ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

தமிழனுக்கு எதிரி தமிழன் தான்

முதலில் ஒன்றைப்பதிவு செய்துக்கொள்கிறேன். தமிழீழத்திற்காக போராடிய மாவீரர் பிரபாகரனின் கொள்கைகள் வெகு சிலவற்றில் உடன்பாடில்லாவிடிலும் சுயநலமில்லாமல் தமிழருக்காக போராடியது நிச்சயம் பாராட்டப்படவேண்டியது, வணங்க வேண்டியது. அன்றிருந்த அனைவரும் ஒரு மூச்சாய் போராடினால் கூட தமிழன் தப்பித்திருப்பான். போராடியவர்களில் பல பிரிவுகள் பல அரசியல், என நமக்குள் வட்டத்தை சுருக்கிக் கொண்டோம் ஒன்றுப் பட்டிருந்தால் எதிரியின் கொட்டத்தை அடைக்கியிருக்கலாம். அதன் பிறகும் தேர்தல் என பல விஷயங்களில் தமிழன் பிரிந்தேதான் போராடி…., போராடிக்கொண்டிருக்கிறான். காரணம் நமது உள் நோக்கம் எதுவோ அதை குறித்து போயிருந்தால் பிரிவினையே வந்திருக்காது. கடந்த ஆண்டுகளில் போர் நடக்கையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வெவ்வோறு திசையில் திரும்பிக்கொண்டு ஒவ்வொருத்தரை குற்றம் சொல்லியே போரும் நம்மை அழித்தாகிவிட்டது.

அதைப்போல அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பார்வதியம்மாள் இந்தியாவிற்கு வந்து திருப்பி விடப்பட்டது. உண்மையில் இது ஒரு மனிதாபிமானமில்லாத செயல் ஒரு மாவீரனை பெற்றெடுத்த வீரத் தாய்க்கு, ஒரு சாதாரண ஜீவனுக்குத் தரும் மரியாதையை கூட தரமுடியாமல் நாமும்(மனத்தால் நானும்) தமிழ் நாட்டில்தான் இரக்கமின்றி இருக்கிறோம். அண்மையில் இந்த சம்பவம் பதிவுலகில் பரவலாக விவாதிக்கப்படுகிறது வெவ்வேறு தரப்பினரும் தமது தரப்பு கருத்தைப் பதிவு செய்கையில் சர்ச்சைக்கு பேர்போன டோண்டு ஐயாவும் அவர்கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கருத்தில் துளியும் எனக்கு உடன்பாடில்லை இப்படி அடுத்தவரின் கருத்துக்கு பெரிய முரணான விசயத்தைத் தெரிவிக்கும் பொது தகுந்த வாதத்தோடு கேட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்மா விஷயத்தில் எதிர்ப்பதற்கு ஒன்றுமில்லாத நேரத்தில் அவர் கருத்து சொல்லாமே இருந்திருக்கலாம். மீறி கூறியாகிவிட்டது வம்பும் வாரி வந்துவிட்டது. அவர்கருத்துக்கு எதிர்ப்புகள் பதிவது ஆரோக்கியமான ஒன்றுதான் ஆனால் அவர்மேல் உள்ள வெறுப்புக்குத் தான் எதிர்ப்புத் தெரிவிப்பது நமது கீழான புத்தியைக் காட்டுகிறது. தமிழனுக்கு எதிரி தமிழன் தான். பதிவுலகில் அந்த அம்மாவிற்கு ஆதரவாக எழுந்த பதிவுகளின் தாக்கமும் இவருக்கு எழுந்த எதிர்ப்பின் தாக்கமும் இதைக் கண்கூடாகக் காட்டும். பெரிய பெரிய தவறுகள் நடக்கையில் தவறை சுட்டிக்காட்ட எடுக்கும் முயற்சியைவிட தமிழன் தனக்குள்ளையே திட்டிக் கொண்டு காலம் கழிக்கும் நிலைதான் உள்ளது.

ஆதாரமாகக் காட்டுவது தமிழ்மணம் என்ற ஒரு திரட்டியில் அவரின் இடுகைக்கு பல மைனஸ் ஓட்டுக்கள் போட்ட தமிழன் அந்த அம்மாவை விரட்டிய அரசையும் அந்த ஆட்சியாளர்களையும் விமர்சித்து அதிகமாக எழுதவில்லை. உண்மைத் தமிழர்கள் எழுதினாலும் அதனை ஆதரித்து இந்தக் கூட்டங்கள் அதிக ஓட்டுப் போடவில்லை என்பது எதனைக் காட்டுகிறது? மொத்தமாகப் பார்த்தால் ஆட்சியாளர்களை கேள்விக்கேட்க இந்த தமிழர்கள் அஞ்சுகிறார்கள் என்பதுமட்டும் தெரிகிறது ஆனால் நமக்குள் அதே மனநிலையில் உள்ள ஒருவரைக் கண்டால் துவைத்து எடுத்தாகிவிட்டது. இனி நாம் அந்த அம்மாவுக்கு ஆதரவாக இருப்பதாக ஊர் நம்பட்டும். அவர் எழுதியதும் மகாத் தப்பு அதை மட்டும் எடுத்துக்கொண்டாடியது இன்னொருத் தப்பு.

இந்த இடுகைகளை நானும் ஆதரிக்கிறேன்
http://imsai.blogspot.com/2010/04/blog-post.html
http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_19.html
http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_7210.html
http://thisaikaati.blogspot.com/2010/04/dondu.html

சர்ச்சைக்குரிய பதிவு இங்கே
http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.htm/

அதிலும் ஜாதி வெறியையும் இனவெறியையும் நுழைத்து தமிழனை கூறு போடும் பதிவுகளை இங்கு. கண்டிக்கவும் வேண்டும்.
http://sathurangkam.blogspot.com/2010/04/blog-post_21.html
http://pattapatti.blogspot.com/2010/04/vs.html
http://paamaranpakkangal.blogspot.com/2010/04/blog-post_1444.html
http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.html
மேலும் சில பதிவுகள் விடுபட்டிருக்கலாம் படித்தவுடன் பதிவும் செய்வேன். இந்தப்பதிவுகளில் எழுதியவர்களும் மறு மொழியிட்டவர்களும் அந்த தாயைப் பற்றிக் கவலைப்படாமல் தனிமனித சாடலையே மையமாக வைத்து தீட்டிவிட்டனர். இப்படி அதிகாரமில்லாத ஒருவரை இப்படி திட்டி எழுதிய நீங்கள் வருங்காலத்தில் அதிகாரவர்கங்களை எப்படிஎல்லாம் பன்மடங்கு திட்டப் போகிறீர்களோ என அஞ்சி மெய் சிலிர்த்துவிட்டேன். அதிலிருந்து சில காட்சிகள்.
அங்கும் வந்து அவர்களின் ஜாதி மயிருக்குச் சமம் என்று திட்டுவார் வெளியூர்க்காரன்
ரெட்டைவால் ‘ ஸ் அண்ணா வந்து சமந்தமில்லாமல் கோவிலையும் கொலையும் இணைத்துப் ஏசுவார்
ஆட்சியார்களைப் பார்த்து சில்லுண்டிப் பயல்! கள் என ராஜ நடராஜன் சார் வந்து சொல்வார்
கோணி சுத்தி அடிக்காத தொர! புண்ணியமா போவும் என மந்திரிகளைப் பார்த்து வீரர் வானம்பாடிகள் ஐயா கேட்பார்
முத்து கொஞ்சம் முத்துன ஆடா இருக்கே ? என கேட்காமல் ஆடுகாளாக இருக்கே என கேட்பார் மங்குனி அமைச்சர்
ஆக மொத்தத்தில் இனி இந்த தமிழர்களால் நாம் தமிழீழ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கட்டும் எனக் கேட்டுக்கொண்டு
நிறைவு செய்கிறேன்.

Advertisements

ஏப்ரல் 21, 2010 - Posted by | Uncategorized

32 பின்னூட்டங்கள் »

  • ஸ்மார்ட்,
   உங்க பதிவு யூத்புல் குட் பிளாக்கில் வந்திருக்கு வாழ்த்துக்கள்

   பின்னூட்டம் by raman | ஏப்ரல் 22, 2010 | மறுமொழி

 1. அதான் ஊரை திருத்த நீங்க இருக்குகிங்களே ஸ்மார்ட்!

  பின்னூட்டம் by வால்பையன் | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • நல்ல வேளை நீங்க தப்பிச்சுட்டேங்க
   வால் அண்ணே

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 2. @@ஜாதி மயிருக்குச் சமம் என்று திட்டுவார் வெளியூர்க்காரன்//

  எண்பத்தி அஞ்சு வயசுல, மனநிலை பாதிக்கப்பட்ட நிலைல, பக்கவாதத்தால பாதிக்கப்பட்ட ஒரு வயது முதிர்ந்த பெண் நோயாளி “தமிழின தலைவர் பிராபகரன் அம்மாங்கற ஒரே காரணத்தால அவங்க தீவிரவாதி”ன்னு எப்போ ஒரு பார்ப்பனரால அடையாளம் காட்டபட்டாங்கலோ, அப்பவே எல்லா பார்ப்பனர்களும் மயிருக்கு சமானம்னு அடையாளம் காட்டறதுல எங்களுக்கும் தார்மீக உரிமை இருக்கு…! இதுல எந்த மாற்றுகருத்தும் இல்ல..இங்க நான் பார்ப்பான்னு சொல்றது பிறப்பால் பார்ப்பணர்கள இல்லைங்கறது படிச்சவங்களுக்கு புரியும்னு நம்பறேன்..! புரிஞ்சுக்காத முட்டாள் பார்ப்பான பத்தி எங்களுக்கு கவலை இல்ல..!!

  பின்னூட்டம் by Veliyoorkaran | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • //எப்போ ஒரு பார்ப்பனரால அடையாளம் காட்டபட்டாங்கலோ, அப்பவே எல்லா பார்ப்பனர்களும் மயிருக்கு சமானம்னு அடையாளம்//
   அண்ணே பிரச்சனை அதுவல்ல, உங்கள் வீரத்தை அதிகாரவர்கத்திடம் காட்டுவதற்கு மாறாக புது புது பிரச்சனைகளை நமக்குள்ளே உருவாக்கி அதில் ஆர்வம் காட்டுவதைத் தான் சொல்கிறேன்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 3. ஸ்மார்ட்..
  உங்கள் புரிதலில் முரண்படுகிறேன்.

  பெரும்பாலானோர் அவருக்கு அதிக மைனஸ் ஓட்டு போட்டதற்கு அந்த மனிதன் மேல் இருக்கும் தனிப்பட்ட துவேசம் காரணமாக இருக்காது…

  கடந்து போகும் வழியில் ஒரு பூக்கடையும், துர்நாற்றம் வீசும் சாக்கடையும் இருக்கிறதென்றால்.. மேலோட்டமாக வாசம் வந்தாலும் போகும் அவசரத்தில் கவனிக்காமல் கடந்து செல்ல வாய்ப்புண்டு, அதே சமயம் மூச்சையடைக்கும் சாக்கடை துர்நாற்றம் ஒரு விநாடி கடப்பவரின் சுவாசத்தை நிறுத்தவே செய்யும், தன்னையும் அறியாமல் கை மூக்கைப் பொத்தச் செல்லும்….

  அந்த இடுகை அப்படிப் பட்ட சாக்கடை நாற்றமே… அதனால் தான் அத்தனை பேரை குத்த வைத்திருக்கின்றது.

  தமிழ்மணமும் ஒரு திரட்டியே, அதே சமயம் தமிழ்மணத்தின் வாக்குகள் ஒரு நல்ல அளவு கோளே… எனக்குத் தெரிந்து இது வரை அதிக வாக்குகள் இட்ட இடுகையாக 55 வாக்குகளைப் பார்த்திருக்கிறேன்… இதுவரை 76ல் 66 பேர் மைனஸ் வாக்கு என்பது இதுவரை பார்த்திராத ஒன்று…. இந்த எதிர்ப்பு வக்கிரமான எழுத்துக்குத்தான் என்பது என் கருத்து

  பின்னூட்டம் by ஈரோடு கதிர் | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • //ஒரு விநாடி கடப்பவரின் சுவாசத்தை நிறுத்தவே செய்யும், தன்னையும் அறியாமல் கை மூக்கைப் பொத்தச் செல்லும்….//
   சாக்கடை என்றால், பூக்கடைக்கு வந்தவரெல்லாம் சாக்கடையை பிரதானமாகக் கொண்டு பூக்கடையையே மறந்துவிட்டனர் என்கிறேன். இப்படித்தான் பூக்களைக் கண்டுகொள்ளாமல் சாக்கடையையே தேடிக்கொண்டிருக்கின்றனர்கள் என்கிறேன்.

   //இதுவரை 76ல் 66 பேர் மைனஸ் வாக்கு என்பது இதுவரை பார்த்திராத ஒன்று…. இந்த எதிர்ப்பு வக்கிரமான எழுத்துக்குத்தான் என்பது என் கருத்து//
   அதில் விழுந்த அரை சதவீகித ஓட்டுக்களுக்கு அவைப் பொருந்தும். ஆனால் மேலே அண்ணன் வெளியூர்க்காரன் கூறியது போல இது அந்த குணம் கொண்டதற்குத் தான் என்பது தெளிவாவே தெரிகிறது.

   உங்கள் வருகைக்கு நன்றி

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 4. உடனடியாக நான் போட்ட பதிவு:

  பிரபாகரன் தாயார் – என்ன கொடுமை இது ?
  http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_16.html

  பின்னூட்டம் by பரிதி நிலவன் | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • உங்கள் வருகைக்கு நன்றி
   உங்கள் இடுகையையும் இணைத்துவிட்டேன்.

   நீங்கள் அந்த சாதிப் பெயரைப் பயன்படுத்தி திட்டிவிட்டு அந்து பிறப்பால் ஒருவரை திட்டவில்லை என்றும் சொல்கிறேர்கள் அண்ணே ஒரே குழப்பாமிருக்கு. அப்ப அடுத்து எல்லா அதிகாரவர்கங்களையும் திட்டும் முன் அவர்களின் சாதிப் பெயர்களை தேடிக்கொள்ளவும்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 5. நண்பா ,

  ///அதிலும் ஜாதி வெறியையும் இனவெறியையும் நுழைத்து தமிழனை கூறு போடும் பதிவுகளை இங்கு. கண்டிக்கவும் வேண்டும். //

  மனு தர்மம் , சாஸ்த்ரம் என்று பேசும் நபர்களுக்கு – அவா நடையில் பதில் பேசுதல் தவறா ஆகாது .

  -ஸ்ரீதர்

  பின்னூட்டம் by ஸ்ரீதர் | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • ஸ்ரீதர் அண்ணே வாங்க,
   //மனு தர்மம் , சாஸ்த்ரம் என்று பேசும் நபர்களுக்கு// அப்ப உங்க வெறுப்பெல்லாம் மனுதர்மத்தின் மீதும், சாஸ்திரத்தின் மீதும் மட்டும்தானா தமிழர்கள் மீதில்லையா?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 6. பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்… உங்களது இந்தப் பதிவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன்.

  பகிர்வுக்கு நன்றி.

  பின்னூட்டம் by சிரவணன் | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • சிந்திப்போம்
   வருகைக்கு நன்றி

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 7. //தமிழனுக்கு எதிரி தமிழன் தான்

  இவனுங்களை எல்லாம் இன்னுமா தமிழன் என்று நம்புகிறீர்கள். தலைப்பை மாற்றுங்கள்

  தமிழின பிரச்னை எதுவென்றாலும் இந்த கூட்டங்கள் எப்படி பூணூலை முறுக்கிக்கொண்டு ஒன்றாக பரப்புரை செய்கிறார்கள், எதிரிகளைவிட இந்த துரோகிகள் ஆபத்தானவர்கள். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர்கள்

  பின்னூட்டம் by பரிதி நிலவன் | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • அண்ணே பரிதி நிலவன்,

   கொஞ்சம் திருப்பி படிச்சு பாருங்க இங்கு உங்களை மாதிரி ஆளுகளைத் தான் அப்படி கேட்டுருக்கேன். அது அப்படி உங்களை குறிக்கவில்லைஎன்றால் சொல்லுங்க குறிக்கும் படி எழுதிவிடுகிறேன்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 8. அதிலும் ஜாதி வெறியையும் இனவெறியையும் நுழைத்து தமிழனை கூறு போடும் பதிவுகளை இங்கு. கண்டிக்கவும் வேண்டும்.
  http://paamaranpakkangal.blogspot.com/2010/04/blog-post_1444.html//
  இதில் ஜாதிவெறி என்ன கண்டீர்கள் எனக்குப் புரியவில்லை.
  /கோணி சுத்தி அடிக்காத தொர! புண்ணியமா போவும் என மந்திரிகளைப் பார்த்து வீரர் வானம்பாடிகள் ஐயா கேட்பார்/
  இதை முழுதாகப் போட்டிருக்கலாமே!

  டோண்டுவின் முழுப்பதிவையும் பட்டாபட்டி பக்கத்தில் படித்திருந்தால், டோண்டு எதையெல்லாம் எடுத்துவிட்டார் எனத் தெரியுமே.

  அப்புறம் உங்க ஓட்டுக் கணக்கு எனக்குப் புரியலிங்க. ஒரு வேளை, கதிர், என்னுடையபதிவு, பட்டாபட்டி, ரோஸ்விக் ஆகியோரின் பதிவில் ஒரே பேர்களை விட்டுக் கூட்டினால் கணக்கு சரியாக வரக்கூடும். தேவைன்னு நினைச்சா பண்ணிப்பாருங்க. மற்றபடி என் இடுகையில் முதல் முறையாக வந்து பழையகணக்கு எல்லாம் எப்படிச் சொன்னீங்கன்னு புரியலை. இல்லாத குழப்பம் உண்டாக்க முயற்சித்தமைக்கு நன்றி

  பின்னூட்டம் by வானம்பாடிகள் | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • //அப்புறம் உங்க ஓட்டுக் கணக்கு எனக்குப் புரியலிங்க. ஒரு வேளை, கதிர், என்னுடையபதிவு, பட்டாபட்டி, ரோஸ்விக் ஆகியோரின் பதிவில் ஒரே பேர்களை விட்டுக் கூட்டினால் கணக்கு சரியாக வரக்கூடும்//

   ஐயா, நானும் அதைத் தான் சொல்லவருகிறேன். இப்பாடி பிரிந்துகிடக்காதே தமிழா என்கிறேன். மீண்டும் படித்துப்பாருங்கள்.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • //டோண்டுவின் முழுப்பதிவையும் பட்டாபட்டி பக்கத்தில் படித்திருந்தால், டோண்டு எதையெல்லாம் எடுத்துவிட்டார் எனத் தெரியுமே//
   நான் என்ன டோண்டு அவர்களை ஆதரித்தா பேசிக்கிறேன்? அவர் கருத்தில் நான் உடன் படவில்லையே !

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • //பூணல், திருமண், பட்டை, அரணாக்கயறு, தொப்பி, சிலுவை எதுவும் நிக்காது. கதியத்துப் போன ஒரு கூட்டம். யாராவது மனசிறங்க மாட்டாங்களா, ஒரு துண்டு ரொட்டி கிடைக்காதா?//
   ஏன் ஐயா இவர்களைஎல்லாம் இழுக்குறேங்க? பிரச்னைக்கு காரணம் இவுங்கதாணு கண்டுபிடிச்சுதேங்களா? எந்தவொரு பிரச்சனைனாலும் இப்படி மதத்தையும் சாதியையும் இழுத்துவிட்டு கிட்டேயிருந்ததாலத்தான் நாம இன்னும் போராடிக்கொண்டேயிருக்கிறோம்….
   எல்லா பிரிவினைக்குக் காரணாம் உங்களைப் போன்ற நாத்திகர்கள்தானு சொல்லவா?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 9. என்ன பண்ணுவது…………இன்னொரு விடயம் இலங்கையில் நடைப்பெற்ற Electionயில் கண்டி மாவட்டத்தில் ஒரு தமிழன் கூட வெற்றி பெறவில்லை. இவ்வளத்துக்கும் கண்டி மாவட்டத்தில் 120000 தமிழர்கள் vote போட தகுதியானவர்கள்.ஆனால் முஸ்லிம்கள் 90000 பேரே தகுதியானவர்கள்.3 முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளார்கள் Parliamentக்கு.

  எவ்வளவு விலை கொடுத்தேனும் தமிழனின் தலைஎழுத்தை மாற்றவேண்டும்.கட்டாயமாக மாற்றுவோம்.
  Mark my Words இனியொரு விதி செய்வோம்.

  பின்னூட்டம் by Sri | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

  • உங்கள் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்
   சிந்திப்போம்.
   வருகைக்கு நன்றிகள்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 10. //மொத்தமாகப் பார்த்தால் ஆட்சியாளர்களை கேள்விக்கேட்க இந்த தமிழர்கள் அஞ்சுகிறார்கள் என்பதுமட்டும் தெரிகிறது ஆனால் நமக்குள் அதே மனநிலையில் உள்ள ஒருவரைக் கண்டால் துவைத்து எடுத்தாகிவிட்டது. இனி நாம் அந்த அம்மாவுக்கு ஆதரவாக இருப்பதாக ஊர் நம்பட்டும்.///

  very worth full statement

  பின்னூட்டம் by jeya kumar | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 11. என்னை எல்லாரும் மன்னுச்சுருங்க

  பின்னூட்டம் by ரெட்டைவால் ' ஸ் | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி

 12. நம்ம ஊர் சனநாயகம் ஒரு போலி. உண்மையான கருத்து சுதந்திரம் கிடையாது. பத்திரிக்கைகளே பொருப்பில்லாமல் எழுதுகிறார்கள். மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்று சேருவதில்லை. இதில் இணையம் மட்டுமே சிறப்பான கருத்துப் பரிமாற்றுத் தளம். இன்னும் சில காலங்கள் கடந்த பின்பு இன்னும் ஆரோக்கியமான பதிவுகள் நிறைய வரும். அதனால் திட்டி எழுதுவதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழனுக்கு தமிழனே எதிரி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மொத்தமாக சொல்ல வேண்டுமெனில் பெரும்பான்மையான தமிழர்கள் அடிமை மனம் கொண்டவர்களே. அதுதான் இப்போதைய சூழலுக்கு காரணம். காரணிகள் அதிகம். சுக போக வாழ்க்கை வேண்டுமாயின் சுயநலம் அதிகம் வேண்டும். அதுதான் காரணம். பழகிவிட்டது. யார் எப்படிப் போனால் நமக்கென்ன. நாளை நமக்கு எதாவது ஒன்றென்றால் ஒருவரும் வர மாட்டார்கள் என்பது தெரியவில்லை. இதுவும் ஒரு காரணம். ஒரு வயதிற்குப் பிறகு… வயதானவர்களே ஒரு குழந்தைதான். மனிதநேயம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் அந்த அம்மாவை திருப்பி அனுப்பக் காரணம். இந்த விடயத்தை நூற்றில் 5 பேர் கூட தமிழகத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. அந்த தைரியம்தான் ஆட்சியாளர்களுக்கு. தமிழனாக இரு என்று கேட்பதை விட… முதலில் மனிதானாக இரு. கல் நெஞ்சம் படைத்தோர் வாழும் கலிகாலம்.

  பின்னூட்டம் by பத்மநாபன் | ஏப்ரல் 23, 2010 | மறுமொழி

  • //இன்னும் சில காலங்கள் கடந்த பின்பு இன்னும் ஆரோக்கியமான பதிவுகள் நிறைய வரும். அதனால் திட்டி எழுதுவதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.//
   நீங்க சொல்றபடியும் பார்த்தா திட்ட வேண்டியவர்களில் அதிகாரவர்க்கம் என்றால் விட்டுவிடவேண்டுமா?

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 23, 2010 | மறுமொழி

 13. //தமிழனுக்கு எதிரி தமிழன் தான்//

  உங்களைப் போன்றோரும் இங்கே தேவை.. அதே நேரம் சுருக்கென்று கருத்து தெரிவிப்பவர்களும் இங்கே தேவை.. அவர்களால் தான் பல உண்மை விஷயங்கள் வெளி வருகின்றன.. உதாரணத்திற்கு, பட்டாபட்டி, ரோஸ்விக் மற்றும் வானம்பாடி அவர்களின் பின்னூட்டங்களைப் பார்க்கவும்..

  ஆனாலும் உங்கள் பதிவு முக்கியமானது.. உங்கள் எழுத்து நடையில் உள்ள தண்மை ராகவன் ஐயா அவர்களின் எழுத்துகளில் இல்லை.. அந்த எதிர்ப்பைத் தான் அவர்கள் மிகுந்த கோபத்துடன் வெளிப் படுத்தியிருக்கிறார்கள்.. எனக்கு அவர்களைப் போல மிகக் காரமாக எழுத வரவில்லை.. எனவே ராகவன் அவர்களின் பதிவிலும், இவர்கள் பதிவிலும் பின்னூட்டம் மட்டும் இட்டு விட்டேன்..

  தொடருங்கள்..
  நன்றி..
  பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி

  பின்னூட்டம் by பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி | ஏப்ரல் 25, 2010 | மறுமொழி

 14. கடற்படை தரைப்படை வான்படை
  தமிழ் ஆன்மீகம்
  நீதிமன்றம் காவல்துறை வங்கி அரசியல் ரீவி றேடியோ சினிமா என பலவற்றை வைத்திருந்து விடுதலைப்பாதையில் பயணித்த உன்னதமான கருவை சுமந்ததால் அந்த மூதாட்டிக்கு இந்த நிலை தேவைதான்..

  பின்னூட்டம் by Cool Boy | ஏப்ரல் 29, 2010 | மறுமொழி

 15. http://www.mmabdulla.com/2010/08/blog-post.html
  ஸ்மார்ட் சார் இதை படிங்க ,ஆண்களை மயக்க்கி வலையில் விழவைக்கும் பெண்கள்.
  இவர்களுக்கு ஒருவன் என்னை பதிவு மூலம்.வன்புணர்ச்சி செய்துவிட்டார் என சொல்ல என்ன அருகதை உள்ளது?இவள் பூக்காரி அல்ல பீக்காரி.

  பின்னூட்டம் by ganeshkumar | ஓகஸ்ட் 9, 2010 | மறுமொழி

  • நண்பரே!
   நீங்க இடுகை மாறி கருத்திட்டதாக நினைக்கிறேன். பூக்காரி இடுகை சம்மந்தமான பதிவு இது இல்லை என நினைக்கிறேன்.
   கருத்துக்கு நன்றி.

   பின்னூட்டம் by smarttamil | ஓகஸ்ட் 10, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: