ஸ்மார்ட் பார்வை

ஸ்மார்ட்டான பார்வை

ஜோதிடம் என்பது ஒரு பொய்?

பாராட்டு என்பது பெறுவதைவிட அதை தக்கவைத்துக்கொள்வதே உண்மையான திறமை. சமீபத்தில் ஒரு பெரிய எழுத்தாளர் பாராட்டியதாக விளம்பரப்படுத்தும் நண்பர் MSV MUTHU அவர்களின் இடுகையை பார்த்தப்பின் பல மணி நேரம் வாசித்துக்கொண்டே இருந்தேன். கடைசி வரையிலும் ஒன்றும் அந்த அளவிற்குயில்லை மாறாக பொய்யும், அறிவு நாணயத் திருட்டும், கீழான விருந்தோம்பலும் என்னை உலுக்கிப் போட்டுவிட்டது. சமீபத்தில் அவர் வெளியிட்ட “ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!” பதிவில் அடுக்கடுக்காக சில அறிவியல் விஷயங்களை நிரப்பி இறுதியில் ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்! என்று முடிக்கிறார். ஜோதிடம் மெய்யாப் பொய்யா என்ற விவாத பெரிய தளமாகையால் அவர் குறிப்பிட்ட விஷயங்கள் எவ்வளவு அபத்தம் என்று மட்டும் பார்க்கலாம், சில மறுமொழிகள் கடந்த நிலையில் ஒருவரை எளிதில் முட்டாளாக கருதும் அவரின் ஆணவத்தை இங்கு பதிவு செய்வதை யன்றி வேறு வழி தெரியவில்லை. நானும் பாராட்டுகிறேன் விளம்பரப்படுத்தட்டும்.

//ஜோதிடம் பொய். சுத்தப் பொய். உங்களிடம் யாராவது ஜோதிடம் பற்றிச் சொல்கிறார்கள் என்றால் உங்களிடம் ஏதோ ஒன்றை விற்க முயற்சிக்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்களை ஏமாற்றுகிறார்கள்.//
இதைப்போன்ற வார்த்தை அலங்காரங்களில் அவரின் உண்மையான பார்ப்பனீயத்தை வெளிப்படுத்தி பகுத்தறிவின் வேலையை மட்டுப்படுத்தி தனது இடுகையை தொடங்குகிறார்.

//ஆனால் கடைசியில் பார்த்தீர்களேயானால் இந்த சக்திகள் எல்லாம் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அவை நம் மீது செலுத்தும் சக்தியையுமே குறிக்கின்றன.// ஜோதிடத்தின் ஒரு சாரத்தின் விளக்கத்தை அவர் இவ்வாறு மட்டும் எடுத்துக்கொள்கிறார். கிரகங்கள் நம்மீது செலுத்தும் சக்தி என்று அடித்துச் சொல்லி பிறகுதான் தனது தந்திரத்தைப் பயன்படுத்துகிறார். உடனே விசையைப் பற்றி பெரிய விளக்கம் கொடுக்கிறார், விசை நம்மை ஒன்று செய்யாது என தனக்குத் தெரிந்த அரைகுறை இயற்பியலால் நிருப்பிக்கிறார். சக்தி என்பது ஜூல் அளவுகளால் கணிக்கப்படுவது மற்றும் விசை என்பது நியுட்டன் அளவுகளால் கணிக்கப்படுவது என்பது சாதாரண தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்குத் தெரிந்த ஒன்று. அனால் இவர் ஏன் கிரகங்கள் மனிதன் மேல் செலுத்தும் சக்தியை வெறும் விசைவடிவில் கணித்தார் ஒரு வேளை எதோ ஒருமத வெறுப்பா அல்லது அறியாமையா?

எதுவாகயிருப்பினும் இதற்கு மேல் அவர் நிருபித்த விசை தத்துவங்களில் உள்ள குறையை சொல்லத் தேவையில்லை.ஆனால் கடைசியில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு சாதாரண (நாத்திகனாக) எனக்கு கிடைத்த விஷயங்களை அவருக்கு மட்டுமல்ல மற்றவரும் சிந்திக்க இங்கு பதிவு செய்கிறேன். ஜோதிடம் என்பது ஒரு வகை அறிவியல், அதை தவறாகப் படித்து யூகம் செய்பவர்களால் ஜோதிடம் பொய்யாகாது. உதாரணமாக இரண்டாடுகளுக்கு முன் சுவாச நோய் சிகிச்சைக்காக ஆங்கில மருத்துகளை நாடினேன், ஆனால் நோயை அது குணப்படுத்தவில்லை, கடைசியில் சித்த மருத்துவப் படி குணமாகிக்கொண்டிருக்கிறது. அதனால் ஆங்கில மருந்துகள் மிகப் பெரிய போய் என்று மெடிக்கல் சாப்புகளை குற்றம் சொல்லி பேசுவது மகா முட்டாள் தனம். பகுத்தறிவை விசாலப்படுத்தி யோசிக்க வேண்டிய ஒன்று.

மனித சக்திகளால் உணரக்கூடிய விஷயங்களையே நாம் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. மேலும் உணரமுடியாத விஷயங்கள் பல கோடி. கண்டுபிடித்த விஷயங்களும் ஜோதிடத்தை மறுக்கவில்லை. ஆனால் சில சிந்தனையாளர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். திணிவு ஆற்றல் சமன்பாட்டின் படி ஒரு சிறியப் பொருளுக்கும் பெரிய சக்தி உண்டு என்கிறது. (Mass-energy relation) அந்த வகையில் சின்னச்சின்ன துகள்களும் போதிய வேகத்தில் பெரிய சக்தியை உண்டு பண்ணும் என்பது நிருபிக்கப்பட்டது. ஒளி என்பது துகளாகவும் அலையாகவும் பண்புகளைக் கொண்டது, குவாண்டம் இயல்பியலில் கூற்றுப்படி எந்த ஒரு பொருளும் தனக்கு தகுந்த சுழலில் ஒளியை உமிழவும், மின் சக்தியாக மாற்றவும் முடியும் என்கிறது. உதாரணம் ஒளி மின் விளைவு, க்ராம்டன் சிதறல் எனலாம். இயற்கையில் ஒளி என்பது மின்காந்த அலை இவை பல்வேறு வகைகளாக இருக்கிறது. நாம் கண்ணுக்குத் தெரிபவை சுமார் 0.5 மைக்ரோ மீட்டர் அலைநீளம் கொண்ட கதிர்கள் மட்டுமே. இப்படியிருக்க கிரகங்களும் ஒளியை உமிழ்கிறது என்பதை நம் அகக் கண்களாலே உணரமுடிந்த நிலையில் கட்டாயம் கண்ணுக்குப் புலப்படாத அலைகளும் வரலாம் அவை மனித மரபணுக்களை தாக்காது என்று நிருபிக்கப்படவில்லை. அதன் தாக்கம் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும் அதனால் சரியான கணிப்புத்திரனுடன் கணிக்க ஜோதிடம் உதவுகிறது.

ஒரு விஷயத்தை இல்லை என்பதற்கு அறிவு தேவையில்லை அதை உண்டு என்று வாதிடுவதேற்கே அறிவு தேவை. இத்தனை விஷயங்களும் இன்னும் எத்தனையோ விஷயங்களும் நிருபிக்கபடாதவரை வெறும் கற்பனை என்றுதான் இந்த மறுப்பாளர்கள் சொல்வார்கள். அதையும் மீறி சில வெறுப்பாளர்கள் அதை திட்டியும் பதிவுகள் இணைய உலகில் அரங்கேற்றப் பட்டுவிட்டது. இப்படி நிருபிக்காதவரையில் அதை மிகப் பெரிய போய் என கூறுவதன் நோக்கம் வீணான விதண்டாவாதமே அன்றி வேறில்லை நம்பமுடியாவிட்டால் நம்பவேண்டாம் அப்படி உலகில் உள்ள அனைத்து கதிர்களையும் ஆராயட்டும் அதைவிட்டுவிட்டு பொய் என்பது அறிவுத் திருட்டுத்தானே.

