உங்கள் பார்வைக்கு ..

சமுகத்தில் பல இடங்களில் இன்னும் இவர்கள் கீழான மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள் அதற்கு சமுகமும் ஒரு காரணாமாகும். வேலை வாய்ப்புக்கள் அன்றி சிலர் தவறான வழிகாட்டுதலாலும் சமுகத்தின் ஒதுக்கப்பட்ட நிலையாலும் விளிம்பு நிலை அரவாணிகள் தவறான தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். மேலும் ஊடகங்களும் விழிப்புணர்வுச் செய்திகளுக்கு மாறாக வெறும் கவர்ச்சி நிலை செய்திகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டு காசு பார்கிறார்கள். அரசும் தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பையும் இந்த சமுகம் உறுதி செய்யவேண்டும். இணையத்திலும் ஆங்காங்கே அவர்களை அடக்கும் பதிவுகள் வெளிவந்த வண்ணமேவுள்ளது. உங்களால் அவர்களை மதிக்கமுடியவிட்டாலும் அதை வெளிப்படுத்தி அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

நான் வாசகனாகயிருந்த காலத்திலிருந்தே ஒருவரைத் திட்டவேண்டுமானால் அவர்களை இந்த அரவாணிகளோடு ஒப்பிட்டுத் திட்டும் கீழ்புத்தி மனிதர்களைக் கண்டதுண்டு. ஐந்தறிவு ஜீவனாக அவர்களை நாம் பார்க்கையில் நமது ஆறாவது அறிவான பகுத்தறிவு நம்மைவிட்டு சென்றுவிடுகிறது இறுதியில் நாம் தான் அந்த ஐந்தறிவு ஜந்து என்பதை உணரவேண்டும். சமீபத்தில் கண்ட சில இணைய உரையாடல்கள் கண்டிக்கும் படியானது. அவற்றை ஒளிப்பட எடுக்கும் முன்னர் திருத்தப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் நஞ்சை வைத்துள்ள ஒரு உரையாடல்

[[[அந்த தளமே தற்போது நீக்கப்பட்டுள்ளது இருப்பினும் இந்த நினைவு சுவடுகள் கூகிளிலிருந்து வரும் தலைமுறையினர் பார்வைக்கு google]]]
தயவு செய்து இத்தகைய மன அழுக்குகளை வெளியே காட்டவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இப்படி பொது வெளியில் கொச்சையாக திட்டும் வாசகங்கள் ஆபாச தளங்களைவிட ஆபத்தானது

Advertisements

மே 2, 2010 - Posted by | Uncategorized

7 பின்னூட்டங்கள் »

 1. அந்த பின்னூட்டத்திற்கு என்னுடய கண்டங்களையும் தெரிவித்து கொள்கிறேன்!

  பின்னூட்டம் by வால்பையன் | மே 4, 2010 | மறுமொழி

  • உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணே

   பின்னூட்டம் by smarttamil | மே 4, 2010 | மறுமொழி

 2. பாலோஅப்புக்கு!

  பின்னூட்டம் by வால்பையன் | மே 4, 2010 | மறுமொழி

 3. பகிர்வுக்கு நன்றி, வெற்றுப் பின்னூட்டம் தான் என்று அலட்சியம் கொள்ளாமல், இப்பிரச்னை குறித்து ஆழமாக யோசிக்க வைக்க முனைந்ததற்கும் சேர்த்து.

  பின்னூட்டம் by சிரவணன் | மே 5, 2010 | மறுமொழி

  • சமுகத்தால் அடையாளம் காட்டப்படாதவர்கள் என்றாலும் அவர்களும் சமுகம் தான் என்று எண்ணினால் இப்படி அவர்கள் காயப்படவேண்டியதில்லை.
   நன்றி சிராவணன் அவர்களே

   பின்னூட்டம் by smarttamil | மே 5, 2010 | மறுமொழி

 4. //
  வேலை வாய்ப்புக்கள் அன்றி சிலர் தவறான வழிகாட்டுதலாலும் சமுகத்தின் ஒதுக்கப்பட்ட நிலையாலும் விளிம்பு நிலை அரவாணிகள் தவறான தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
  //
  உண்மையான வார்த்தைகள் ஸ்மார்ட்..
  அவர்களும் மனிதர்கள்தான்..

  அவர்களும், சமுதாயத்தில மேன்மை நிலைக்கு வரவேண்டும் என விரும்புகிறேன்..

  பின்னூட்டம் by பட்டாபட்டி | மே 6, 2010 | மறுமொழி

  • வாங்கண்ணே,
   உங்க கருத்துக்கு நன்றி

   பின்னூட்டம் by smarttamil | மே 6, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: