பதிவரசியல்: எனக்கு பிடித்த பதிவர் வினவு(?)
//பதிவுலகில் மற்றொரு வன்கொடுமை அரங்கேறியுள்ளது, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த L. smart என்ற புதிய பதிவரை, நாத்திக மதத்தைச்[*] சேர்ந்த பதிவர் அருண் என்ற வால்பையன் தனது எழுத்துக்களால் காயப்படுத்தியுள்ளார்.//
என்று சில தினங்களில் பதிவிடப்போகும் பாசத்திற்குரிய தோழர் வினவுக்கு எனது அட்வான்ஸ் நன்றிகள்.
தோழர் வினவு ஏன் பதிவிட வேண்டும் என்று கேட்பவர்கள் மேலே படிக்கவும்
- முதலில், வினவு தோழர் எதையும் இடுகை சார்ந்து பார்ப்பதில்லை அதில் உள்ள கபட நாடகத்தையும் சேர்த்துப் பார்க்கும் நல்ல விமர்சகர்,
- இரண்டாவதாக இதில் உள்ள பழையக் கணக்குகளையும் தூசிதட்டிப்பார்ப்பதால் எனது பழைய இடுகைகளையும் பார்த்திருப்பார், மேலும் தவறாமல் PDF கோப்பாகவும் எடுத்து வைக்கும் சமூக சேவகர்.
- மேலும் பதிவுலகில் இருக்கும் அநேகமானவர்களின் நடத்தை ரகசியம் தெரிந்த ஒரே பதிவர் என்கிற முறையில் எனக்காக வாதங்களை முன்வைப்பதில் சிறந்தவர்.
- சிறு வயதிலிருந்தே ஞானப்பால் குடிக்காத எனது எதிர்க்கட்சிக்காரரை சீண்டி அவர் பாணியிலே நான் கொடுத்த பதிலடிகளை அமோதிப்பார் மற்றும் பாராட்டுவார்.
- இனி என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சில ஆலோசனைகள் கொடுத்த ஐடியா டிப்போ வினவு எனக்கும் ஐடியா கொடுக்க கடமைப் பட்டுள்ளார்.
- நீங்கள் எனது எதிர்க்கட்சிக் காரரின் சாதிச்சாயம் வெளுக்கும் படி பதிவெழுதும் முற்போக்காளர்.
- இப்படி புதிய பதிவரை தனிப்பட்ட முறையில் அவர் அனுமதியின்றி பலமுறை அவதூறாக பேசுவது புதியவர்கள் ஒரு சுயேச்சையான சமூக ஆளுமையாக தலையெடுக்கக் கூடாது என்பதில் 24 மணி நேரமும் கவனமாக இருப்பவர்களை தட்டிக் கேட்பவர் நீங்கள்.
தோழர் வினவு எப்படி பதிவிடவேண்டும், மேலே படிக்கவும்[**]
- பழைய கணக்கு என்று நானும் அவரும் விவாதித்த கடந்த கால இடுகையை இங்கு சுட்டிக்காட்டி, என்னை கடைசி வரை கிண்டலடித்ததை சுட்டிக்காட்ட வேண்டும்.
- ருத்ரன்- செந்தழல் ரவி- ஸ்மார்ட் என்றும், நாத்திகம்-ஸ்மார்ட்-வால்பையன் என்றும், வால்பையன்-ஸ்மார்ட்-ராஜன் என்று உங்கள் பின்புல கதைச் சொருகலை இப்படி அமைக்க வேண்டும்.
- யார் இந்த வால்பையன்? என்றும் அவரின் பதிவுகள் அனைத்தும் வார்த்தைப் பிரயோகம் அநாகரீகமானது அப்படி, இப்படி, என்று கூறிவிட்டு எனது பதிவுகளில் நாகரீகம் காக்கப்படுகிறது என்று கூறி முடிக்க வேண்டும்.
- திருட்டுக் குற்றம் சாற்றப்படுகையில் பிளாக்கின் டேம்ப்லைட்டை மாற்றிவிடும் வால்பையன் என்று கூற வேண்டும்.
- கிளைமாக்ஸ்:- தனது நாத்திக பதிவராக காட்டுவதை கெடுக்கும் விதமாக செயல் படும் மற்றொரு நாத்திக பதிவரைக் கண்டதால் அடிக்கடி அவருடன் கருத்து மோதலில் களமிறங்கும் வால் பையன் தகுந்த நேரத்திற்காக 18 வாரங்கள் காத்திருந்தார் தக்க தருணத்தில் தனது வாயால் சொல்லிய ஒரு வார்த்தையை ஸ்மார்ட் அடிக்கடிப் பயன் படுத்துவதை உணர்ந்து ஸ்மார்டை அவதுறாக பேசக்கிளம்பிவிட்டார். என்று முடிக்க வேண்டும்.
- எந்தளவு வால்பையனும் அவரது ஆதரவாளர்களும் கொடூரமான வார்த்தை பண்பாளர்களாக இருக்கிறார்கள்
- இந்தளவு ஸ்மார்டை விமர்சிக்க அவரின் மூத்தப் பதிவர் என்கின்ற ஆணவமும் கும்மியடிக்க ஆளிருக்கும் திமிரும் என்றும் சொல்லலாம்.
- வால்பையன் அசிங்கமான கொடுரமான முகம் இப்படி வெளிப்பட்டாலும் அதை ஜவ்வாது பூசி மறைப்பதற்கு சில பதிவர்கள் வெட்கமின்றி முயல்கிறார்கள்.
- ‘வினவு என்னும் புடிங்கிகள்’ என்னும் பதிவிற்கு வந்த வேண்டாதவர்களையும் இந்த இடுகையில் சேர்த்து திட்டிக்கொள்ளுங்கள் மற்றும் சுய வெறுப்புக்களையும் திட்ட நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
- இந்த அப்பட்டமான தனி நபர் தாக்கிற்காக அவரை தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்திலிருந்து வெளியேற்ற கோரிக்கை வைக்க வேண்டாம் காரணம் அதற்கு முன்பிருந்தே எழுதிவந்த பதிவர் இவர். [இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்]
இப்படி காரணங்கள் இருந்தும் பதிவிடவில்லைஎன்றால் ஊர் என்ன பேச்சும்? மேலே படிக்கவும்
- சுய எண்ணத்தையும் தனது வன்புணர்ச்சியும் காட்ட இப்படி ஒரு இடுகையை எழுத தானும் அவர்கள் இருவரைப் போல பல நாள் காத்திருந்ததாக சொல்லும்.
- ஒவ்வொரு இடுகை இடுவதற்கு (28-may 29-may) முனமே PDF கோப்பாக மாற்றி வன்புணர்ச்சிக்காக காத்திருந்ததாக ஊர் சொல்லும்.
- மிகவும் முக்கியமான மற்றும் கண்டிக்கப் படவேண்டிய ஆபாச இடுகையை விமர்சிக்கையில் தனது சுய நலத்திற்காக பயன்படுத்துபவர் என்று ஊர் சொல்லும்.
- அது தெரியாமல் நல்ல விஷயத்திற்காக கொஞ்சம் சாதிச் சாயம் மற்றும் மதச்சாயம் மற்றும் ஆதிக்க சாயம் மற்றும் etc சாயங்களும் சேர்த்தால் தப்பில்லை என்று நினைக்கும் மறுமொழி பதிவர்கள் இவர்கள் என ஊர் சொல்லும்.
- பிரபல பதிவரென்றால் மட்டும் காப்பாற்றுவார் புதிய பதிவர்களை வளரவிடமாட்டார்.
- சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பதிவரென்றால் மதிக்கமாட்டார்.
- பிரச்னையை ஆராய திராணியற்றவர் என்றும் ஆண்/பெண் பாகுபாடு கொண்டவர் என்றும் சொல்லும்
ரொம்ப சாரி என்னை வால்பையன் எப்படி தாக்கினார் என்று சொல்ல மறந்துவிட்டேன். அதன் சுருக்கம், கடந்த இடுகை ஒன்றில் விவாதத்தின் முடிவில், அண்ணன் வால்பையன் தான் எருமை போல வாழ்வதில் மகிழ்ச்சி என்றும் அதற்கு நான் கூறிய ‘கலக்குங்க தல எருமமாடே’ என்றதற்கும் நன்றி கூறி விவாதத்தை நிறைவு செய்தார். அவர் வாயால் ஒப்புக் கொண்டதை நான் பயன்படுத்தி மேலும் அவர்தளத்தில் விவாதிக்க முனைகையில் காரணகாரியமின்றி என்னை ‘பன்றி’ என்று அவதூறாக பலமுறை விமர்சித்து என்னைக் காயப்படுத்தியுள்ளார் வினவு தோழர்களே! உதவுங்கள். எனக்கு உங்களைப் போல PDF கோப்புகள் எடுக்கத் தெரியாததால் நீங்கள் எடுத்திருந்தால் கொடுத்து உதவுங்கள். ஆதரவு தாருங்கள்! இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுங்கள்
கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்:
//நர்சிம்மின் எந்த இடுகையிலும் சந்தனமுல்லை மறுமொழிகள் இட்டதில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. //
அவரும் மறுமொழி போட்டதாக கூகிள் கூறுகிறது. நம்ம பக்கமும் ஏதாச்சும் கொஞ்சம் ரீல் விட்டு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்யவும், வினவு தோழர்களே!
ரவியண்ணனின் எழுத்தால் இருவர் ஒரு வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே என்று நான் கேட்க மாட்டேன் தோழர்களே காரணம் உங்களால் எனக்கு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. ஹி..ஹி ..
சரி உங்கள் தலைப்பை எப்படி வைக்கலாம்? உட்கார்ந்து யோசியுங்க வருகிறேன்.
[*] -நாத்திகம் என்பது மதம் என்று எங்கள் தலைவர் கூறிவிட்டார்.
[**]- இங்கு யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ வாளெடுக்கும் நிலையில் நான் இல்லை காரணம் எனது பிரச்சனையே ‘வால்’ தான்
யார் எப்படிப் பட்டவர்கள் என்று பார்க்க சின்ன பொறி வைக்கத் தான் இந்த சுயநலப் பதிவு. இனி இந்த சண்டையை சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்களை அடுத்தப் பதிவில் அலசியிருக்கிறேன்.
உட்டாலக்கடியின் உட்டாலக்கடி
///இது எந்த ஊரு தர்க்கமோ புரியலை. ரெண்டுமே நல்லதுன்னு சமமானதுன்னு சொல்லிட்டு வந்த பார்ட்டி (கீதாசிரியர்) ) படக்குனு ஒரு அந்தர் பல்ட்டி அடிச்சு . செயலை துறப்பதை காட்டிலும் செயலை செய்வதே சிறந்ததுங்கறாரே.//
கீதையில் இரண்டு விஷயத்தின் நல்லது கேட்டதைக் கூறி அவரவர்களுக்கு தேவையானதை எடுத்துக்க சொல்கிறது. ஆங்கிலத்தில் unique என்ற ஒரு வர்த்தையுண்டு பிரத்தேகம் எனப்பொருள்படும். இங்கே இரண்டு விஷயமும் பித்தேகமானது, சமமல்ல. கீதையின் எந்த இடத்தில் இரண்டும் சமம் என்று கூறியதாக காரணங்கள் கிடைத்தால் மேலே ஆராயலாம்
//பலனை எதிர்பார்க்காம கர்ம யோகம் செய்யறதெல்லாம் கொக்கு தலைல வெண்ணைய வச்சு பிடிக்கிற மாதிரி. //
பலனை வாங்காதே என்று கூறியதாக கற்பனை செய்து, அதற்கு புதுப் புது சாயம் பூசுறீங்க. இயற்கையா அமைகிற செயலுக்கும் செயற்கையா அமைகிற செயலுக்கும் வித்தியாசமுண்டு. ஒரு செயல் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் முழு ஈடுபாடு வேண்டும் எதையும் எதிர்பாக்காமல் இயற்கையாக செய்யும் செயல், ஏதோவொன்றை எதிர்பார்த்து அதற்காக செயற்கையாக செய்யும் செயலைவிட சிறந்ததுதானே.
//உழைத்தே அறியாத அந்த இனம் பிழைப்பதே துர்லபமாகிவிடும் என்பதால் செயலுக்கு ( கரும யோகத்துக்கு )வக்காலத்து வாங்குகிறார் கீதாசிரியர்.//
உழைக்காமல் ஜாதகம் பார்ப்பதாக மக்களை ஏமாற்றி உட்டாலக்கடி பதிவுகள் எழுதிக் கொண்டுயிருப்பவர்களுக்காகத் தான் செயலின்மையை கொண்டுவந்ததாகக் கூறுகிறீர்கள் போல
//ரெகுலர் ஸ்டடீஸுக்கும் தொலை தூர கல்விக்கும் வித்யாசமே கிடையாதுன்னு யூனிவர்சிட்டிங்க அடிச்சி விடறதை போல //
ரெகுலர்ல படிச்சவனெல்லாம் புத்திஜீவிபோலவும் தொலை தூரக் கல்வியில் படிச்சவன் எல்லாம் முட்டாள் போலவும் இடத்தை வைத்து மட்டும் கல்வியை கணிக்கமுடியாதே. அவனிடத்திலுள்ள ஆர்வம் தானே முக்கியம்
//”புலனை அடக்கிய”ங்கற வார்த்தைய பாருங்க. கீதை தலைசிறந்த மனோதத்துவ நூல்னு சவுண்டு விடறவங்க கூட இருக்காய்ங்க. புலனை அடக்குதல்ங்கறது மனோதத்துவ அடிப்படைக்கே விரோதம். மனிதனுக்கு வர்ர மனக்கோளாறுகளுக்கு முதல் காரணம் அவன் தன் மனதை அடக்கறதுதான். (அதுக்காக மனம் போன போக்குல மனிதன் போகனும்னு நான் சொல்லலே.)//
என்னங்க கடைசியில் மனம் போன போக்குல போகாதேன்னு அந்தர் பல்டி அடிக்கிறீங்க. இப்ப ஸ்மெல் பண்ணி பார்த்தா, உங்க ஜாதகம் சொன்ன பாதையில் போகணும்னு சொல்லவரீங்களா?
//புலன் களின் கிளர்ச்சியை அடக்க முடியாதுங்கறப்போ அதுக்கு சட்டம், சமூகத்துக்கு இணக்கமான வழில ஒரு வடிகாலை தேடிக்கிறதுதான் மனிதனின் மன நலத்துக்கு உத்தமமான மார்கம்.//
ஒருவனால் அடக்கமுடியதவிஷயம் எல்லாராலும் அடக்கமுடியாது என்று கேள்வி ஞானத்தை அடைத்துவிட்டீங்களா? மற்றவர் குடும்பத்தின் மீது ஏற்படும் புலன்களின் கிளர்ச்சியை அடக்காமல் சட்டம் போடச் சொல்கிறீகள் போல
//புலனடக்கம் புண்ணாக்குனு கண்டதையும் அடக்கினா அந்த சமாசாரம் மேம்போக்கான கான்ஷியஸ் மைண்ட்லருந்து ஆழமான சப்கான்ஷியஸ் மைண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருது. //
முயற்சி செய்யாமலே முடிவு கட்டியாச்சு. அப்போ அடக்கி வச்சவங்களோட சப்கான்ஷியஸ் மைண்டுல அதுயிருக்கும் என்கிறீங்க. இங்க தான் நிக்கிறது கீதை. எதையோ எதிர்பார்த்து நீங்க அடக்கமுயன்றால் (செயற்கையாக) அது அப்படித்தான் போகும், பலனை எதிர்பார்க்காமல் அடக்கினால் சப்கான்ஷியஸ் மைண்டுலையும் நிக்காது.
//மனோதத்துவ சாஸ்திரத்தின் அடிப்படைக்கே விரோதமான புலனடக்கத்தை பத்தி பேசற பகவத்கீதை தலை சிறந்த மனோதத்துவ நூலாம். //
மனம் சொல்வதையெல்லாம் செய்தால் மனிதனுக்கு மூளை தேவையில்லையே! மனதை சரியான பாதைக்கு அனுப்பினால்தானே மனோதத்துவமே தேவை
//பரமாத்மாவை இயற்கையின் மறு உருவா,உருவகமா, பிரதி நிதியா காட்டற கீதாசாரியர் புலன் களை அடக்குவது இயற்கைக்கு விரோதமானது அதாவது கிருஷ்ணருக்கே விரோதமானதுங்கற சங்கதியை வசதியா மறந்துர்ரார்.//
வயலில் புல் முளைப்பது இயற்கை என விடமுடியாது. இங்கே கர்மா என்கிற ஒன்றை சிந்தியுங்கள். தேவையில்லாததை அடக்குவதும் கர்மாதனே.
பகுத்தறிவாளர் மீதான அவிக அண்டர் எஸ்டிமேட்டை பத்தியெல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்!
Quiz
who is that உட்டாலக்கடி?
a)தனது பதிவுகளுக்கு மெம்பரல்லாதவர் கமென்ட் போட தடை போட்டிருப்பவர்
b)இந்தியாவை பணக்கார நாடாக்கிட திட்டம் தீட்டி அதை அமல் படுத்தியே தீர்வதென்று பிடிவாதமாய் உழைத்து ஏழையானவன்.
c)2006 ஹிட்ஸ் மட்டும் கண்டு இருட்டில் இருந்தவன்
d)தொழில் முறை ஜோதிடனாக மூடநம்பிக்கையை வளர்ப்பவர்.
e)நிர்வாண உண்மைகள்
விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும்
கலாச்சார சீரழிவு. உதவுங்கள்.
{ஆபாசத்தை கலைக்கண்ணோடு பார்ப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கான ஒரு அழைப்பு.}
இணையப் பதிவுகளுக்கென்று சைபர்கிரைம் வேண்டும் என்ற வாதத்தை முன்னிருத்துவதாக பல சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடக்கிறது. ஆபாசம் என்றும் மனதை திசை திருப்புபவை மற்றும் சமூகப் பார்வையிலிருந்து மனிதனை தன்னலப்பேனியாக மாற்றுபவை. இணையம் வளர்ந்த அளவிற்கு அதன் பிற்போக்குத் தனமும் வளர்ந்துள்ளது. அதை போதிய பகுப்பாய்வுக்குட்படுத்தாவிட்டால் இணையமே நம்மை சீரழிக்கும் கருவியாகிவிடும். தனி மனித இச்சைகள் நான்கு சுவற்றுக்குள்ளும், நாகரீகமாக பொது இடங்களிலும் இருப்பதுதான், அவற்றுக்கான ஆரோக்கிய நடைமுறை. மருத்துவ ரீதியில் சொல்லப் படும் பாலியல் விஷயங்கள் நீங்கலாக வன்மத்தைத் தூண்டும் விஷயமாகத் தான் இணையத்தில் உள்ள பாலியல் தளங்கள் செய்கிறது. அவற்றை பரப்புவதும், அவற்றை தடுக்காமல் விட்டுவிடுவதும் நமக்கு நாமே செய்யும் தீக்குளிப்பு. பொதுவாக மற்ற இன, மொழி மக்களிடம் தமிழனுக்கு சிந்திக்கத் தெரியாது, தமிழச்சி என்றால் இளக்காரம் (நமது திரைப்படங்கள் செய்யும் அளவுக்கதிகமான ரீமேக்காலும் மசாலா வகைப் படங்களாலும் வந்தவை சரி… வேறவொரு நாள் பார்க்கலாம்) என்ற பொது தகவல் பரப்பப்படுகிறது. அதை மெய்பிக்கும் முகமாக இணையத்தில் பல தமிழ் சார்ந்த அபாச தளங்கள் உலவுகிறது. தமிழர்களின் உறவு முறையை எந்தளவுக்கு கேவலப்படுத்தமுடியுமோ அந்த அளவுக்கு நவீன பட வசதிகளுடன் அரங்கேறுகிறது. ப்ளாக்கரிலும், வேட்ர்பிராஸ் போன்ற இலவச இணைய தள சேவையில் அத்தகைய தளங்களை அனுமதிப்பதில் பல கட்டுப்பாடுகள் வைத்துள்ளனர், ஆனால் அவற்றை நடை முறைப் படுத்துவது அவற்றைச் சார்ந்த மக்களைப் பொறுத்தது. அதிகமான மக்கள் அதை படிக்கிறார்கள் என்கிற எண்ணத்தில் அந்த தளங்களை நீக்காமல் விட்டுவிடுகிறார்களோ என்னவோ! இன்றல்லது ஒரு நாள் நமது பிள்ளைகள் பாதிக்கப் படுகையில் நாம் நடவடிக்கை எடுக்க முனைவோமோ என்னமோ!
அந்த தலைப்பிற்குள் ஆழப் போவது கசக்கிறது. நாம் எப்படி தடுப்பது என்று எனதறிவுக்கு எட்டியதை பதிவு செய்கிறேன். தானாக கண்ணில் படும் அத்தகைய சீரழிவு தளங்களை புகார் படுத்துங்கள்.( சைபர் கிரைம் வரும் வரை)
ப்ளாக்கருக்கு: http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=adult_image&hl=en&blog_ID=
வேர்ட்பிரஸ்க்கு: http://en.wordpress.com/report-mature/
இங்கு சென்று புகார் அளிக்கலாம் எனக் கண்டுபிடித்துள்ளேன். இன்னும் புதிய தடுப்பு முறைகள் அறிந்தால் கூறுங்கள்.
வேர்ட் பிரஸ் தளத்தின் நம்பகத்தன்மை அறிந்துதான் அதை பலர்பயன்படுத்தி வருகிறார்கள், நான் கண்டவரை அண்மைய நாட்களாக பல பாலியல் தளங்கள் வேர்ட் பிரஸில் தொடங்கப்படுகிறது. நமது கண்ணை நாமே விலை கொடுத்து விற்பதுப் போல அவற்றின் இடுகைகள் முன்னணி இடுகையில் வந்து பலரின் கவனத்தை ஈர்க்கிறது. அதுவும் தமிழின் சுடான இடுகை பகுதியில் வந்து நிற்கிறது, இனி தமிழ் மெல்ல சாகுமோ? வேறு தளங்களில் இருக்கும் ஆபாச பதிவுகளை முடிந்தளவு திரட்டிகளும் தேடுதளங்களும் தவிர்ப்பது நடைமுறையில் இருக்கையில் இந்த வேண்டாத விஷயம் வேண்டாத மனக்குமுறலை உண்டுபண்ணுகிறது. வேடர் பிரஸ் தளவிதியிலும் அவைதடை செய்யப்பட்டுள்ளது. எனவே நான் ஒரு புகாரை இங்கு கொடுத்துள்ளேன். விருப்பமுள்ளவர்களும், விரும்பாவிட்டாலும் எனக்காக ஒரு புகாரை கொடுங்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த தளத்து முகவரியை மீண்டும் தரவேண்டிய தேவையில்லை; பதிக்கப்பாடாதவர்களுக்கு அந்த தளமுகவரி தந்து பாதிப்படைய வாய்ப்பு தரவிரும்பவில்லை
மேலதிக தகவலுக்கு பின்னூட்டுக. மேலதிக உதவிக்கு சிந்தனையை பரப்புக
நாமும் மனிதர்கள் தானா?
பிறப்பின் அடிப்படையில் மனித இந்த இனம் மொழி, மதம், சாதி, பொருள்…..என பலவகை பிரிவுகளால் பிரிந்து வாழ்கிறது. உண்மையில் இந்த பிரிவுகள் தவறல்ல ஆனால் அதை அணுகும் முறையே தவறு. நம் குடும்பத்தில் ஒரு விசேஷம் என்றால் அனைவரும் ஓரே வேலையை செய்வதில்லையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை எடுத்துக் கொண்டு நமது விஷேசம் நிறைவடைவதைத்தான் நாம் விரும்புகிறோம். அப்போது, நீ மட்டும் அந்த வேலை செய்கிறாய்? நீ கீழான வேலை செய்கிறாய்? என்பதெல்லாம் தான் தவறான அணுகுமுறை. மற்ற பிரிவினரை மதித்து நடந்தாலே நமக்குள் ஒற்றுமை கட்டாயம் நிலவும். பிரிவுகளே வேண்டாம் என்று வெளியுலகிற்கு காட்டுபவர்கள் கூட தனக்குள்ளே பல பிரிவுகளை அனுசரிப்பதும் அதை அரசியல் செய்வதும் பகுத்தறிவுக்கு கிடைத்தை இழுக்கு. ஜாதிகள் இல்லை என்பவர்கள் பலரும் திருநங்கை என்ற பாலியல் ஜாதியை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்கிறார்கள். மதங்கள் பலவற்றுள் திருநங்கைகளுக்கு மதிப்பளிப்பதாக தங்கள் வேதங்கள் கூறினாலும் நடைமுறையில் மதத்தினரும் அதை மாறு கண் பார்வையில் தான் நோக்குகிறார்கள்.
திருநங்கையாக பிறந்தது அவர்கள் குற்றமா? எல்லாம் கடவுள் படைப்பு என்கிறீர்களே அந்த கடவுள் தானே இந்த திருங்கைகளையும் படைத்தார் பின்னர் எதற்கு இவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்? எல்லாம் அறிவியலில் ஆதாரம் காட்ட முயலும் நாத்திகவாதிகளே இதற்குள் இருக்கும் அறிவியல் காரணிகள் உங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையா? சாதிகளும் மதங்களும் இனங்களும் மனிதனைக் கூறுபோடும் கால நிலையில் அரவாணிகள் என்ற ஒரே இனம் மட்டும் இந்தப் பாகுபாடுகளுக்குள் வருவதில்லை. அதனால்தான் என்னவோ இந்த மனிதர்கள் அவர்களை வெறுக்கிறார்கள். யார் அரவாணி எனற தினமணியின் கட்டுரை உங்கள் பார்வைக்கு ..
சமுகத்தில் பல இடங்களில் இன்னும் இவர்கள் கீழான மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள் அதற்கு சமுகமும் ஒரு காரணாமாகும். வேலை வாய்ப்புக்கள் அன்றி சிலர் தவறான வழிகாட்டுதலாலும் சமுகத்தின் ஒதுக்கப்பட்ட நிலையாலும் விளிம்பு நிலை அரவாணிகள் தவறான தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். மேலும் ஊடகங்களும் விழிப்புணர்வுச் செய்திகளுக்கு மாறாக வெறும் கவர்ச்சி நிலை செய்திகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டு காசு பார்கிறார்கள். அரசும் தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பையும் இந்த சமுகம் உறுதி செய்யவேண்டும். இணையத்திலும் ஆங்காங்கே அவர்களை அடக்கும் பதிவுகள் வெளிவந்த வண்ணமேவுள்ளது. உங்களால் அவர்களை மதிக்கமுடியவிட்டாலும் அதை வெளிப்படுத்தி அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
நான் வாசகனாகயிருந்த காலத்திலிருந்தே ஒருவரைத் திட்டவேண்டுமானால் அவர்களை இந்த அரவாணிகளோடு ஒப்பிட்டுத் திட்டும் கீழ்புத்தி மனிதர்களைக் கண்டதுண்டு. ஐந்தறிவு ஜீவனாக அவர்களை நாம் பார்க்கையில் நமது ஆறாவது அறிவான பகுத்தறிவு நம்மைவிட்டு சென்றுவிடுகிறது இறுதியில் நாம் தான் அந்த ஐந்தறிவு ஜந்து என்பதை உணரவேண்டும். சமீபத்தில் கண்ட சில இணைய உரையாடல்கள் கண்டிக்கும் படியானது. அவற்றை ஒளிப்பட எடுக்கும் முன்னர் திருத்தப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் நஞ்சை வைத்துள்ள ஒரு உரையாடல்

[[[அந்த தளமே தற்போது நீக்கப்பட்டுள்ளது இருப்பினும் இந்த நினைவு சுவடுகள் கூகிளிலிருந்து வரும் தலைமுறையினர் பார்வைக்கு google]]]
தயவு செய்து இத்தகைய மன அழுக்குகளை வெளியே காட்டவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இப்படி பொது வெளியில் கொச்சையாக திட்டும் வாசகங்கள் ஆபாச தளங்களைவிட ஆபத்தானது