MSV MUTHU அவருக்கான கேள்விகள்.
ஜோதிடம் சொல்லும் சக்தியை ஏன் நீங்கள் விசையாக மட்டும் எடுத்து ஒன்றுமில்லை என்று நிருபித்தீர்கள். அந்த சக்தி ஒளி அல்லது, கமா வடிவில் வரமுடியாதா?
//கிரகங்கள் நம்மீது செலுத்தும் புவி ஈர்ப்பு சக்தி மிக மிக குறைவு.// என்று நீங்களே கூறிவிட்டு விடச் சொல்கிறேர்கள், அந்த குறுகிய சக்தியும் ஏன் தாக்கத்தை ஏற்ப்படுத்தாது?
//எல்லா சக்திகளும் தூரத்தைப் பொருத்து மாறுபடும்.இது அடிப்படை அறிவியல்.// ஜோதிடத்திற்காக சொல்லவில்லை பொதுவாகவே கேட்கிறேன் மையநோக்கு விசை (சென்ரிபிட்டால்) யால் கடைகோடி கிரகமும் சுரியனை கச்சிதமாக சுற்றுகிறதே இதிலிருந்தே தெரியவில்லையா தூரமும் சக்தியை மிக சிறிய அளவே பாதிக்குமென்று.
//உங்கள் ஸ்மார்ட்னெஸை வேறு உருப்படியான ஒன்றுக்குப் பயன்படுத்துங்கள்.//
//உங்களை உண்மையிலே ஸ்மார்ட் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இயற்பியலின் அடிப்படை கூடத் தெரியாதவர் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது.//
என்று விவாதிக்க வராமே மறுமொழிகளை காலம் தாழ்த்தி வெளியிட்டு தேவையில்லாத விளக்கம் கொடுப்பதேன் மற்றும் இப்படி மட்டம் தட்டுவது உங்கள் நாத்திக பார்ப்பனீய குணமா?

மேலும் ஜோதிடம் சார்ந்த விளக்க சுட்டிகளிருந்தால் கொடுங்கள் நண்பர்களே

Advertisements

ஏப்ரல் 18, 2010 - Posted by | Uncategorized

13 பின்னூட்டங்கள் »

 1. annatha vankamm

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி

 2. mudiva neenga enna solla varenga?

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி

 3. ungaluku physics theriyum nu solla varengala?unga blog ku smart tamil nu vaikirathu ku bathila smart physics nu vainga?

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி

  • I mean to express my view in his article and questioning him as he deleted my comments there.

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி

 4. smart your article is very smart.

  பின்னூட்டம் by தனபால் | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி

 5. //I mean to express my view in his article and questioning him as he deleted my comments there.//

  Epa yaru ungaloda comment ah delete panna?

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி

  • குரவலை எனற தளத்தில் அவரிட்ட கருத்துக்கு நானிட்ட கடைசி முன்று கருத்தை அவர் அழித்துவிட்டு பதில் சொல்லாமல் இருக்கிறார் (பகுத்தறிவுன் குரவலை நெறிப்போ) MSV MUTHU

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி

   • தலைவா!
    முத்துக்கு சரியான குத்து போங்க

    பின்னூட்டம் by Raman | ஏப்ரல் 19, 2010

   • @ Raman
    அவர் படித்திருந்தால் அப்படித்தான் போல
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 19, 2010

 6. Appa atha neenga muthukitala kekanum.onnumea pannama eruka enkita en kekanum?

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி

 7. Na ungata enna question ketena neenga mudiva enna solla varenganu than keten.

  பின்னூட்டம் by madurai ponnu | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி

  • மதுரைப் பொண்ணு அவர்களே,
   இது முத்துவின் பொய் புரட்டு இடுகைக்கான அறிவு திரட்டு இடுகை. முடிவாக அவரின் இடுகை பொய் என நிருபிக்கிறேன். அவரும் அதை மறுத்து எங்கும் கேள்வி கேட்க முடியாததால் இதுதான் மெய் எனக்கொள்கிறேன்

   பின்னூட்டம் by smarttamil | ஏப்ரல் 19, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: